திண்ணை பத்தி எழுத முருக்ஸ் கூப்பிட்டிருக்காரு.
சரியா சொல்லனும்னா எனக்கு திண்ணை அனுபவம் அவ்ளோ இல்லை. சின்ன வயசுல திருச்சிக்கு பெரியப்பா வீட்டுக்கு போகும் போது கொஞ்சம் அனுபவம் இருக்கு.நம்ம கஸின் கூட்டமெல்லாம் காவேரிக்கு போயிட்டு குளிச்சிட்டு சாவகாசமா வந்தா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பெரியம்மாகிட்ட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க. எங்களை பார்த்த உடனே, "என்ன இவ்ளோ நேரம் தண்ணில ஜலக்கிரீடை எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு நக்கல் பார்வை கொடுப்பாங்க.
எனக்குத்தான் துடுக்குத்தனம் அதிகமாச்சே "என்ன ஆன்ட்டி நீங்க இப்படி சொல்லிட்டீங்க..நாங்க துணியெல்லாம் துவைச்சு குளிச்சிட்டு வர வேண்டாமா. அதை விடுங்க,நேத்து நீங்க குடுத்தீங்களே பருப்பு உசிலி சூப்பர் ஆன்ட்டி.அங்கிள் கலக்கறாரு"ன்னு சொன்ன உடனே அவங்க கோவமா "யாரது ரமணி பொண்ணா அப்பா போலவே கிண்டலுக்கு குறைச்சலில்லே"ன்னு குறை சொல்லிட்டே "பாரு சந்திரா,இவங்கள சம்மர்ல இவ்ளோ சோம்பேறியா விடாத,டேபிள்ஸ் எழுத வை"ன்னு தேவையில்லாத அட்வைஸ் கொடுத்திட்டு போவாங்க.பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு நாங்களும் அதே திண்ணைல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதுவோம் :(
காலேஜுக்கு போயிட்டு வர அண்ணன் நான் இன்னிக்கு அரவிந்த்சாமி வீடு வழியா வந்தேனா அவரை பார்த்தேனான்னு ரீல் சுத்தினதும்,கல்லாங்கா, பல்லாங்குழி,கேரம்,கார்ட்ஸ்,செஸ்,குரோகடைல் போன்ற முக்கிய கேம்ஸ் கத்துக்கிட்டதும்,பாட்டி சாதம் பிசைஞ்சு குடும்பத்துக்கே கைல கொடுத்ததும் அதே தின்ணைலதான் :).
சென்னைல நான் தின்ணை வச்ச வீட்ட பாத்ததே இல்லை.இப்ப எங்க வீட்ல ஒரு சின்ன மினி தின்ணை போல ஒரு அமைப்பு இருக்கும்.அதிகமா இரண்டு பேரு உக்காரலாம். அதுல உக்கார்ந்து பார்த்தா காலனிக்கு வரவங்க யாரு எல்லாம் தெரியும்னாலும்,எங்க அம்மாகிட்ட படிக்கற பிள்ளைங்க காலைல ஸ்கூல் பஸ் வரும் வரை உட்கார்ந்து படிப்பாங்கன்னாலும்,நான் பெரிய பெரிய ஃபிரண்டுஷிப்பு டெவலப் பண்ணதெல்லாம் அங்கேதான்.
ஆனாலும் அந்த மினி-தின்ணைக்கு ஒரு பெரிய பெருமை இருந்தது.It was the house of my imagination.சரி சரி கண்டுக்காதீங்க ஒரு ப்ளோல வந்துடிச்சு :P
எனக்கு இந்த கோலம் போடறதுல்ல ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த பண்டிகை நாள்ல யாரு பெரிய கோலம் புள்ளி வெச்சதோ, Free Hand Design போடறாங்கன்னு ஒரு போட்டியே நடக்கும். கோலம் போடறது ஈஸி ஆனா இந்த கலர் கொடுக்கறது இருக்கே கொஞ்சம் பொறுமை வேணும்.
நமக்குத்தான் இந்த டீமாவே வேலை செஞ்சு(??) பழக்கமாச்சே..அதுனால உடன் பிறப்பை துணைக்கு கூப்பிட்டு, இதோ பாரு இந்த பூவுக்கு ஒரு ரஸ்டிக் கலரா டார்க் ஆரஞ்சுல கொடுத்தா எப்படி இருக்கும்?"ன்னு நான் ரேன்ஞ் காட்ட.அவ கடுப்பாகி "ஹிம்ம் உனக்கு என்ன இப்போ ஆரஞ்ஞோட கொஞ்சம் ரெட் கலந்து கொடுக்கனுமா நேரா சொல்லு"ன்னு சொல்லிட்டு போயிட்டு அங்கத்தான் கலர் மிக்ஸிங்க் பண்ணுவா.இதுல எங்க அப்பா வேற "அட பிகாஸா கூட இப்படி மிக்ஸ் பண்ணமாட்டரும்மா"ன்னு அவளை இன்னும் கடுப்பேத்திட்டு போவாரு.
கோலம் போடறதோட நம்ம வேலை முடியுதா இல்லியே. நமக்குன்னு ஒரு வாண்டுக் கூட்டம் (காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) ) இருக்கே அவங்களோட எல்லார் வீட்டு கோலத்தையும் பார்த்திட்டு,ரம்யா அக்கா உங்க கோலம் தான் சூப்பருன்னு மறுநாள் டெய்ரி மில்க்குக்கோ,சொப்பு விளையாட்டுக்கோ அடி போட்டு போற குட்டீஸ வழி அனுப்பிட்டு அந்த மினி-தின்ணைல சோர்வா உட்கார்ந்து காத்தை சுவாசிக்கும் சுகமிருக்கே அது தாங்க வாழ்க்கை ஹிம்ம்ம்..
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை விட்டு ஊருக்கு கிளம்பும்போது என்னோட தங்கைய கூப்பிட்டு "பாரும்மா நான் என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கறேன்.நான் சொல்லி கொடுத்தபடி கோலத்துக்கு கலரெல்லாம் போடு சரியா"ன்னு ஸீன் போட, அவ "இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.ஏதோ ஒரு வருஷம் பெரியவளாச்சேன்னு பார்த்தா உன்னோட அலப்பரைக்கு அளவேயில்ல"ன்னு செல்லமா மிரட்டினாலும் ஒரு சோக பார்வைய அள்ளித்தெளிச்சிட்டுத்தான் வந்தேன் :(
இதுல இன்னும் இரண்டு பேர நாம கூப்பிடனுமாமே, திவ்யபிரியாவையும்,விஜயையும் இந்த சங்கிலியை தொடர அழைக்கிறேன்.