Monday, September 1, 2008

திண்ணை

திண்ணை பத்தி எழுத முருக்ஸ் கூப்பிட்டிருக்காரு.

சரியா சொல்லனும்னா எனக்கு திண்ணை அனுபவம் அவ்ளோ இல்லை. சின்ன வயசுல திருச்சிக்கு பெரியப்பா வீட்டுக்கு போகும் போது கொஞ்சம் அனுபவம் இருக்கு.நம்ம கஸின் கூட்டமெல்லாம் காவேரிக்கு போயிட்டு குளிச்சிட்டு சாவகாசமா வந்தா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பெரியம்மாகிட்ட திண்ணைல உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க. எங்களை பார்த்த உடனே, "என்ன இவ்ளோ நேரம் தண்ணில ஜலக்கிரீடை எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு நக்கல் பார்வை கொடுப்பாங்க.

எனக்குத்தான் துடுக்குத்தனம் அதிகமாச்சே "என்ன ஆன்ட்டி நீங்க இப்படி சொல்லிட்டீங்க..நாங்க துணியெல்லாம் துவைச்சு குளிச்சிட்டு வர வேண்டாமா. அதை விடுங்க,நேத்து நீங்க குடுத்தீங்களே பருப்பு உசிலி சூப்பர் ஆன்ட்டி.அங்கிள் கலக்கறாரு"ன்னு சொன்ன உடனே அவங்க கோவமா "யாரது ரமணி பொண்ணா அப்பா போலவே கிண்டலுக்கு குறைச்சலில்லே"ன்னு குறை சொல்லிட்டே "பாரு சந்திரா,இவங்கள சம்மர்ல இவ்ளோ சோம்பேறியா விடாத,டேபிள்ஸ் எழுத வை"ன்னு தேவையில்லாத அட்வைஸ் கொடுத்திட்டு போவாங்க.பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு நாங்களும் அதே திண்ணைல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதுவோம் :(

காலேஜுக்கு போயிட்டு வர அண்ணன் நான் இன்னிக்கு அரவிந்த்சாமி வீடு வழியா வந்தேனா அவரை பார்த்தேனான்னு ரீல் சுத்தினதும்,கல்லாங்கா, பல்லாங்குழி,கேரம்,கார்ட்ஸ்,செஸ்,குரோகடைல் போன்ற முக்கிய கேம்ஸ் கத்துக்கிட்டதும்,பாட்டி சாதம் பிசைஞ்சு குடும்பத்துக்கே கைல கொடுத்ததும் அதே தின்ணைலதான் :).

சென்னைல நான் தின்ணை வச்ச வீட்ட பாத்ததே இல்லை.இப்ப எங்க வீட்ல ஒரு சின்ன மினி தின்ணை போல ஒரு அமைப்பு இருக்கும்.அதிகமா இரண்டு பேரு உக்காரலாம். அதுல உக்கார்ந்து பார்த்தா காலனிக்கு வரவங்க யாரு எல்லாம் தெரியும்னாலும்,எங்க அம்மாகிட்ட படிக்கற பிள்ளைங்க காலைல ஸ்கூல் பஸ் வரும் வரை உட்கார்ந்து படிப்பாங்கன்னாலும்,நான் பெரிய பெரிய ஃபிரண்டுஷிப்பு டெவலப் பண்ணதெல்லாம் அங்கேதான்.

ஆனாலும் அந்த மினி-தின்ணைக்கு ஒரு பெரிய பெருமை இருந்தது.It was the house of my imagination.சரி சரி கண்டுக்காதீங்க ஒரு ப்ளோல வந்துடிச்சு :P

எனக்கு இந்த கோலம் போடறதுல்ல ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த பண்டிகை நாள்ல யாரு பெரிய கோலம் புள்ளி வெச்சதோ, Free Hand Design போடறாங்கன்னு ஒரு போட்டியே நடக்கும். கோலம் போடறது ஈஸி ஆனா இந்த கலர் கொடுக்கறது இருக்கே கொஞ்சம் பொறுமை வேணும்.

நமக்குத்தான் இந்த டீமாவே வேலை செஞ்சு(??) பழக்கமாச்சே..அதுனால உடன் பிறப்பை துணைக்கு கூப்பிட்டு, இதோ பாரு இந்த பூவுக்கு ஒரு ரஸ்டிக் கலரா டார்க் ஆரஞ்சுல கொடுத்தா எப்படி இருக்கும்?"ன்னு நான் ரேன்ஞ் காட்ட.அவ கடுப்பாகி "ஹிம்ம் உனக்கு என்ன இப்போ ஆரஞ்ஞோட கொஞ்சம் ரெட் கலந்து கொடுக்கனுமா நேரா சொல்லு"ன்னு சொல்லிட்டு போயிட்டு அங்கத்தான் கலர் மிக்ஸிங்க் பண்ணுவா.இதுல எங்க அப்பா வேற "அட பிகாஸா கூட இப்படி மிக்ஸ் பண்ணமாட்டரும்மா"ன்னு அவளை இன்னும் கடுப்பேத்திட்டு போவாரு.

கோலம் போடறதோட நம்ம வேலை முடியுதா இல்லியே. நமக்குன்னு ஒரு வாண்டுக் கூட்டம் (காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) ) இருக்கே அவங்களோட எல்லார் வீட்டு கோலத்தையும் பார்த்திட்டு,ரம்யா அக்கா உங்க கோலம் தான் சூப்பருன்னு மறுநாள் டெய்ரி மில்க்குக்கோ,சொப்பு விளையாட்டுக்கோ அடி போட்டு போற குட்டீஸ வழி அனுப்பிட்டு அந்த மினி-தின்ணைல சோர்வா உட்கார்ந்து காத்தை சுவாசிக்கும் சுகமிருக்கே அது தாங்க வாழ்க்கை ஹிம்ம்ம்..

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை விட்டு ஊருக்கு கிளம்பும்போது என்னோட தங்கைய கூப்பிட்டு "பாரும்மா நான் என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கறேன்.நான் சொல்லி கொடுத்தபடி கோலத்துக்கு கலரெல்லாம் போடு சரியா"ன்னு ஸீன் போட, அவ "இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.ஏதோ ஒரு வருஷம் பெரியவளாச்சேன்னு பார்த்தா உன்னோட அலப்பரைக்கு அளவேயில்ல"ன்னு செல்லமா மிரட்டினாலும் ஒரு சோக பார்வைய அள்ளித்தெளிச்சிட்டுத்தான் வந்தேன் :(

இதுல இன்னும் இரண்டு பேர நாம கூப்பிடனுமாமே, திவ்யபிரியாவையும்,விஜயையும் இந்த சங்கிலியை தொடர அழைக்கிறேன்.

53 comments:

  1. Divya said...

    நடு இராத்திரி பொருப்பா 'திண்ணை' போஸ்டா??
    என்னா ஒரு சின்சியாரிட்டி......இப்படி......இப்படிதான் இருக்கனும் ரம்யா:)))

  2. Divya said...

    \\"யாரது ரமணி பொண்ணா அப்பா போலவே கிண்டலுக்கு குறைச்சலில்லே"\\

    அப்பாகிட்ட இருந்து பொண்ணுக்கு வந்து.........இரத்ததில ஊறி போயிருக்கு கிண்டல்ஸ்:))

  3. Divya said...

    உங்க 'திண்ணை' அனுபவம் படிக்க சுவாரஸியமா இருந்தது ரம்யா:))

  4. ஆயில்யன் said...

    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) ) //

    கலக்கல் :))))

  5. ஆயில்யன் said...

    //.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.//

    காத்தாலே சுத்தி வந்தேன்!

    காத்தாலே தொத்தி வந்தேன்ன்னு

    காத்துலேயே போற மின்னலா

    நீங்க?

    ரைட்டு!

  6. Sundar சுந்தர் said...

    மலரும் நினைவுகள் அருமை.

    சிறு வயதில் எப்போதாவது போன கிராமங்களும், என் வீட்டு தோட்டத்தில், மரத்தடியில், தாயம் முதல் செஸ், மோனோபோலி வரை விளையாடிய கல் பலகையும் எனக்கு நினைவில் வருகிறது. ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.

  7. priyamanaval said...

    //சரியா சொல்லனும்னா எனக்கு திண்ணை அனுபவம் அவ்ளோ இல்லை.//

    ippadi sollitu supera thaaki irruke...

  8. gils said...

    :) thinnai exp ilai solitu ivlo intersting incidents postirukeenga..semma cute post :)

  9. ச.பிரேம்குமார் said...

    உங்கள் மினி-திண்ணை அனுபவங்கள் அருமை :)

  10. Unknown said...

    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))

  11. Divyapriya said...

    //பருப்பு உசிலி சூப்பர் ஆன்டி.அங்கிள் கலக்கறாரு//

    என்ன ரம்யா, பெண் குலத்துக்கு எதிரா நீங்களே இப்படி சொல்லலாமா?

    // பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு நாங்களும் அதே திண்னைல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதுவோம் :(//

    அச்சச்சோ…

    // ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்//

    ஹா ஹா :-D

  12. Divyapriya said...

    மொத்ததுல திண்ணை பதிவு நல்லா இருந்துது ரம்யா…திண்ணை அனுபவம் அதுகம் இல்லாமலே இவ்ளோ எழுதிட்டீங்களே! சூப்பர் :-)

  13. முகுந்தன் said...

    //பாட்டி சாதம் பிசைஞ்சு குடும்பத்துக்கே கைல கொடுத்ததும் //

    அதெல்லாம் சுகம்

    // "இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது//

    ரொம்ப கரீட்..

  14. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் //

    ஹா ஹா :))

  15. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    அனுபவங்கள் அழகு. கோர்த்தவிதமும்தான்!

  16. Anonymous said...

    திண்ணை சோக்கா இருக்குங்க.

  17. MSK / Saravana said...

    //இதோ பாரு இந்த பூவுக்கு ஒரு ரஸ்டிக் கலரா டார்க் ஆரஞ்சுல கொடுத்தா எப்படி இருக்கும்?"ன்னு நான் ரேன்ஞ் காட்ட.அவ கடுப்பாகி "ஹிம்ம் உனக்கு என்ன இப்போ ஆரஞ்ஞோட கொஞ்சம் ரெட் கலந்து கொடுக்கனுமா நேரா சொல்லு"ன்னு சொல்லிட்டு போயிட்டு அங்கத்தான் கலர் மிக்ஸிங்க் பண்ணுவா.//

    இதெல்லாம் ஓவர்..

  18. MSK / Saravana said...

    //நமக்குத்தான் இந்த டீமாவே வேலை செஞ்சு(??) பழக்கமாச்சே..//

    ஹி ஹி ஹி..

  19. MSK / Saravana said...

    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) //

    ROTFL..

  20. MSK / Saravana said...

    //"இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.ஏதோ ஒரு வருஷம் பெரியவளாச்சேன்னு//

    ஹா ஹா ஹா..

    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))

  21. சதங்கா (Sathanga) said...

    ரம்யா,

    சென்னையில் திண்ணையே வித்தியாசம் !!! அதும் அழகாக சம்பவ கோர்வைகள் அற்புதம். நானும் அந்த குட்டிப் பசங்கள்ள ஒண்ணா நின்னு, அவங்க உங்க கோலத்தை அழகுனு சொன்னது போல, நான் இந்தத் திண்ணைப் பதிவு அருமைனு சொல்றேன்.

    ஆனாலும் கில்லாடி தான் ... ஆன்டி, அப்பா, சின்ன பசங்க, தங்கை எல்லாரு கிட்டயும் அலப்பரை சூப்பரு.

  22. சதங்கா (Sathanga) said...

    சொல்ல மறந்திட்டேனே,

    //'பிங்-பாங்க்' பால் போல திரும்பி இங்க தான வரணும்//

    வாவ், உங்க கதை போல பதிவிலும், அருமை. அருமை.

  23. Kavinaya said...

    //அனுபவங்கள் அழகு. கோர்த்தவிதமும்தான்!//

    ஒரு பெரீய்ய்ய ரிப்ப்பீட்டு, தங்கச்சீ :) ஜூப்பரா எழுதறீங்க :)

  24. Anonymous said...

    ஆஹா ஊர்ல எல்லார் வீட்டுலயும் திண்ணை உண்டு. அதுல நிறைய அரட்டையப் போட்டிருக்கோம் :)) நினைவுகளை கிளப்பி விட்டுட்டீங்க...அருமையா எழுதியிருக்கீங்க

  25. Sridhar V said...

    நல்லாத்தேன் கொசுவர்த்தி சுத்தறீங்க :-))

    சென்னைல முன்னாடி சிந்தாதிரிபேட்டை பக்கமெல்லாம் திண்ணை வச்ச வீடு பாத்திருக்கேன். பெரும்பாலும் ஸ்டோர்ஸ் என்று சொல்லப்படும் ஒண்டுகுடித்தனத்துல திண்ணை இருக்கும்.

    கலக்குங்க தொடர்ந்து.

  26. Vijay said...

    எழுதிடுவோம். எங்க தாத்தா வூட்டுல அடிச்ச லூட்டியெல்லாம் நிறிய இருக்குல்லா :-)

  27. Ramya Ramani said...

    \\Divya said...
    நடு இராத்திரி பொருப்பா 'திண்ணை' போஸ்டா??
    என்னா ஒரு சின்சியாரிட்டி......இப்படி......இப்படிதான் இருக்கனும் ரம்யா:)))
    \\
    Dankees :))

    \\அப்பாகிட்ட இருந்து பொண்ணுக்கு வந்து.........இரத்ததில ஊறி போயிருக்கு கிண்டல்ஸ்:))
    \\

    Exactly.This is called Heredity :P

    \\Divya said...
    உங்க 'திண்ணை' அனுபவம் படிக்க சுவாரஸியமா இருந்தது ரம்யா:))
    \\

    மிக்க நன்றி :))

    \\ஆயில்யன் said...
    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;) ) //

    கலக்கல் :))))
    \\

    மிக்க நன்றி :))

    \\ஆயில்யன் said...
    //.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.//

    காத்தாலே சுத்தி வந்தேன்!

    காத்தாலே தொத்தி வந்தேன்ன்னு

    காத்துலேயே போற மின்னலா

    நீங்க?

    ரைட்டு!
    \\

    அடடே பாட்டே போட்டுடீங்களா..சூப்பரு..

    \\Sundar said...
    மலரும் நினைவுகள் அருமை.

    சிறு வயதில் எப்போதாவது போன கிராமங்களும், என் வீட்டு தோட்டத்தில், மரத்தடியில், தாயம் முதல் செஸ், மோனோபோலி வரை விளையாடிய கல் பலகையும் எனக்கு நினைவில் வருகிறது. ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.
    \\

    ஆமாங்க அது எப்பவுமே
    கனா(வு)க்காலம் தான் :)

  28. Ramya Ramani said...

    \\priyamanaval said...
    //சரியா சொல்லனும்னா எனக்கு திண்ணை அனுபவம் அவ்ளோ இல்லை.//

    ippadi sollitu supera thaaki irruke...
    \\

    நன்றி Priya:))

    \\gils said...
    :) thinnai exp ilai solitu ivlo intersting incidents postirukeenga..semma cute post :)
    \\
    நன்றி Gils :))

    \\பிரேம்குமார் said...
    உங்கள் மினி-திண்ணை அனுபவங்கள் அருமை :)
    \\

    நன்றி பிரேம்குமார் முதல் வருகைக்கும் + கருத்திற்க்கும் :))

    \\Sri said...
    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))
    \\

    அச்சச்சோ நன்றி Sri :P

    \\Divyapriya said...
    //பருப்பு உசிலி சூப்பர் ஆன்டி.அங்கிள் கலக்கறாரு//

    என்ன ரம்யா, பெண் குலத்துக்கு எதிரா நீங்களே இப்படி சொல்லலாமா?
    \\

    சும்மாப்பா அந்த மாமி ரொம்ப பேசினாங்க..அதான்..

    // பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு நாங்களும் அதே திண்னைல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதுவோம் :(//

    அச்சச்சோ…

    \\

    :(((

    // ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்//

    ஹா ஹா :-D
    \\

    ஹிம்ம் சிரிப்புத்தான்..நல்லா இருங்கப்பா ..

  29. Ramya Ramani said...

    \\Divyapriya said...
    மொத்ததுல திண்ணை பதிவு நல்லா இருந்துது ரம்யா…திண்ணை அனுபவம் அதுகம் இல்லாமலே இவ்ளோ எழுதிட்டீங்களே! சூப்பர் :-)
    \\

    நன்றி மேடம் :)

    \\முகுந்தன் said...
    //பாட்டி சாதம் பிசைஞ்சு குடும்பத்துக்கே கைல கொடுத்ததும் //

    அதெல்லாம் சுகம்

    // "இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது//

    ரொம்ப கரீட்..
    \\

    நன்றி முகுந்தன் :)

    \\sathish said...
    அனுபவங்கள் அழகு. கோர்த்தவிதமும்தான்!\\

    நன்றி sathish :)

    \\ஸ்ரீ said...
    திண்ணை சோக்கா இருக்குங்க.\\

    நன்றி ஸ்ரீ

    \\Saravana Kumar MSK said...
    //"இதோ பாரு நீ இப்ப ஒரு பிங்-பாங் பால் மாதிரி திரும்ப இங்க தான் வரனும்.ஒவர் ஸீன் உடம்புக்கு ஆகாது கெளம்பு காத்து வரட்டும்.ஏதோ ஒரு வருஷம் பெரியவளாச்சேன்னு//

    ஹா ஹா ஹா..

    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))
    \\

    ரசிச்சு சொன்னதுக்கு நன்றி சரவணகுமார் :)

  30. Ramya Ramani said...

    \\சதங்கா (Sathanga) said...
    ரம்யா,

    சென்னையில் திண்ணையே வித்தியாசம் !!! அதும் அழகாக சம்பவ கோர்வைகள் அற்புதம். நானும் அந்த குட்டிப் பசங்கள்ள ஒண்ணா நின்னு, அவங்க உங்க கோலத்தை அழகுனு சொன்னது போல, நான் இந்தத் திண்ணைப் பதிவு அருமைனு சொல்றேன்.

    ஆனாலும் கில்லாடி தான் ... ஆன்டி, அப்பா, சின்ன பசங்க, தங்கை எல்லாரு கிட்டயும் அலப்பரை சூப்பரு.
    \\

    நன்றி சதங்கா அண்ணே :))

    \\கவிநயா said...
    //அனுபவங்கள் அழகு. கோர்த்தவிதமும்தான்!//

    ஒரு பெரீய்ய்ய ரிப்ப்பீட்டு, தங்கச்சீ :) ஜூப்பரா எழுதறீங்க :)
    \\

    நன்றி கவிநயா அக்கா :)

  31. Ramya Ramani said...

    \\Dubukku said...
    ஆஹா ஊர்ல எல்லார் வீட்டுலயும் திண்ணை உண்டு. அதுல நிறைய அரட்டையப் போட்டிருக்கோம் :)) நினைவுகளை கிளப்பி விட்டுட்டீங்க...அருமையா எழுதியிருக்கீங்க
    \\

    அண்ணே வருக வருக.. அல்மா மேட்டருக்கு அப்புறம் இதை பதிவிடுங்க..உங்க Stylela கேக்க ஆவல் :)

    \\Sridhar Narayanan said...
    நல்லாத்தேன் கொசுவர்த்தி சுத்தறீங்க :-))

    சென்னைல முன்னாடி சிந்தாதிரிபேட்டை பக்கமெல்லாம் திண்ணை வச்ச வீடு பாத்திருக்கேன். பெரும்பாலும் ஸ்டோர்ஸ் என்று சொல்லப்படும் ஒண்டுகுடித்தனத்துல திண்ணை இருக்கும்.

    கலக்குங்க தொடர்ந்து.
    \\

    அட முதல் வருகைக்கு நன்றி Sridhar Narayanan Sir:) வட சென்னை பக்கம் எனக்கு அதிகம் போய் பழக்கமில்லே.. போயி பாத்திர வேண்டியதுதான் :)

    \\விஜய் said...
    எழுதிடுவோம். எங்க தாத்தா வூட்டுல அடிச்ச லூட்டியெல்லாம் நிறிய இருக்குல்லா :-)
    \\

    கமான் விஜய் உங்க திருநல்வேலி நக்கலோட இயல்பா ஒரு பதிவிற்காக் வெய்டிங்கஸ் :))

  32. ராமலக்ஷ்மி said...

    அருமையான மலரும் நினைவுகள். சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன். இத்திண்ணையை பாலபாரதி அவர்கள் சேகரித்து வரும் திண்ணை நினைவுகளில் பதிந்து விட்டீர்களா? இங்கு சென்று பாருங்கள்:http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/

    நேரம் இருக்கும் போது எனது திண்ணை நினைவுகளிலும் திளைத்துச் செல்லுங்கள். ஒவ்வொருவரது நினைவுகளும் அடுத்தவர் நினைவுகளைத் தட்டி எழுப்பிய படியே சென்ற வண்ணமாக இருக்கிறது.
    http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

  33. ராமலக்ஷ்மி said...

    நான் கொடுத்த சுட்டியில் சென்று பின்னூட்டத்தில் உங்கள் பதிவின் உரலைக் கொடுத்தால் பாலபாரதி இங்கு

    http://blog.balabharathi.net/திண்ணை/

    அதை இணைத்திடுவார்.

  34. Ramya Ramani said...

    ராம்லஷ்மி மேடம் நன்றி சமர்பிச்சிட்டேன் :)

    உங்க திண்னை பதிவு மிக மிக அருமை..அப்படியே ஒரு 30-40 வருஷம் பின்னோக்கி பயணிச்சா மாதிரி இருக்குங்க..

  35. Hariks said...

    திண்ணை அனுப‌வ‌ம் சூப்ப‌ரு. வீடு க‌ட்டினா இனிமே திண்ணையோட‌ தான் க‌ட்ட‌னும் :)

    அட்லீஸ்ட் கால‌னிக்கு யாரு யாரு வ‌ராங்க‌னு பார்க்க‌லாம்ல‌ ;)

  36. Hariks said...

    //ரம்யா அக்கா உங்க கோலம் தான் சூப்பருன்னு மறுநாள் டெய்ரி மில்க்குக்கோ,சொப்பு விளையாட்டுக்கோ அடி போட்டு போற குட்டீஸ//

    அச்ச‌ச்சோ! எங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இந்த‌ அள‌வுக்கு கோல‌ம் யாரும் போட‌ல‌யே :(

    நானும் என் த‌ம்பியும் தான் ச‌ண்டை போட்டுகிட்டு க‌ல‌ர் குடுப்போம் எங்க‌ அம்மா போட்ட‌ கோல‌த்துக்கு ;)

  37. Karthik said...

    சூப்பரா எழுதியிருக்கீங்க...

    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;)

    :)))

  38. Vijay said...

    அம்மணி,
    கொடுத்த வேலையை ஒழுங்கா செஞ்சுட்டேனானான்னு கொஞ்சம் வந்து பாருங்க.

    விஜய்

  39. Ramya Ramani said...

    \\Murugs said...
    //ரம்யா அக்கா உங்க கோலம் தான் சூப்பருன்னு மறுநாள் டெய்ரி மில்க்குக்கோ,சொப்பு விளையாட்டுக்கோ அடி போட்டு போற குட்டீஸ//

    அச்ச‌ச்சோ! எங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இந்த‌ அள‌வுக்கு கோல‌ம் யாரும் போட‌ல‌யே :(

    நானும் என் த‌ம்பியும் தான் ச‌ண்டை போட்டுகிட்டு க‌ல‌ர் குடுப்போம் எங்க‌ அம்மா போட்ட‌ கோல‌த்துக்கு ;)
    \\

    நன்றி முருக்ஸ் ..ஆமா வம்பு வளக்கவாவது தேவையாச்சே திண்ணை :)

    அட நீங்களே கலர் கொடுப்பீங்களா ஜூப்பரு.

  40. Ramya Ramani said...

    \\Karthik said...
    சூப்பரா எழுதியிருக்கீங்க...

    //காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லே டெய்ரி மில்க்குக்காக தானா சேர்ந்த கூட்டம் ;)

    :)))
    \\

    நன்றி கார்த்திக் :)

    \\ விஜய் said...
    அம்மணி,
    கொடுத்த வேலையை ஒழுங்கா செஞ்சுட்டேனானான்னு கொஞ்சம் வந்து பாருங்க.

    விஜய்
    \\

    விஜய் படிச்சு கமென்டியாச்சு :)As usual u rock :)

  41. ஜியா said...

    :)) Nice memories...

  42. Ramya Ramani said...

    Thanks Geeya :)

  43. Unknown said...

    //\\Sri said...
    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))
    \\

    அச்சச்சோ நன்றி Sri :P//

    ரம்யா Grrrrrrrrrrrr..!! ;))

  44. Ramya Ramani said...

    \\Sri said...
    //\\Sri said...
    நல்லாருக்கு ரம்யா உங்க திண்ணை அனுபவம்..!! :)))))
    \\

    அச்சச்சோ நன்றி Sri :P//

    ரம்யா Grrrrrrrrrrrr..!! ;))
    \\

    :))

  45. Hariks said...

    என்ன‌ங்க‌? ரொம்ப‌ நாளா போஸ்ட் எதுவும் இல்லை? ஏதாவ‌து க‌தை எழுத‌ ஆர‌ம்பிங்க‌ :)

  46. Srikitchen said...

    first time to ur blog and it is too good! visit my blog while u find time!

  47. Mathu said...

    wow really nice!! உங்களுக்காவது திண்ணை அனுபவம் அவ்ளவா இல்லாட்டியும் ஏதோ ஞாபகம் வார அளவுக்கு இருக்கே. எனக்கு அதுவும் இல்லை :(((( missed these though not sure if i would have still had something like this if I was there! Loved your memories on திண்ணை and feeling a bit jealous ;)

  48. KC! said...

    idhu enna edhavadhu tag matter-a?? enru thaniyum indha tag mogam ;)

  49. anantha-krishnan said...

    போஸ்டை படித்ததும் எனக்கும் அந்த சம்மர் திண்ணை நியாபகங்கள் வந்தன.
    பிளாக் லோகத்தை நீண்டநாள் கழித்து எட்டிப் பார்க்கும் நான்
    நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்
    www.jega-pethal.blogspot.com

  50. Ramya Ramani said...

    முருக்ஸ் கதை தானே போட்டிருவோம் ;)

    Thanks Srilekha will surely visit ur blog :)

    Thanks Mathu

    Ama Usha idhu tag dhan :)

    Thanks Anantha Krishnan Will read ur blog sometime :)

  51. யாரோ said...

    யக்கோவ்... வலைக்குள் மழை பெய்யுதாம்லே ....
    பார்த்தீங்களா?
    valaikkulmazhai.wordpress.com
    - கார்த்தி

  52. Sateesh said...

    :)

  53. இராவணன் said...

    திண்ணை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகத்தை வெளிப்படுத்தும் போல.

    இந்த முகம் அழகு.