Wednesday, February 25, 2009

திரை

வெண்பஞ்சு மேகங்களுக்கு நடுவே, நாண்ப் பூட்டிய வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல,சீரிப்பாயும் விமானத்தை வெறித்து நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் தாயகம் திரும்பி மாதங்கள் இரண்டு உருண்டோடிவிட்டது.

காட்ஃபாதர் கதையில் வருவது போல நான் தாயகம் திரும்பியது ஷுவில் குத்தும் சிறு கல் போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.ஏன் ?? இந்த சுய பரிசோதனை இவ்வளவு கடினமாக இருந்திருக்கத்தேவையில்லை ! வளங்களும் வாய்ப்புக்களும் குவித்த அந்நியநாட்டைவிட்டு நான் தாயகம் திரும்புகையில் கேட்க நேரிட்ட கருத்துக்கள் பெரும்பாலும் என் பயணத்தினை மறுபரிசீலனை செய்ய உந்தின.

"கண்ணா, உனக்கு ஏன்டா இப்படி போகுது புத்தி, உன்னோட அறிவுக்கு இங்க என்ன மதிப்பு. 5 வருஷத்துல முடிக்க வேண்டிய ரிசர்ச்டா நீ 4 1/2 வருஷத்துல தீஸிஸ் பேப்பரோட முடிச்சிட்டேன்னு சந்தோஷப்பட்டோமேடா, "பியூட்டிஃபுல் மைண்ட்" ஹீரோ போல மாறிடுவேன்னு பயந்தோம் இப்படி முதலுக்கே மோசம் பண்றியே!"

"கண்ணா ஐ டிட் நாட் எஃஸ்பெக்ட் திஸ் பிரம் யூ.நோயிங் யூ சின்ஸ் 7 ப்ளஸ் யியர்ஸ் ஐ பிலீவ் யூ கேன் டூ மச் மோர் வித் டைம் அண்டு ஆப்பர்சூனிடீஸ்.இஃப் யூ ஆர் கெலவர் எனஃப் யூ கேன் ஸ்டே ஹியர் அண்ட் அச்சீவ் மோர்.டோன்ட் லீவ் திஸ் லேன்ட் அஃப் ஆப்பர்சூனிடீஸ்”. இவற்றைக்கேட்ட என்னுள் எத்தனை ஆயிரம் போராட்டங்கள்!!

M.S முடிச்சிட்டு வந்திடறேன்-மா என்று பெட்டி தூக்கி கிளம்பிய நான், M.S முடித்து, PhD வரை சுதந்திரமாக செய்ய உந்திய இந்நாட்டில் கிடைத்த வாய்ப்புக்களையும், அவற்றால் வருங்காலத்தில் எனக்கு காத்திருந்த வளமான செல்வம் கொழிக்கும் வேலையையும் விட்டு தாய்நாடு திரும்ப ஏன் எண்ணினேன்??

"கண்ணா நீ எங்க கண்லேயே நிக்கறடா, எங்க கடைசி காலத்தில எங்களோட வந்து இருடாப்பா, எங்களுக்கு என்னமோ அந்த ஊரு சரிபடலே. ஏதோ காலைல ஒரு ஹிண்டு வோ தினமலரோ படிச்சோமா உன் மூஞ்சிய பார்த்து காலத்த கழிசோம்மான்னு இருப்போம்" என்ற அம்மாவின் கண்ணீரை காரணமாக்க முடியாது. நான் வெளிநாடு சென்றதிலிருந்தே கேட்கும் முகாரி தானே!
"நீ எது சரின்னு நினைக்கறியோ அதையே செய் கண்ணா. யாரு என்ன சொன்னாலும் கடைசி முடிவு உன்னதாத்தான் இருக்கனும்" என்று சிறு வயது முதலே கற்ப்பித்த தந்தையின் வார்த்தைகளை நினையாமல் வந்துவிட்டேனோ ??

"கண்ணா சும்மா மனச போட்டு குழப்பிக்காதே வரனும்ன்னு உனக்கு தோணிருக்கு வந்துட்டே, உன்னோட ஆசை படியே IISC, Bangalore – ல வேலையும் செய்யறே வை வொர்ரி பீ ஹாப்பி மேன்" என்று நண்பன் சொல்வதும் சரிதானோ?? மீண்டும் தொடக்க நிலைக்கே வந்துவிட்டேன் !

என்னைப்பாத்த சந்தோஷத்திலோ, வயோதிகத்தினாலோ சென்ற வார இருதியில் என் மடியிலேயே இறைவனடிச்சேர்ந்த தந்தையின் இழப்பால் மனம் வெகுவாகச்சோர்ந்து இன்று இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

காலடி ஓசைக்கேட்டு திரும்பினால் என் தாயார் மாடிக்கு வந்தாள்.

"வாம்மா கூப்பிட்டிருக்கக்கூடாது, நீ மாடியெல்லாம் சும்மா ஏற கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கல்ல"

"போடா உக்கார்ந்தே இருக்காதேன்னும் தான் சொல்றாங்க. உன்ன காணமேன்னு தேடினேன் பார்த்தா, இங்க இருக்க சரி கொஞ்ச நேரம் பேசிட்டிருப்போம்னு வந்தேன். என்னபா பலமான யோசனை?" என்றாள் என் தலையை கோதிக்கொண்டே, எப்போதும் என் சஞ்சலங்களை தீர்க்கும் வாஞ்சையான செயல் !

"ஒன்னும் இல்லம்மா சும்மாத்தான்" என்றேன் மனதினை உரைக்க முடியாமல்.

"ஹிம் கண்ணா உன்னை என்ன படுத்துதுன்னு எனக்கும் புரியுது. நீ வந்த நாள்லேர்ந்தே பார்த்திட்டு தானே இருக்கேன்.வசதியான வாழ்க்கைய விட்டுட்டோமோன்னு குழம்பறே இல்லியா. எனக்குத்தெரிஞ்சு நீ இப்பவும் உன்னோட கனவைத்தானே நிறைவேத்தறே, இன்னோருத்தருக்கு கல்வி சொல்லிக்கொடுக்கறது எவ்வளவு மேலானது இல்லியா?"

"அம்மா ப்ளீஸ் நான் ஏன் வந்தேன்னு ரிக்ரட் பண்ணலே ஆனா எது திரும்பி வர இன்ப்ளுயன்ஸ் பண்ணிச்சுன்னு தான் யோசிக்கறேன். ஐ வில் பீ பைன்."

"நல்லது கண்ணா, 28 வருஷமா உன்னை பாக்குறவ சொல்றேன். நீ என்னிக்குமே மத்தவங்க சொல்றத கேப்பேன்னாலும் முடிவு யோசிச்சு என்ன சரின்னு நினைக்கறியோ அதத்தான் செய்வே. உன் மனசுல இங்க வந்து சொல்லிக்கொடுக்கனும்ன்ற எண்ணம் எப்பவுமே வேரூன்றி இருந்ததுன்னு எனக்கு தெரியும். அதை இப்போ நிறைவேற்றி இருக்க. நானோ அப்பாவோ உன்ன எந்த விதத்திலேயும் கம்பல் பண்ணக்கூடாதுன்கிறதுல தெளிவா இருந்தோம்."

"அம்மா நீ இவ்ளோ ஸ்ட்ரைன் பண்ணிக்காதே. நானே இப்படித்தான் இருக்கனும்னு யோசிச்சிட்டிருந்தேன்."

"ஹிம் நீ கவனிச்சியான்னு தெரியலப்பா ஆனா உங்க அப்பா உடம்பு முடியாம இருந்தப்போ, நீ பக்கத்துல இருகேன்னு தெரிஞ்சதும் அவர் முகத்துல ஒரு நிம்மதி வந்தது.எங்களுக்கு இந்த வயசுல என்னப்பா வேணும் பணமா இல்ல என் பசங்க எனக்கு இருக்காங்கன்னு ஒரு திருப்தி. அதுவே ஒரு திடம் தெரியுமா?"

அம்மா பேசப்பேச திரை விலகினார்ப்போல் ஒரு தெளிவு. என் முடிவுகளைக்கொண்டே என்றும் நான் செயல் பட்டிருக்கிறேன். இப்போதைய என் வேலையும் என் தேர்வே. என்றும் ஒட்டாமல் இருந்த மேலை நாட்டில் என் தகுதிகளை வளர்த்துக்கொண்டு என் வழி வந்துவிட்டேன். யெஸ் ஐ டிட் வாட் ஐ ஃபெல்ட் வாஸ் ரைட் அன்ட் இட் வாஸ் ரைட்.காட் பிளஸ்!

புரிதலின் பலனாக அம்மாவைப்பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தேன்.

மென்மையாக மயிலிறகைப்போல மீண்டும் ஓர் தலை வருடல். ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடு !

18 comments:

  1. priyamanaval said...

    aaha Ramya... nalla kadhai... nalla ezhudhi iruke... :)

  2. ராமலக்ஷ்மி said...

    அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் ரம்யா. விலகிய திரைக்குப் பின் தெளிந்த வானத்தைப் பார்த்து விட்டான் கதையின் நாயகன். திரையை விலக்கத் தேவையானது நமது கைகள்தான் என்பது தெரியாமல் திகைத்தே நிற்பவர் எத்தனை பேர்?

  3. Kavinaya said...

    வழக்கமான மனப் போராட்டங்களை இயல்பாகச் சித்தரித்திருக்கிறீர்கள் ரம்யா. நல்ல எழுத்து.

  4. Vijay said...

    Welcome Back Ramya. U are back with a bang!!!

  5. Vijay said...

    ரொம்ப அருமையா இருக்கு. நிறைய பேருக்கு தாய் நாடுக்கு திரும்பி வரும் மனம் இல்லை. வந்தாலும், இந்த இண்டியா ஏன் இப்படி இருக்கு, அப்படி இருக்குன்னு குறை சொல்வாங்க.

    Good Thought provoking story.

    Expecting more from you and that too very frequently, like you were some months back :-)

  6. Divyapriya said...

    //
    மென்மையாக மயிலிறகைப்போல மீண்டும் ஓர் தலை வருடல். ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடு ! //

    அழகான வரிகள்...

    சூப்பர் கதை ரம்யா...தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு :)

  7. Cable சங்கர் said...

    அருமையாயான கதை ரம்யா..

  8. Divya said...

    மிகவும் அருமையா எழுதியிருக்கிறீங்க ரம்யா:))

    \\எங்களுக்கு இந்த வயசுல என்னப்பா வேணும் பணமா இல்ல என் பசங்க எனக்கு இருக்காங்கன்னு ஒரு திருப்தி. அதுவே ஒரு திடம் தெரியுமா?" \\

    100% உண்மை.

    மிக இயல்பான எழுத்துநடை.....சூப்பர், வாழ்த்துக்கள் ரம்யா!

  9. ஜியா said...

    அருமையா எழுதிருக்கீங்க ரம்யா... எழுத்து நடையும், வார்த்தை ப்ரயோகமும் சூப்பர்... செம முன்னேற்றம்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க... கலக்குங்க...

  10. Ramya Ramani said...

    @Priya,

    Thanks :)

    ராமலஷ்மி மேடம் கருத்துக்களுக்கு நன்றி :)

    கவிநயா அக்கா ! நன்றி :)

    Vijay,

    Thanks a Lot for your encouragement

    DP

    நன்றி :) தலைப்பு எனக்கும் பிடிச்சிருந்தது

    Cable Shankar,

    நன்றி

    Divya Master

    மிக்க நன்றி :))


    ஜி

    மிக்க நன்றி :))

  11. gils said...

    title semma apt..englisha englisha postunga..tamizha tamizha postunga..ungalukum easy..engalukum ec :)) nalla kathai..rombbaaaa realistica iruku..for a moment thot it was ur story

  12. Karthik said...

    Nice..!
    :))

  13. முகுந்தன் said...

    Ramya,

    I have been travelling frequently and everytime i move out of home, I dont feel like staying anywhere. I always want to be near my parents and I used to ask my wife also how she was able to move away from parents after marriage.
    After reading this i couldnt control myself and want to come back immediately.

  14. Sundar சுந்தர் said...

    :) sweet.

  15. Ramya Ramani said...

    @Gils

    நன்றி :)) This is a general story, Nothing personal. Actually this is happening in a foreigh country where u get to see people from different cultures so to show that had to use english !Will try to avoid english words

    @Karthik

    மிக்க நன்றி :))

    @Mukundan

    மிக்க நன்றி :))But sorry If this had made you feel homesick :(
    Though being away from home is difficult, you are forced to do certain sacrifices for betterment in life!

    @Sundar
    மிக்க நன்றி :))

  16. JSTHEONE said...

    nalla story nalla flow... azhaganaa nerudalai nerthiyaaga viratti adidhu vitteergal kadhaiyil vaazhthukkal....


    keep going

  17. Ramya Ramani said...

    @JSTHEONE
    நன்றி

  18. Priyadharsan A said...

    Nice story... as gils said englisha tamila padika konjam kastama poiduchu...
    amma gyabagam vanthidichi...
    ve to call my mom...