Tuesday, April 14, 2009

கோலங்கள்

என்னங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க ?? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

என்னடா ஏதோ சீரியல் தலைப்பை போட்டு மொக்கையான்னு நினைக்காதீங்க . இது ஒரு ‘Character Analysis” போன்ற முயற்சி. (ஹை என்ன ரொம்ப நாளா காணோம்னு கேட்டா இப்படி தொடருக்காக “Character Observation”-ன்னு சமாளிக்கலாம் போல ;) )

நம்மை சுத்தி நிறைய மக்கள் இருக்காங்க ஒவ்வொருத்தரும் ஒரு விதம். கோலங்கள் பல விதம் போல மனிதர்களும்,பல விதமான குணங்களை கொண்டவர்கள் தான் இல்லியா. ஒரு சில சம்பங்கள் அதில சில விதமான மனிதர்களின் நினைவை நமக்குள்ளே எப்பவுமே தங்க வைக்கும்.

சிலர் ஒவ்வொரு இன்ஸ்டன்ஸ– ல பிஹேவ் பண்ணது நம்மை மிக கவர்ந்திருக்கும். அப்படி நம்மை கவர்ந்த தருணங்களை மற்றவருடனும் பகிர்ந்துப்போம்.அப்படி நான் ரசிக்கப்பெற்ற தருணங்களை உங்களோட பகிர்ந்துக்க ஆவல் !

எங்க காலேஜ்ல படிக்கும்போது நடந்த சுவையான சம்பவம். முதல் நாள் காலேஜ் எல்லாரும் ஒரு வித டென்ஷன் கலந்த எதிப்பார்ப்போட கிலாஸ்-ல ஒக்காந்திருந்தோம். எப்பக்கத்திலே ஒரு ஆந்திரா பொண்ணு எல்லாரும் தமிழ்ல பேசறத பார்த்து மிரண்டு போயிருந்தா. சரி நாமளும் ஒரு மொழி கத்துகிட்ட மாதிரி இருக்கும்ன்னு, அவளுக்கு டிரான்ஸ்லேட்டர் வேலைய ஏத்துக்கிட்டேன். அப்பத்தான் நாம பேசும் போது சார்/மேம் கேட்டா கூட அவளுக்கு புரியவெக்கறேன்ன்னு சொல்லி தப்பிக்கலாமே :P .

இப்படி நானும் அவளும் பேசிட்டிருக்கும் போது கெமிஸ்டிரி கிலாஸ் வந்தது. எங்க சார் கிலாசுக்கு வந்தவுடனே,

சார்: "பாருங்க நான் ரொம்ப ஸ்டிரிக்ட் நான் கிலாஸ் எடுக்கும் போது, யாராவது பேசினா பிடிக்காது.பனிஷ்மென்ட் எல்லாம் சிவியரா இருக்கும்" .அப்படி இப்படின்னு மிரட்டிட்டு ஏதோ போர்டல ஒரு துண்டு பேப்பர பார்த்து எழுதிட்டு இருந்தாரு.

நான் உடனே எப்பக்கத்துல இருந்தவளுக்கு "Don’t talk else he will punish” எழுதிட்டு நோட்ஸ் எடுக்கறாமாதிரி ஒக்கார்ந்துகிட்டேன்.

அப்போ திடீர்ன்னு டமால்ன்னு ஒரு சத்தம். பார்த்தா நம்ம ஃபிரண்டு பாக்ஸை கீழ போட்டிட்டாங்க! சார் கைல இருந்த பேப்பர் பறந்து அவருக்கு கண்டினியூட்டி மிஸ் ஆகிடுச்சு. டென்ஷனா அவரு போர்டு பக்கம் திரும்பி நின்னுகிட்டே ,

சார்: போடு போடு என் தலை மேல போடுன்னாரு.

நாங்க எல்லாம் பயந்துப்போய் முழிச்சுட்டிருந்தப்போ, என் பக்கத்துல இருந்த பொண்ணு சடார்னு,

ஆ.பொ: "Sir I cannot understand Tamil, can you please explain in English” ன்னா.

சார்: [???!!!]

ஒரு நிமிஷம் அமைதியா இருந்த் கிலாஸ் அலை அடிச்ச மாதிரி சார் உள்பட சிரிச்சிதுன்னு நான் சொல்லத்தேவையில்லை :)

நாங்க கடைசி வருஷம் படிக்கும் போது, எங்களுக்கு ஒரு கிலாஸ் எங்க HOD எடுப்பாங்க. அவங்க வெளிப்படையா ஸ்டிரிக்ட் மாதிரி சொல்லாட்டியும், அவங்க கிலாஸ் எடுத்த முறையும் அவங்க அப்ரோச்சும் யாருமே அவங்க கிளாஸை கட் பண்ண மாட்டாங்க. அவங்களுது எப்போதும் முதல் வகுப்பாத்தான் இருக்கும். ஒரு நாள் அவங்க படு சுவாரஸிமா நெட்வர்க்ஸ் பத்தி சொல்லிட்டுருந்தாங்க.அப்போ திடீர்னு ஒரு குறட்டை சத்தம் . பார்த்தா ஒரு பையன் கடைசி பென்சுல தூங்கிட்டிருந்தான். எங்க மேடம் கொஞ்சம் டென்ஷன் ஆனாலும் அவன எழுப்பி

"ஹெல்லோ எங்க இருக்க நீ ஹிம்ம்ம் "ன்னு கேட்டாங்க. அவனோ மெதுவா எழுந்து

"யெஸ் மேம் நான் தாம்பரத்துலத்தான் இருக்கேன்" ன்னான். ஒரு நிமிஷம் அவங்களுக்கு , இவன் நக்கல் அடிக்கறானன்னே சந்தேகம் . ஆனா அவன் பதில நாங்க கேட்டு சிரிச்சதப்பார்த்திட்டு, அவங்களும் சிரிச்சிட்டு,அவன ஒக்கார சொல்லிட்டாங்க .

இன்னிக்கும் நாங்க காலேஜ் பத்தி பேசும் போது மறக்காம நினைச்சு சிரிக்கும் சம்பவங்கள் இது இரண்டும். இப்படி பல சுவாரஸ்மான சம்பவங்களின் தொகுப்பாவே இத்தொடர் அமையும்.

21 comments:

  1. நாகை சிவா said...

    :)))

    தொடருங்க :)

  2. ராமலக்ஷ்மி said...

    :))))))))!

    தொடருங்கள்.

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரம்யா.

  3. Divya said...

    அட! கல்லூரி நாட்களின் 'மலரும் நினைவு'களா?.......சூப்பர்:))

    தொடருங்க ரம்யா:))

  4. Sundar சுந்தர் said...

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னடா நம்ம தமிழ் புத்தாண்டு தினத்தை அரசியல்வாதிகள் மாத்திட்டங்கலான்னு யோசிச்ச சமயத்துல நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க!

  5. Vijay said...

    அப்பா. நீங்க தான் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கீங்க.

    இதைப் படிச்சதும் நானும் விழுந்து விழுந்து சிரித்தேன் :-)

    காலேஜ் தினங்களே கொண்டாட்டம் தினங்கள் தான்’ல?

  6. Divyapriya said...

    நல்லா இருக்கு ரம்யா :) ரெண்டாவது இன்ஸிடன்ட் சூப்பர் :) தொடருங்க...

  7. ஆயில்யன் said...

    அட...! காலேஜ் நிகழ்வுகளா சூப்பருதான்!

    ம்ம் தொடருங்க..!

    உங்க ஞாபகங்கள் எங்களின் கல்லூரி ஞாபகங்களையும் கிளறி எடுக்கட்டும் :))

  8. Ramya Ramani said...

    நன்றி நாகை சிவா. தொடர்ந்து படிக்கவும் !

    நன்றி இராமலஷ்மி மேடம்.

    நன்றி திவ்யா இது காலேஜ் மலரும் நினைவுகள் மட்டுமில்லை வேறு சில சம்பவங்களும் குறிப்பிடப்படும்.

    நன்றி Sundar

    நன்றி விஜய்

    நன்றி DP

    நன்றி ஆயில்யன்

  9. Unknown said...

    அக்கா சூப்பர்... நல்லா சிரிச்சேன் :)))

  10. Unknown said...

    சாரி ரம்யா... போன கமெண்ட்ல உன்ன அக்கான்னு சொன்னதுக்கு.. :(( பாட்டின்னு மாத்தி படிச்சிக்கோ.. ;))))))))))))

  11. sarathy said...

    //இன்னிக்கும் நாங்க காலேஜ் பத்தி பேசும் போது மறக்காம நினைச்சு சிரிக்கும் சம்பவங்கள் இது இரண்டும்//

    ரம்யா அக்கா... இரண்டோட நிறுத்திட்டீங்க.. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்....

  12. gils said...

    unmaiya othukunga..korata uta paiayar neenga thaana.. :))

  13. Ramya Ramani said...

    ஸ்ரீமதி

    நன்றி பாட்டி :P

    சாரதி அண்ணே.. தொடர்ந்து போடறோம் படிச்சிட்டு சொல்லுங்க :)

    @Gils
    Naanga ellam mattikkama thoonguvomla ;)

  14. ஜியா said...

    thodara??? :O

    kalakkunga...

  15. Ramya Ramani said...

    \\
    Blogger ஜி said...

    thodara??? :O

    kalakkunga...\\

    நன்றி தல :)

  16. Sanjai Gandhi said...

    //சார்: “போடு போடு என் தலை மேல போடு”ன்னாரு.

    நாங்க எல்லாம் பயந்துப்போய் முழிச்சுட்டிருந்தப்போ, என் பக்கத்துல இருந்த பொண்ணு சடார்னு,

    ஆ.பொ: "Sir I cannot understand Tamil, can you please explain in English” ன்னா.

    சார்: [???!!!]//

    அட்றா.. அட்றா.. :))))))

    கெமிஸ்ட்ரி வாத்தியார பார்த்தா உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கா?

    பென்சீன் படம் அறுங்கோணமா சதுரமான்னு அப்பப்போ சந்தேகம் வரும். அதுக்காக குறிச்சி வச்சிருப்பாரு. அந்த பேப்பர் தவறிடிச்சினா வட்டமா எதுனா போட்டு எல்ஜி விளம்பரப் பொண்ணு மாதிரி அங்கங்க இழுத்து விட்டு இதான் பென்சீன்னு சொன்னா நல்லாவா இருக்கும்? :)

  17. Sanjai Gandhi said...

    //ஸ்ரீமதி said...

    அக்கா சூப்பர்... நல்லா சிரிச்சேன் :)))//

    அந்த பேய் SMS திரும்ப அனுப்பட்டுமாடா கண்ணா? இன்னும் நல்லா சிரிச்சிட்டு இருப்ப.. :))

  18. Ramya Ramani said...

    @Sanjai Gandhi

    \\கெமிஸ்ட்ரி வாத்தியார பார்த்தா உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கா?
    \\
    நக்கல் எல்லாம் இல்லீங்க..சும்மா வெளயாட்டுக்கு :P

  19. sri said...

    //அப்பத்தான் நாம பேசும் போது சார்/மேம் கேட்டா கூட அவளுக்கு புரியவெக்கறேன்ன்னு சொல்லி தப்பிக்கலாமே :P .
    //

    ahaaa adhaan reasona naanum romba nalla pullaya help panreengalennu parthen :)

    naanum sirithen

  20. Ramya Ramani said...

    @ Srivats

    Nandri Hai :)

  21. www.thalaivan.com said...

    வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com