Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, July 26, 2008

கிச்சன் கில்லாடி

சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.

என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!

சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??

இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு.அதுனால நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes இங்க இருக்கு.படிச்சு தைரியமா சமைச்சு பாருங்க.

1.பாம்பே சட்னி

முதல்ல இதுக்கு பெயர்க்காரணம் கேக்காதீங்க ஏன்னா எனக்குத் தெரியாது.சப்பாத்தியோட நல்லா இருக்கும்.

செய்முறை:

1.கடலை மாவையும்,கொஞ்சமா மஞ்சள் பொடியும் சேர்த்து நல்லாக் கட்டி இல்லாமல் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி இதெல்லாம் பொடியா நறுக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்புப் போட்டு வதக்கவும்.
5.இப்போ தக்காளியும் சேர்த்து வதக்கிட்டு, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து விடாம பச்சை வாசனை போகும் வரை கிளரவேண்டும்.Semi solid state வந்தவுடன் இறக்கி விடவும்.
6.சூடு ஆறியவுடன் ,கொஞ்சமா எலுமிச்சம் பழச்சாறு விட்டா சட்னி ரெடி :)

2.பச்சைப்பயறு சுண்டல்

இது எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு Dish.சப்பாத்தியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.

செய்முறை:

1.பச்சைப்பயறு அரை மணி நேரம் ஊர வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாகவும்,பச்சை மிளகாய் நீளமாகவும் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.
4.எற்கனவே வேக வைத்து எடுத்த பயறு போட்டு கொஞ்சமா தண்ணி சேர்த்து கிளரவேண்டும்.
5.மிளகு பொடி கொஞ்சம் போட்டு,உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்தா,சுண்டல் ரெடி !

3.பாஸ்டா

இது நம்ம ஊர்ல Macaroni-னு கிடைக்கும்.எஃலெஸ் இங்க வால்மார்ட்லயும் கிடைக்குது.சமைக்க சோம்பேறித்தனமா இருந்தா நாங்க சாப்பிடறது இது தான் :)

செய்முறை:

1.பாஸ்டாவை நல்லா முழுகும் அளவு தண்ணீரில் உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
2.அது நல்லா கொதிச்சு,தொட்டா Softah இருக்கும் போது இறக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் எண்ணை ஊற்றி,கடுகு,சீரகம் போட்டு வேக வைத்திருக்கும் பாஸ்டாவை போடவும்.
4.கொஞ்சமா மிளகாய்ப்பொடி போட்டு ஒரு முறை கிளரி விட வேண்டும்.
5.சூடா இருக்கும் போதே Tomato Sauce போட்டுக்கலாம். சீஸ் பிடிச்சவங்க அதையும் சேர்க்கலாம்.அது இல்லாமலே நல்லா இருக்கும்.
6.இதுல வெங்காயம் தக்காளி எல்லாம் பிடிச்சா சேக்கலாம்.

சரி இப்போ கொஞ்சம் டிப்ஸ் (விடறதா இல்லை :P)

1.வெங்காயம் சீக்கிரமா வதங்கனும்னா,எண்ணை இல்லாம வெறும் வானலில வதக்கலாம்.
2.சாம்பார்ல காரமோ,உப்போ ஜாஸ்தி ஆகிடுச்சா ஒரு சின்ன உருளைகிழங்க வெட்டிப் போட்டா சரி ஆகிடும்.

ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))