Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, June 21, 2008

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்

இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்
1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
2. சமூகத்தில் பெண்களின் நிலை.
3.மென் துறையில் பெண்களின் நிலை.

மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன பயிற்சி பெற வேண்டும் எப்படி திறமையை வளர்த்துகொள்ளவேண்டும் என்பதை பற்றிய தெளிவான ஒரு தொடரை திரு வெட்டி அவர்களே பதிவிட்டிருக்கிறார்.படிக்க இங்கே சொடுக்கவும்.
வள்ளி அவர்கள் கூருவது போல, ஆங்கில பயிற்சி முக்கியம்.நான் இருப்பது தமிழ்நாடு எனக்கு ஆங்கில அறிவு எதற்க்கு என்ற வாதம் வேண்டாம்.நாம் அதிகம் வேலை செய்யபோவது வெளிநாட்டினருக்கே,அவர்களிடம் பேச ஒரு பொது மொழியாக ஆங்கிலத்தை கருதலாமே!என்ன தான் நீங்கள் அறிவில் கூர்மையாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த மொழி பயிற்சி அவசியம்.

சமூகத்தில் பெண்களின் நிலை
நம்முடைய சமூகத்தில் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா என்றால் "ஆம்" என்று சொல்வேன்.இப்போது பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் எதார்த்தமாக கருதப்படுகிறது இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு பிடித்த வேலை செய்யும் அளவு.ஆனால் நம் மனதில், பெண்களை ஆணுக்கு சமமாக எல்லா நேரங்களும் ஒப்பிடுகிறோமா என்றால் இல்லை தான். உதாரணதிற்க்கு, விஜய் டீவி வழங்கிய "நீயா நானா"வில் வாதிட்ட ஒரு பெண் "நான் பெண் என்பதால் விரும்பிய படிப்பு படிக்கவைக்க்வில்லை".இது சில வீடுகளில் இன்னும் நடக்கும் கசப்பான உண்மை.

வள்ளி அவர்களில் பதிவில் ஒருவர் பின்னூட்டதில் குறிப்பது போல் "பெண்கள் கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்". இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்.ஏன் எவ்வளவு பெண்கள் கணிதத்தை விருப்பபாடமாக எடுத்து படிக்கிறார்கள்? பெண்/ஆண் குழந்தையோ பாடங்களை படிக்க சிரமப்பட்டால், அவர்களுக்கு பிடித்தாற்போல்,அவர்களுக்கு பிடித்தம் வருவது போல் சொல்லிதறவேண்டும்.

ஆனால், இன்னும் சிலர் கூரும் சில வாதங்கள்

1. பெண்கள் அதிக நேரம் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனனம் செய்து மதிப்பெண் எடுக்கிறாள்.ஆண் பிள்ளைகள் விளையடிக்கொண்டே இருந்தாலும் கடைசி நேரத்தில் படித்து மதிப்பெண் எடுக்கிறான் - இதை நான் மறுக்கிறேன் , நானும் ஒரு பெண் என்பதால் அல்ல.சில பெண்கள் இயற்கயிலேயே, "Reserved Type"ஆக இருப்பர்.ஷாப்பிங் செய்தோ,டீவி பார்தோ வீட்டிலேயே இருப்பதால் அவ்வாறு சிலருக்கு தோன்றுகிறது.ஆணோ பெண்ணோ, மனதை ஒருமித்து படித்தால்,எளிமையாக படிக்கலாம் இல்லையா?

2.சிலர் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன் "பெண் IIT Coaching எல்லாம் சென்று என்ன செய்ய போகிறாள்,எப்படியும் கல்யாணத்திற்க்கு பிறகு வீட்டை பார்த்து கொள்ள வேண்டியவள் தானே". ஏன் பெண் IIT-யில் படித்தாலோ, மருத்துவம் படித்தாலோ குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டாளா? அவளால் படிப்பிருந்தால் இன்னும் தீர்கமாக யோசிக்கமுடியும் தானே? Personal/Professional Life என்று வரும் போது அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம்.அதற்காக அவளின் படிப்பிற்கோ,கனவுகளுக்கோ தடை செய்ய கூடாது என்பது என் கருத்து.
மென் துறையில் பெண்களின் நிலை
1.அழகு பார்த்து வேலை கிடைக்கிறது - எல்லா உயிரினமுமே ஒரு விதத்தில் அழகு என்றாலும், புற அழகை பார்த்து வேலை கிடைப்பது இல்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் போது அதற்கேற்றார் போல் உங்களை Present பன்னி கொள்ளவேண்டும்."Toilet Slipper"ஓடு ஆபீஸ் செல்ல முடியாது தானே? உங்களுக்கு பிடித்த,வேலைக்கேற்ற decent ஆன உடைகளை அணிந்தால் "Self Confidence" வளரும்.

2.சக பெண் பணியாளர்களை மதிப்பது -
பெண்களை அவர்களின் டீம்களில் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.வேலை என்று வந்த பின்னர் ஏன் அவர்களின் பால் கருதபடுகிறது? ஏன் அவர்களால் நல்ல Solutions/Suggestions கூற முடியாதா? எனக்கு தெரிந்த வரை பெண்கள் பொருமையாக யோசித்து Long term Solutions கொடுப்பாள் என்று நம்புகிறேன்.அதற்காக ஆண்களால் முடியாது என்று சொல்லவில்லை.வேலை என்று வந்தவுடன் பால் பார்காதீர்கள்.பெண் என்பவள் கடலை போடவோ,Relax பன்னி பேசுவதற்காக மட்டுமே இல்லை.அவளும் உங்களை போல் ஏதொ சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவள் என்பதை சிரிதேனும் நினையுங்கள்.

3.பெண்கள் உயர் பதவியில் இருப்பது
சில நேரங்களில் பெண்கள் அவர்கள் திறமையாலே உயர் பதவியில் இருந்தாலும், அதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.அவளின் "Character" பற்றிய பேச்சு வருகிறது.இந்த நிலை மாற வேண்டும்.Office Politics என்பது மிகவும் பரவலாக இருப்பது தான்.இதில் அப்பெணின் வளச்சியை கொச்சை படுத்த வேண்டாமே! அப்பெணின் செயல் திறமையை மட்டுமே பாருங்கள்.