'குழல்இனிது: யாழ்இனிது' என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் அப்படீன்னு சொல்வாங்க.மழலை மொழிங்கரது கேட்க்கும் போது அவ்ளோ நல்லா இருக்கும்.நாம எல்லாருமே பொதுவா சின்ன வயசுல நிறைய மழலை மொழில பேசியிருப்போம்.இப்பகூட நம்ம வீடுங்கள்ள,நாம பேசினத சொல்லிட்டு இருப்பாங்க.ஏன்
உதாரணத்துக்கு எடுத்துகிட்டீங்கன்னா,எங்க வீட்ல என்ன வெச்சு நக்கல் அடிக்கர ஒரு விசயம் இருக்கு. நான் ஒரு ஒன்றரை வயசு குழந்தைய்யா இருக்கும்பொது ஜன்னல் கிட்டஉட்கார்ந்து வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேனாம் அப்போ தெருவுல"ரூபாயிக்கு ரெண்டு"னு குரல் கேட்டுட்டு "அம்மா தெருவுல ரூபா விக்கரானாம்.ஒரு ரூபா கொடுத்தா, ரெண்டு ரூபா தருவாராம்.போய் வாங்கிக்கோ"ன்னுசொன்னேனாம்.அம்மா போய் பார்த்தா தெருவுல எலுமிச்சம் பழம் வித்தாங்களாம் :P.
என்னோட கசின் ஒருத்தனுக்கு "க" வராது."த"ன்னு தான்சொல்லுவான். அவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து "பெரியம்மா அம்மா டீவதிதத்தி தேதாந்த"னான்..எங்களுக்கு அவன் சொல்றது என்னானு புரிஞ்சுக்கவேகொஞ்ச நேரம் பிடிச்சது.அவன் கேட்டது டீ வடிகட்டி!!
அவன ஒரு நாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனா அர்ச்சனைபண்ணும் போது நட்சத்திரம்,ராசி கேட்டா நான் சொல்றதுக்கு முன்னாடியே"நான் தண்ணி ராசி மாமா"ங்கிறான்..அப்புறம் தான் தெரியுது அவன் சொல்ல வந்தது"கன்னி"ராசின்னு:)
இப்படி மழலை மொழி கேட்க்கும் போது நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.என்னோட பெரிய பொழுதுபோக்கே நண்டும் சிண்டுமா நாலு பசங்களகூப்பிட்டு வெச்சு விளையாடறது தான்.கள்ளம் கபடம் இல்லாம வெகுளியா நீயாநானானு போட்டி இல்லாம வெளிப்படைய்யா பேசும்.
ஆனாநான் அப்படி வாண்டுங்களோட பேசி விளையாடி "பல்பு" வாங்கிருக்கேன்.எங்க வீட்டு பக்கத்துல ஒரு சின்னபொண்ணு ரெண்டு வயசு ஆகியும் பேசாம இருந்தான்னு அவங்க அம்மா வருத்தபட்டாங்க.ஆனா அவ பேச அரம்பிச்ச அப்புறம் எல்லாருமே வாய் அடச்சுபோனோம்.அவளுக்கு நான்னா செம லொள்ளு,நக்கல் எல்லாம். அவளோட நல்ல கதை பேசறது,விளையாடறதுன்னு ஒரே ஜாலியா இருந்தேன்.
யாரோ கண்ணு வெச்சு, நடுவுல ஆணி அதிகமாகி இன்னிக்கி நாள் என்னானு தெரியாம ஒரு மாசம் ஆப்பீஸே கதின்னு இருந்தேன்.ராத்திரி ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு வரும் போது அவளும் அவங்க அம்மாவும் அவங்க அப்பாக்காக வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.
இப்படி இருக்கும் போது,
ஒரு நாள் எங்க அப்பா ஏதோ அசோசியேஷன் பத்தி பேச அவங்க வீட்டுக்கு போயி கதவதட்டினா, இந்த அம்மா ஜன்னல் வழியா எட்டி பாத்துட்டு "அப்பா நம்ம ரம்யாவோடஅப்பாதான்பா கதவ தொற"ன்னு சவுண்டு விட்டிருக்கா."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்".இதை கேட்ட அவருக்கும்ஷாக்கு,எங்க அப்பாவுக்கும் தான்.நாம வீட்ல எப்படி பேசறோமோ அதையே தான்குட்டீசும் பேசும்.அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
(ஸ்ஸ் அப்பா கருத்து சொல்லியாச்சு).
எங்க அம்மா வீட்ல சில குட்டி பசங்களுக்கு டியூஷன் சொல்லிகொடுப்பாங்க.அதுல நந்தினினு ஒரு பொண்ணு நல்ல சேட்டை பண்ணுவா. நான் மேலசொன்ன குட்டி பொண்ணு என்ன கிண்டல் பண்ணதால பீலிங்ஸ் ஆகி (சும்மா கிலியன்ட் செர்வெர் டவுன் ஆனது தான் உண்மை) 6 மணி பஸ் புடிச்சு வந்தா எங்க வீட்ல படிச்சிட்டு இருந்த அவ "என்ன அக்கா எப்ப வந்தீங்க ஊர்லேர்ந்து"னா."என்ன நந்தினி நான் ஊர்ல
தானே இருக்கேன்"னு சொன்னா
"உங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சா அதான்"ங்கரா..இதை கேட்ட எங்க அம்மா ரியாக்க்ஷன் நான் சொல்லவே தேவைஇல்லை..சரி விடு ரம்யா இதெல்லாம் உனக்கு சதாரணம்னு நெனைச்சிட்டு விட்டுடேன்.ஆனா விதிவலியது..விடாம அவ "ஏன் அக்கா இனிமே எங்களோட எல்லாம் விளையாட மாட்டீங்களா எப்பவுமே ஆஃபீஸ்தானா"அப்படின்னு சொன்னா. எங்க அம்மா நடுவுல வந்து ஏதாவதுசொல்லிருவாங்களோன்னு
"ஏய் நந்தினி சும்மா லொட லொடன்னு இப்ப கேள்விஎல்லாம் கேக்காதே 4த் ஸ்டேண்டட் வந்துட்டே ஒழுங்கா படி"ன்னு சொன்னா "அய்யோ அக்கா வேலைக்கு போயி ரொம்பவே எல்லாம் மறந்துடீங்க..நான் இப்ப 5த் ஸ்டேண்டட் "ங்கரா.
சரிடா நாம இனிமே இங்க இருந்த நல்லதில்லேனுகோவிலுக்கு ஒடிட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா அப்பா "என்னம்மா உன் பிரண்டு என்னோட காபி எல்லாம்சாப்டுட்டா".அது யாருப்பா ன்னு நான் நினைக்கும் போதே "எல்லாம் வசு தான் மார்கெட்ல பார்த்தோம் அவளையும் அவ அப்பாவையும்.சேர்ந்து காபி சாப்டோம்.அவரு அன்னிக்கி முதல்ல நீ அவளோடவிளையாடற சின்ன பொண்ணுன்னு நினைச்சாராம்.உங்க பொண்ணு வேலைக்குபோறாங்கண்ணு தெரியாது.இவ கிட்ட அக்கான்னு கூப்பிட சொன்னா,இல்ல ரம்யாஎன்னோட டாக்டர் ஸெட் வெச்சு வெளயாடுவா அதலனால அக்கான்னு எல்லாம்கூப்பிடமாட்டேன்னு சொல்றா சார்".
"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.
இப்ப நினைக்கும் போது சிரிப்பா வருது. ஆனா அந்த நினைவுகள் ரொம்ப பசுமைய்யா, சந்தோஷமா இருக்கு.மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.
நேத்து நான் எங்க அபார்ட்மெண்ட்ல நடந்து வரும் போது 3 குட்டீஸ்வளையாடிக்கிட்டு இருந்தாங்க.அவங்க பால் என்னோட கால் கிட்டவிழுந்துடுச்சு.எடுத்து கொடுத்தா "திதீ ஹமாரே சாத் கேலோனா(அக்கா எங்களோட விளையாட வாங்களேன்... )"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி(நான் கொஞ்ச நேரம் பொருத்து வரேன்)"ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே வந்தாலும் மனசு கெடந்து அடிச்சிகிட்டே தான் இருந்தது :(
P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!
Saturday, June 28, 2008
மழலை மொழி
Subscribe to:
Post Comments (Atom)
57 comments:
//"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.//
இந்த ஒரு டையலாக்குக்குத்தானே இம்புட்டு பெரிய பில்ட்-அப்பு?? ;)))
ம்ம்ம்... கலக்குங்க.... வெரி குடி மெழுகுவர்த்தி பதிவு வித் கருத்து :)))
ஆமாம்!! 'பதிவுலக எதிர்காலமே' ன்னு உங்களுக்கு சென்னை முழுக்க பெரிய பெரிய கட்-அவுட்டா வச்சிருக்காங்களாமே... உண்மையா??
"திதீ ஹமாரே சாத் கேலோனா" அப்டீன்னா என்ன?
ரம்யா உங்க குழந்தை மனசு என்னிக்கும் மாறாம இருக்க என் வாழ்த்துக்கள்!!
வாண்டுகளுடன் நீங்க அடிச்ச லூட்டிஸ் & நாட்டீஸ் படிக்க சுவாரஸியமாக இருந்தது!!
\\P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!\\
நன்றியோட சேர்த்து ஒரு 'கொத்து' பரோட்டா பார்ஸல் ப்ளீஸ்:))))
\\"திதீ ஹமாரே சாத் கேலோனா"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி"\\
தும் ஹிந்தி மாலும் ஹே, அச்சா:))
இங்க உள்ள குழந்தைங்க ஆங்கிலத்தில் பேசாமல் தாய்மொழி[ஹிந்தி] யில் பேசுவது பார்க்க ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது!!!
Wow Ramya, this is real blogging ... funny, interesting ... கலக்கற போ. Great to see your blog shaping up really good.
குட்டி பசங்க கிட்ட Bulb வாங்கறது செம comedy. நானும் கண்ணா பின்னானு Bulb வாங்கிருக்கேன். Was a gud fun read ...
Keep it going ...
Smiles,
Vinayak
More than the loLLu of kids, it is their questions, that literally bowls me out. My 4 year old nephew asks, does an Aeroplane have Horn? Can you anybody answer this? :)
:))
குட்டிப்பசங்க கூட விளையாடறது/அவங்க விளையாடறதை பார்த்துட்டிருக்கறது எல்லாமே செம ஜாலிதாங்க.
//
இந்த ஒரு டையலாக்குக்குத்தானே இம்புட்டு பெரிய பில்ட்-அப்பு?? ;)))//
ரிப்பீட்ட்ட்டு :))
\\Ramya Pennin(g)Thoughts//
:-))
//அப்போ தெருவுல"ரூபாயிக்கு ரெண்டு"னு குரல் கேட்டுட்டு "அம்மா தெருவுல ரூபா விக்கரானாம்.ஒரு ரூபா கொடுத்தா, ரெண்டு ரூபா தருவாராம்.போய் வாங்கிக்கோ"ன்னுசொன்னேனாம்.அம்மா போய் பார்த்தா தெருவுல எலுமிச்சம் பழம் வித்தாங்களாம் :P.//
2 மச் பேராசை...சின்ன வயசுலயே ???
//தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்".//
உண்மையா ??
இப்ப நினைக்கும் போது சிரிப்பா வருது. ஆனா அந்த நினைவுகள் ரொம்ப பசுமைய்யா, சந்தோஷமா இருக்கு.மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.//
நெசந்தானுங்க.....
எங்க "LKG pass" Boss மாப்ள கிட்ட வாராவாரம் போன் பண்ணி "பல்பு" வாங்குனாத்தான் தூக்கமே வருது...
:-))
ஆரருமையா இருக்கு..
பல்பு மட்டுமா ஒவ்வொருத்தரும் வாங்கியிருக்கோம்... ஹ்ம்ம்..ஹ்ம்ம்.. எதுவும் சொல்லரா மாதிரி இல்லை... ரொமப்வே ரசிச்சு எழுதியிருக்கீங்க
நல்ல பதிவு! என் மகள் சின்னவளாய் இருக்கும் போது `தண்ணி' என்பதற்கு `அங்கி' என்பாள். என்னடா இது சம்பந்தமே இல்லாமல் என்றெல்லாம் நாங்கள் பயந்தோம் அப்போது!
//என்னோட கசின் ஒருத்தனுக்கு "க" வராது//
இத வெச்சு ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்வார்கள். ஒரு குழந்தைக்கு `ச' என்கிற எழுத்து வராது. எப்படி சொல்வர்கள்?
”அவனுக்கு `சா'வே வராது!”
எப்படி?
\\ஜி said... இந்த ஒரு டையலாக்குக்குத்தானே இம்புட்டு பெரிய பில்ட்-அப்பு?? ;)))\\
எப்படி ஜி இது கரக்டா பாயிண்ட் பிடிச்சிடீங்களே! Good :)
\\ ஜி said...
ம்ம்ம்... கலக்குங்க.... வெரி குடி மெழுகுவர்த்தி பதிவு வித் கருத்து :)))
ஆமாம்!! 'பதிவுலக எதிர்காலமே' ன்னு உங்களுக்கு சென்னை முழுக்க பெரிய பெரிய கட்-அவுட்டா வச்சிருக்காங்களாமே... உண்மையா??\\
ஆமாங்க மெழுகுவர்த்தி பதிவு தான் இது :)
ஒ சென்னைலயுமா கட்-அவுட்டு! சூப்பர்..பெங்கலூரு பொறுப்பு நீங்களே எடுத்துகரதா சொல்லிடீங்க தானே..
\\நிலா said...
"திதீ ஹமாரே சாத் கேலோனா" அப்டீன்னா என்ன?\\
வருகைக்கு நன்றி! அப்படீன்னா,"எங்களோட விளையாட வாங்க"னு அர்த்தம் :)
நன்றி திவ்யா!
\\Divya said...
\\P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!\\
நன்றியோட சேர்த்து ஒரு 'கொத்து' பரோட்டா பார்ஸல் ப்ளீஸ்:))))\\
பண்ணிடுவோம் ;)
\\தும் ஹிந்தி மாலும் ஹே, அச்சா:))
இங்க உள்ள குழந்தைங்க ஆங்கிலத்தில் பேசாமல் தாய்மொழி[ஹிந்தி] யில் பேசுவது பார்க்க ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது!!!\\
தோடா தோடா மாலும் ;)
ஆமாங்க இங்க பசங்க அவங்க தாய்மொழி-ல பேசராங்க, ஆனா சில தமிழ் மக்கள் அவங்க குழந்தைகளோட ஆங்கிலத்துல மட்டுமே பேசுவது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு
Vinayak
Hello vanga thanks yaar..எல்லாருக்குமே அந்த வாண்டு "Bulb" Experience உண்டு போல ;)
Vijay,
ஆமாங்க பொடிப்பசங்க கேக்கற கேள்வி இருக்கே சில நேரத்துல நம்மள நெரைய்ய சிந்திக்க வைக்கும்
கப்பி,
:))) - ஒன்னு அதிகம் போட்டாச்சு
ஆஹா ரிப்பீட்டே போட்டச்சா??
\\ ஒரு வழிப்போக்கன் said...
\\Ramya Pennin(g)Thoughts//
:-))\\
:)))
\\2 மச் பேராசை...சின்ன வயசுலயே ???\\
ஏதோ சின்ன கொழந்தைங்க அறியா வயசு :)
\\உண்மையா ??\\
இப்ப அப்படி இல்லீங்கோ :)
\\நெசந்தானுங்க.....
எங்க "LKG pass" Boss மாப்ள கிட்ட வாராவாரம் போன் பண்ணி "பல்பு" வாங்குனாத்தான் தூக்கமே வருது...
:-))\\
:))
\\Deepa said...
ஆரருமையா இருக்கு..
பல்பு மட்டுமா ஒவ்வொருத்தரும் வாங்கியிருக்கோம்... ஹ்ம்ம்..ஹ்ம்ம்.. எதுவும் சொல்லரா மாதிரி இல்லை... ரொமப்வே ரசிச்சு எழுதியிருக்கீங்க\\
நன்றி..நான் அப்ப ரசிச்சு அனுபவிச்சத இப்ப பதிவிடறேன் :)
\\பரிசல்காரன் said...
இத வெச்சு ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்வார்கள். ஒரு குழந்தைக்கு `ச' என்கிற எழுத்து வராது. எப்படி சொல்வர்கள்?
”அவனுக்கு `சா'வே வராது!”
எப்படி?
\\
பரிசல்காரன் வருகைக்கு நன்றி!
நீங்க சொல்லுவதும் எதாத்தமா நல்லா இருக்கு :)
//அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
//
சரிங்க ஆபிசர். :))
தமிழ்ல எழுத்து பிழையை சுட்டி காட்டியவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? :p
எங்கள் சொந்தகாரர் ஒருவரின் குழந்தை பேசியதை என்னால் மறக்கவே முடியாது...
அவர்கள் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். விடுமுறைக்கு ஒரு சமயம் இந்தியா வந்திருந்தனர்.
அப்பொழுது அந்த குட்டி பையன் (4 வயது இருக்கும்)
அவன் பிச்சைகாரனுக்கு போட பத்து ரூபாய் கேட்டிருக்கிறான்.
பாட்டி ஐம்பத்து பைசா தான் கொடுத்திருக்கிறார்.
உடனே அவன் இப்படி
செய்யாதே,நீ வயதாகி,பிச்சை எடுக்கும் போது நான் எட்டணா குடுத்தால்
உனக்கு எவ்வளோ கஷ்டமாக இருக்கும்னு கேட்டானாம் ..
வணக்கம்ங்க,
இது அம்பி பதிவின் பின்னூட்டங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது. குழந்தைகள் கிட்ட ஸ்பெஷல்லே அவங்க எப்ப என்ன சொல்லுவாங்கன்னு தெரியாம இருக்கறதுதான். அந்த spontaneousness தான் அவங்க Speciality.
....அம்பி பதிவில் போட்ட(என்னுதுதான்க.....மண்டபத்துல யாரும் எழுதி குடுக்கலைங்க.) பின்னூட்டத்தை இங்கு மீண்டும் தருகிறேன்.(கருத்து ஒத்து இருப்பதால் :)))
கலக்கல் பதிவு..ஆனா நாந்தான் ரோம்ப லேஏட். உங்களுக்காவது "க" ....."இ" இல்ல B D பிரச்சனைகள்தான். எங்க பக்கத்து வீட்டுல இருந்த பையனுக்கு ஐஞ்சு வயசு. ஆனா அவன் பேசறத கேட்டா பயந்துடுவீங்க. எல்லாத்துக்கும் அவனே ஒரு பேரு வச்சி இருப்பான். "தண்ணி"னா அவன் பாஷைல "சுட்டா" . அப்புறம் "வேணாம்"ன்கறது அவன் லேங்வேஜ்ல "குல்னா". அட அம்மாங்கறதெ அவன் வாய்ல "சும்பி"தான். நிச்சியமா ஒளர்ர மாதிரி எல்லாம் கிடையாது. அதெ அதே வார்த்தைங்க தான் எப்பவும். ஆனா அவனே வச்சிகிட்டது. அவங்க அம்மாவுக்கு மட்டும்தான் புரியும். அவங்க கிட்ட கேட்டுகிட்டு நாமளும் அதே வார்த்தைய உபயோகிச்சா கிடுகிடுண்ணு பேசுவான். அதுக்கே அவங்க அம்மா மொகத்தை பாக்கணுமே!!!! பூரிப்புதான். அவங்க அப்பா ஒரு படி மேல....."இருக்கட்டும்பா....உலகத்துல எவ்வளவோ மொழி இருக்காம்...நாம்ளும் ஒண்ணு உருவாக்குவோமே"...எங்க அம்மாதான் ரொம்ப சத்தம் போட்டு டாக்டரை பாக்க சொன்னாங்க.....ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் சேர்ந்து அவங்க அம்மாதான் ரொம்ப முயற்சியெல்லாம் எடுத்து இப்பொ பத்தாங்வகுப்புல தமிழ்ல ஸ்கூல் பார்ஷ்ட்டாம்....அவங்க அம்மா முகத்துல இதுக்கும் அதே பூரிப்புதான்....என்னாண்ணு சொல்றது.....ம்ம்ம்.......
"நான் தண்ணி ராசி மாமா" - நல்ல காமடி...
//நான் தண்ணி ராசி மாமா//
நல்ல காமடி :-)
robbaku rendu soober :D vilaiyumpayir mulaiyilen neenga pirkalathula blogla mokka podratha apovay unarthirukeenga..kalkiputeengov...//'குழல்இனிது: யாழ்இனிது' // intha builduplamm...//என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க// intha fllowupku thana :D karakatakaran kaundamani dialog remembering :D naan kadisia patha englees padam solaynga...antha kuch kuch hotha hai swalpa translate madi ;)
@தம்பி விஜய், உன் நியாபக சக்தியை நினைத்து நான் புல்லரித்து விட்டேன். :))
\\ambi said...
//அதனாலே நாம பேசும் வார்தைகளை பார்த்து பேசனும்
//
சரிங்க ஆபிசர். :))
தமிழ்ல எழுத்து பிழையை சுட்டி காட்டியவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? :p
\\
அம்பி அண்ணாவுக்கும், அவரோட குட்டி பையன் "சூர்யா"வுக்கும் ஒரு கேசரி சாப்பிடும் பேஸின்+கேசரி பார்ஸல்ல்ல்ல்ல்.. உங்களுக்கு குழந்தை பிறந்ததுக்கு நான் சுவீட்டு தரேன் பாருங்க ;)
முகுந்தன்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!சில நேரத்துல குழந்தைங்க பேச்சு நியாயமானதா தான் இருக்கு :)
Vijay,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
நீங்க சாப்டுவேர்-ல வேலை பாக்கரீங்களா? நல்லா பண்ரீங்களே Copy Paste !!!
"cut Copy paste செய்து வாழ்வாரே வாழ்வர்
மற்றாரெல்லாம் Coding எழுதியே சாவர்"னு சும்மாவா பெரியவங்க சொல்லிருக்காங்க ;)
divyapriya,
வருகைக்கு நன்றி!
\\Anonymous said...
robbaku rendu soober :D vilaiyumpayir mulaiyilen neenga pirkalathula blogla mokka podratha apovay unarthirukeenga..kalkiputeengov...//'குழல்இனிது: யாழ்இனிது' // intha builduplamm...//என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க// intha fllowupku thana :D karakatakaran kaundamani dialog remembering :D naan kadisia patha englees padam solaynga...antha kuch kuch hotha hai swalpa translate madi ;)
\\
anony sir amanga mokkai ellam namma rathathula ooorina onnu..ana namma blogger makkal ellam arivali pointah correctah pidikareenga ;)
translate ellam pannidalame ..check the post
ஜி சொன்னது...
////"என் பொண்ணு குழந்தை மனசு உள்ளவனு சொல்லுங்க பா" ன்னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டு எஸ் அகிட்டேன்.//
இந்த ஒரு டையலாக்குக்குத்தானே இம்புட்டு பெரிய பில்ட்-அப்பு?? ///
ரிப்பீட்டு...
அடடா தமிழ்ள எழுத ஆரம்பிச்சிட்டிங்களா...
நல்லது நல்லது...:)
கொஞ்ச நாளைக்கப்புறம் வந்திருக்கேன் இந்தப்பக்கமா..
நல்ல முன்னேற்றம் உங்கள் எழுத்துக்களில் வாழ்த்துக்கள்...
குழந்தைகள் குட்டி குட்டி தேவதைகள்தானே...
//ம்ம்ம்... கலக்குங்க.... வெரி குடி மெழுகுவர்த்தி பதிவு வித் கருத்து :)))
ஆமாம்!! 'பதிவுலக எதிர்காலமே' ன்னு உங்களுக்கு சென்னை முழுக்க பெரிய பெரிய கட்-அவுட்டா வச்சிருக்காங்களாமே... உண்மையா??
//
இதெப்ப நடந்திச்சு சொல்லவே இல்ல...:)
///P.S: நான் தமிழில் பிழை இல்லாமல் எழுத உதவிய திவ்யாவிற்கு நன்றி!///
இங்கயும் திவ்யா மாஸ்டர்தான் கோச்சிங்கா மாஸ்டர் பேசாம ஒரு ஒரு லெக்சருக்கு இம்புட்டுன்னு வசூல ஆரம்பிச்சிருங்க
நடக்கட்டும் நடக்கட்டும்...:)
திவ்யா சொன்னது...
///\\"திதீ ஹமாரே சாத் கேலோனா"ங்கராங்க..
செரிடாப்பா இங்கயும் தொடருதானு நினைச்சுக்கிட்டே "மே தோடிதேர் கே பாத் ஆவூங்கி"\\
தும் ஹிந்தி மாலும் ஹே, அச்சா:))
இங்க உள்ள குழந்தைங்க ஆங்கிலத்தில் பேசாமல் தாய்மொழி[ஹிந்தி] யில் பேசுவது பார்க்க ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது!!!///
மாஸ்டர் அப்ப உங்களுக்கும் ஹிந்தி தெரியுமா மாஸ்டர் சொல்லவே இல்ல...:)
ஹிந்தியிலயும் கதை எழுதுவிங்களா மாஸ்டர்...
//"cut Copy paste செய்து வாழ்வாரே வாழ்வர்
மற்றாரெல்லாம் Coding எழுதியே சாவர்"னு சும்மாவா பெரியவங்க சொல்லிருக்காங்க ;)
//
அட நீங்க ஏங்க copy paste அப்படின்னு சொல்லரீங்க , அது reusability ங்க :-))
Ramya... ellar vaazhkailum indha maari swarasyama edhavadhu irrukum... un blog padikum bodhu ella pazhaya ninaivugal ellam nyabagam varudhu...
enga akka janna pakkathula okaandhutu ovoru paathirama velila thooki potadhum, en thambi gate kadhava pudichundu porava varavanga ellarayum veetuku koopitutu irrundhadhum... apporam namma bomai venumnu amma kuda periya malyudhame potaadhu ippadi nu solliteee pogalam... he he he... nice post
ஆஹா, ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் பதிவு. தாமதமாக பின்னூட்டமிட்டமைக்கு மன்னிக்கவும். நானும் ஒரு தடவை இதைப் பற்றி எழுத ஆசையாக உள்ளது. சூப்பர்.
ஆஹா, ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் பதிவு. தாமதமாக பின்னூட்டமிட்டமைக்கு மன்னிக்கவும். நானும் ஒரு தடவை இதைப் பற்றி எழுத ஆசையாக உள்ளது. சூப்பர்.
நான் எழுத நினைச்சதை அப்படியே ராப் எழுதிட்டார்!
அதனால ஒரு பெரிய ரிப்பீட்டே!
வாண்டுகளோட விளையாட ஆரம்பிச்சா நேரம் காலம் போறதே தெரியாது!
அவங்க உலகமே ஒரு அலாதியான சுகம் கொண்டது! நாம அங்க போகணும்னா நாமளும் அவங்களோட குழந்தையாவே மாறிடணும்!
//மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.//
10000% நிஜம்தான்!
மனசு சரியில்லைன்னா
பிளாக்குலே கூட மழலைச் சொல், அஞ்சலி, நிலா, பவன்.. இப்படி என்னென்ன பிளாக் இருக்கோ அதெல்லாம் ஒரு ரவுண்ட் விட்டோம்னா மனசு அப்படியே லேசாகிடும்!
ஆரம்ப காலத்துல மழலைச் சொல் என்னோட டியர் ஃபிரண்டு!
தமிழன் வருகைக்கும் உங்களின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)
\\முகுந்தன் said...
//"cut Copy paste செய்து வாழ்வாரே வாழ்வர்
மற்றாரெல்லாம் Coding எழுதியே சாவர்"னு சும்மாவா பெரியவங்க சொல்லிருக்காங்க ;)
//
அட நீங்க ஏங்க copy paste அப்படின்னு சொல்லரீங்க , அது reusability ங்க :-))
\\
100% :)))
@Priya
வருகைக்கும் உங்களின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)
@rapp
வருகைக்கும் உங்களின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)
நீங்களும் எழுதுங்கள் படிக்க சந்தோஷமாக இருக்கும் :))
\\நாமக்கல் சிபி said...
வாண்டுகளோட விளையாட ஆரம்பிச்சா நேரம் காலம் போறதே தெரியாது!
அவங்க உலகமே ஒரு அலாதியான சுகம் கொண்டது! நாம அங்க போகணும்னா நாமளும் அவங்களோட குழந்தையாவே மாறிடணும்!
//மனசு சரி இல்லேன்னா ஒரு குழந்தைய போயி பாருங்க.அப்படியே லேசாகிடும்.//
10000% நிஜம்தான்!
மனசு சரியில்லைன்னா
பிளாக்குலே கூட மழலைச் சொல், அஞ்சலி, நிலா, பவன்.. இப்படி என்னென்ன பிளாக் இருக்கோ அதெல்லாம் ஒரு ரவுண்ட் விட்டோம்னா மனசு அப்படியே லேசாகிடும்!
ஆரம்ப காலத்துல மழலைச் சொல் என்னோட டியர் ஃபிரண்டு!\\
உங்களின் முதல்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)
Blog template attakasamaa irukkuthu.... nsoi maadi :)))
50???
Thanks Geeya :))
Yessu 50 dhan..congrats half -century potteengale !!
oru big wowwwwww.......and it is not for this post alone...... for ur entire blog........variety of topics, variety of posts...and a great talent :)
Hats off
/
."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்"
/
சமத்து பொண்ணு!!
\\ rsubras said...
oru big wowwwwww.......and it is not for this post alone...... for ur entire blog........variety of topics, variety of posts...and a great talent :)
Hats off
\\
Thank a lot for your wishes.Do Drop in whenever you get time :)
\\ மங்களூர் சிவா said...
/
."யாரு டா ரம்யா"ன்னு அவ அப்பா கேட்டா "தினம் ராத்திரி பிசாசு வர நேரத்துக்கு வீட்டுக்கு வரீங்கனு அம்மா சொல்லுவாங்க இல்ல,அதே மாதிரி வருவா ரம்யாவும்"
/
சமத்து பொண்ணு!!
\\
நன்றிங்க மங்களூர் சிவா நீங்க சரியான பாயிண்ட் பிடிச்சிடீங்களே !!
//நன்றிங்க மங்களூர் சிவா நீங்க சரியான பாயிண்ட் பிடிச்சிடீங்களே !!
//
ரம்யா - சிவா சமத்துனு சொன்னது உங்கள இல்ல..திரும்ப படிச்சு பாருங்க புரியும்...:-)
\\வழிப்போக்கன் said...
//நன்றிங்க மங்களூர் சிவா நீங்க சரியான பாயிண்ட் பிடிச்சிடீங்களே !!
//
ரம்யா - சிவா சமத்துனு சொன்னது உங்கள இல்ல..திரும்ப படிச்சு பாருங்க புரியும்...:-)
\\
அட பாவமே இதுக்கு பேரு தான் உள்குத்தா?? எவ்ளோ அறியா புள்ளயா இருக்கேன் பாருங்க :((
Post a Comment