சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.
என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!
சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??
இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு.அதுனால நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes இங்க இருக்கு.படிச்சு தைரியமா சமைச்சு பாருங்க.
1.பாம்பே சட்னி
முதல்ல இதுக்கு பெயர்க்காரணம் கேக்காதீங்க ஏன்னா எனக்குத் தெரியாது.சப்பாத்தியோட நல்லா இருக்கும்.
செய்முறை:
1.கடலை மாவையும்,கொஞ்சமா மஞ்சள் பொடியும் சேர்த்து நல்லாக் கட்டி இல்லாமல் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி இதெல்லாம் பொடியா நறுக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்புப் போட்டு வதக்கவும்.
5.இப்போ தக்காளியும் சேர்த்து வதக்கிட்டு, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து விடாம பச்சை வாசனை போகும் வரை கிளரவேண்டும்.Semi solid state வந்தவுடன் இறக்கி விடவும்.
6.சூடு ஆறியவுடன் ,கொஞ்சமா எலுமிச்சம் பழச்சாறு விட்டா சட்னி ரெடி :)
2.பச்சைப்பயறு சுண்டல்
இது எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு Dish.சப்பாத்தியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.
செய்முறை:
1.பச்சைப்பயறு அரை மணி நேரம் ஊர வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாகவும்,பச்சை மிளகாய் நீளமாகவும் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.
4.எற்கனவே வேக வைத்து எடுத்த பயறு போட்டு கொஞ்சமா தண்ணி சேர்த்து கிளரவேண்டும்.
5.மிளகு பொடி கொஞ்சம் போட்டு,உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்தா,சுண்டல் ரெடி !
3.பாஸ்டா
இது நம்ம ஊர்ல Macaroni-னு கிடைக்கும்.எஃலெஸ் இங்க வால்மார்ட்லயும் கிடைக்குது.சமைக்க சோம்பேறித்தனமா இருந்தா நாங்க சாப்பிடறது இது தான் :)
செய்முறை:
1.பாஸ்டாவை நல்லா முழுகும் அளவு தண்ணீரில் உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
2.அது நல்லா கொதிச்சு,தொட்டா Softah இருக்கும் போது இறக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் எண்ணை ஊற்றி,கடுகு,சீரகம் போட்டு வேக வைத்திருக்கும் பாஸ்டாவை போடவும்.
4.கொஞ்சமா மிளகாய்ப்பொடி போட்டு ஒரு முறை கிளரி விட வேண்டும்.
5.சூடா இருக்கும் போதே Tomato Sauce போட்டுக்கலாம். சீஸ் பிடிச்சவங்க அதையும் சேர்க்கலாம்.அது இல்லாமலே நல்லா இருக்கும்.
6.இதுல வெங்காயம் தக்காளி எல்லாம் பிடிச்சா சேக்கலாம்.
சரி இப்போ கொஞ்சம் டிப்ஸ் (விடறதா இல்லை :P)
1.வெங்காயம் சீக்கிரமா வதங்கனும்னா,எண்ணை இல்லாம வெறும் வானலில வதக்கலாம்.
2.சாம்பார்ல காரமோ,உப்போ ஜாஸ்தி ஆகிடுச்சா ஒரு சின்ன உருளைகிழங்க வெட்டிப் போட்டா சரி ஆகிடும்.
ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))
Saturday, July 26, 2008
கிச்சன் கில்லாடி
Monday, July 21, 2008
யுகப்புரட்சி
சூரியன் உதித்து சில நிமிடங்களே முடிந்து காலை பனி விலகாமல் ,இது சென்னை மாநகரம் தானா என்று வியக்கவைக்கும் அந்த ரம்மியமான காலை நேரத்தில்,சென்னையின் முக்கிய சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த நீல நிற ஆல்டோ கார்.
பித்தனையும் கவிதை என்று பிதற்ற வைக்கும் இந்த அற்புதமான தருணத்தை ரசிக்காமல் ஒரு முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறார்கள் ரமணன் ராஜி தம்பதி.
காரின் வேகம் குறைந்து கோபாலபுரத்திற்குள் நுழைந்து சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மணிமொழியன் வீட்டின் முன் நின்றது.
"ஏங்க நல்ல விதமா அமைச்சர் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா"
"நம்பிக்கையா இருமா, எங்க ஹாஸ்பிடல் டீனோட நல்ல நண்பர் இவரு.நம்மளோட உழைப்புல முழு நம்பிக்கை வெச்சுத்தான் எங்க டீன் நரசிம்மன் சார் நம்மள இங்க அனுப்பிருக்காரு"
ஒரு மாநில அமைச்சரை பார்க்க மேற்கொள்ளவேண்டிய அனைத்து கட்டுப்பாட்டு விதி முறைகளையும் செய்து முடித்து ஆவலுடன் அவருக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அரசியல் என்பதை ஒரு வியாபாரமாக கருதாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் திரு.மணிமொழியனும் ஒருவர்.சாதாரண மக்களும் அணுகக்கூடிய பண்பானவர்.
சொன்ன நேரத்திற்கு வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருக்கும் ரமணனையும்,ராஜியையும் நோக்கி கரம் குவித்து "வாங்க டாக்டர் ரமணன்.வாங்கம்மா"
"வணக்கம் சார்.உங்களோட பரபரப்பு நிறைந்த நாளில் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கினதுக்கு நன்றி சார்"
"அடடே முதல்ல நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது.நரசிம்மன் சார் உங்களப்பத்தி நிறைய பேசியிருக்காரு.ஒரு மணி நேரத்தை உங்க கூட இந்த விடிய காலையில் செலவழிப்பது பயனுள்ளதாகத்தான இருக்கும்னு எனக்கும் உங்க திறமை மேல நம்பிக்கை இருக்கு டாக்டர்.
மேலும் நீங்க நினைக்கலாம் என்னடா இவன் இதெல்லாம் ஆபீஸ்லயே வெச்சு பேசலாமேன்னு.ஆனா விடியகாலைல தான் நம்மளோட மூளை சுறுசுறுப்பா இயங்கும்.நீங்க சொல்லப்போறதை நான் நல்லா கிரகிக்க வேணும்னா இது தான் சரியான நேரம்னு நெனச்சேன்"
"ரொம்ப சந்தோஷம் சார்.நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நாம இப்போ பாக்கப்போறது எங்க இருவரோட சில கால ஆராய்ச்சியின் பலன்.கணிணி துறைல நாம நிறைய செய்யறோம்.அதை எப்படி நம்ம மருத்துவ துறைல இன்னும் சிறப்பா பயன்படுத்தலாம்னு நினைக்கும் போது உருவான கான்செப்ட் தான் இந்த ஹெல்த் மானிட்டர்."
"இன்டரெஸ்டிங்.மேல சொல்லுங்க"
ஒரு சின்ன மடிக்கணிணி போன்ற ஒன்றினை காண்பித்து "இது பயன்படுத்தறது ரொம்ப சுலபம்,ஒரு சாதாரண கம்பியூட்டர்ல லாகின் பண்றமாதிரி அவங்க பெயரை முதல்ல செலக்ட் பண்ணனும்.அப்புறம் முதல் தடவைன்னா,அவங்களோட பர்த் சர்டிபிகேட்-ல இருக்கும் நம்பர் கொடுக்கனும்,அதுவே அவங்க வயசு,அட்ரஸ் எல்லா விவரத்தையும் கொடுக்கும்.அதுக்கபுறம் அவங்க சுகர்,பிபி,ஈசிஜி எல்லா விவரத்தையும் இங்க இருக்கும் அதற்கேற்ற, மீட்டர்களில் பதிஞ்சிடனும்.
முக்கியமா அவங்க எந்த ஹாஸ்பிடல் போறாங்களோ அதை செலக்ட் பண்ணிட்டு இந்த அப்டேட் பட்டன் அழுத்திடீங்கன்னா, Web services மூலமா அந்த ஹாஸ்பிடல் டேடாபேஸ்-ல சேவ் ஆகிடும்".
"இதுக்கு எல்லா ஹாஸ்பிடல் விவரமும் திரட்டனும் இல்லியா?"
"இந்த திட்டத்தின் பெரும் பகுதி வெற்றியே அதுல தான் இருக்கு.டாக்டர்கள் எல்லாரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யறாங்க.அவங்க எல்லாரையும் இனைத்து,ஹாஸ்பிடல் எல்லாம் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலோ,இல்ல அரசு சார்ந்த ஹாஸ்பிடலாவோ இருக்கனும்.இந்த மாதிரி பண்ணா,எல்லா மக்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்"
"நீங்க சொல்றது நடைமுறைல வர கொஞ்சம் காலம் ஆகும்.ஆனா எல்லா மாறுதலும் இப்படி தானே தொடங்குது.மேல சொல்லுங்க"
"இப்போ ஒரு ஹாஸ்பிடல் எடுத்துகிட்டீங்கன்னா,எல்லா பேஷன்ட்கும் ஒரு தனி அக்கவுண்ட் வெச்சிருக்கனும்.ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வேணுமா இல்ல ஜிபி பொதுமான்னு அவங்க டீடெய்ல்ஸ் பாத்து மானேஜ்மெண்ட் ஆபீஸ்லயே கொடுத்திருவாங்க.இதுனால ஒவ்வொரு டாக்டருக்கும் சரியான அளவில பேஷன்ட்ஸ் இருக்காங்களான்னு தெரிஞ்சிடும்.டாகடர்ஸும் அவங்களுக்குனு இருக்கும் பேஷன்டோட அக்கவுண்ட் போயிட்டு அவங்க ஹிஸ்ட்ரி எல்லாம் பாத்திடுவாங்க"
"இதுனால திரும்ப எல்லா டெஸ்டும் எடுக்கும் கால விரயம், பண விரயம் எல்லாத்தையும் குறைக்கலாம்.இதுல வேற என்ன பயன்?"
"கண்டிப்பா சார்.இன்னும் இருக்கு.டாக்டர்ஸ், பேஷன்ட்ஸ் ட்ரீட்மென்ட் விவரம் எல்லாம் இதுல பதிஞ்சு இருக்கறதுனால,Business Intelligence மூலமா,ஒரு நாளைக்கு எவ்வளவு பேஷன்ட்ஸ் வராங்க,எவ்வளோ நபர்களுக்கு சரியாகுது,எந்த வியாதிகளுக்கு ட்ரீட்மென்ட் Procedures நல்லா இருக்கு இப்படி பல விதமாக ரிப்போர்ட்ஸ் கிடைக்குது.இதை வெச்சு மானேஜ்மெண்டோ,அரசோ முடிவெடுக்கலாம்", சொல்லும்போதே ராஜினியின் குறலில் நம்பிக்கை தெரித்தது.
"அருமை அருமை.இது தான் சிவனும் சக்தியும் சேர்ந்து,சிவசக்தியா ஒரு நல்ல வழி காட்டுவதா!எனக்கு இதை பற்றிய குறிப்பு எல்லாம் கொடுங்க.நேரம் இருக்கும் போது முதலமைச்சர் கிட்ட பேசறேன்.அருமையான திட்டமா தெரியுது"
"ரொம்ப நன்றி சார்,நாங்க சொல்ல வந்தத இவ்வளோ பாசிடிவ்வா நீங்க எடுத்துப்பீங்கன்னு நெனைக்கலே"
"இதுல்ல என்ன இருக்கு ரமணன் சார்,உங்கள மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யனும்,மருத்துவத்தை "மா" தவமா செய்பவரும்,உங்களுக்கு ஏற்ற துணையான உங்க மனைவி போன்ற மக்களையும் பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு"
ரமணனுக்கும் ராஜிக்கும் ஒரு யுகப்புரட்சிக்கு வித்திட்ட மகிழ்ச்சியில் மனது குதூகளித்தது.
P.S:
1. இக்கதை சிறில் அலெக்ஸ் அவர்களின் "அறிவியல் சிறுகதை" போட்டிக்காக எழுதியது!
2. இக்கதை ஹெல்த் மானிட்டர் பற்றிய செய்தியின் மேல் என்னுடைய கற்பனை கலந்து எழுதியது!
Sunday, July 13, 2008
அந்நிய மொழி படிக்கலாம் வாங்க
நாம தினமும் உபயோகப்படுத்தும் ஜிடாக்கல இந்த ரெண்டு பொண்ணுங்க எவ்ளோ நல்ல விஷயம் பேசிருக்காங்க பாருங்க
பிரியா:ஹாய் மாச்சா(மச்சி = Feminine Form என்று கொள்க) LTNS(Long Time No See)?
பூர்ணி:ஹாய்ய்ய்ய்ய் மாச்சா..எப்படி இருக்கே??
பிரியா:பாயின்டி எங்கே ஆளே ரொம்ப நாளா காணோம்?
பூர்ணி:கொஞ்சம் பிஜீ மாச்சா..ஆபீஸ், கிலாஸ்னு போகுது..
பிரியா:ஆபீஸ் சரி உங்க PL "நச்சு நாகய்யா" தொல்லை தாங்கலய்யா?அது சரி என்னடி கிலாஸ்னு எல்லாம் சொல்றே?
பூர்ணி:ஆமாடி நாங்களும் படிக்க ஆரம்பிச்சுடோம்ல
பிரியா:என்ன நடக்குது இங்க பூஸ்(பூர்ணி = செல்ல பெயர்)
பூர்ணி:ஆமாடி நான் ஜாப்பனீஸ் கத்துக்க அரம்பிச்சுட்டேன்..
பிரியா:என்னடி திடீர்னு ஜாப்பனீஸ் எல்லாம்?
பூர்ணி:ஆமா மேடம்..சொல்லு நீயும் பொட்டி தட்டரே,நானும் பொட்டி தட்டரேன்,மத்தவங்களைவிட நமக்கு ஒரு எட்ஜ் வேண்டாமா?
பிரியா:ஜாப்பனீஸ் கத்துகறதால என்ன பெரிய வித்தியாசம்?
பூர்ணி:பாருடி இப்போ நம்ம கம்பனீஸ் எல்லாம் ஈஸ்டு சய்ட் நிறைய கான்சன்ட்ரேட் பண்ண அரம்பிச்சிடாங்க..இந்த ஜப்பான் காரங்களுக்கு இங்கிலீஷ் பேசினாலும்,அவங்க ஆக்சென்ட்டு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு புரிஞ்சுக்க..அதுனால அந்த மக்கள் மோஸ்ட்டா ஜாப்பனீஸ்லயே டாகுமென்ட்ஸ் வெச்சிருக்காங்க.
பிரியா:அதுனால நீ ஜாப்பனீஸ் படிச்சிட்டு டிராலான்சுலேட் பண்ணபோறியா?
பூர்ணி:ஆமாடி பாரு அந்த மாதிரி கிலயின்ட்ஸ் கிட்ட அவங்க லாங்குவேஜ்ல பேசி நல்லா ரிக்குவியர்மெண்ட்ஸ் கலெக்ட் பண்ணவேண்டிருக்கும்.ஸோ நாம அவங்க மொழில பேசினா உபயோகமா இருக்கும் இல்லியா?
பிரியா:ஆமாடி என்னோட பிரண்டு TCS-ல டிரேயினிங்லயே சொல்லித்தறதா சொன்னா.நம்ம சித்தூ கூட விப்ரோ-ல ஹைதராபாத் போயி படிச்சேன்னு சொன்னால! சரி எங்க கத்துகற?
பூர்ணி:நம்ம நுங்கம்பாக்கம் ஐசிஐசிஐ பாங்குக்கு கிட்ட ABK AOTS DOSAKAI-னு ஒரு இடம் இருக்கு.
பிரியா:என்னடி தோசகாய ,பப்பூனு சொல்ற :P
பூர்ணி:அட கொல்டி பெண்ணே நான் சொன்னது அந்த சென்டர் பேருடி ..கிர்ர்ர்
பிரியா:சரி சரி :D மேல சொல்லு
பூர்ணி:ஹம்..நான் சொல்றத கேளு..இந்த லாங்குவேஜ் படிக்க 4 லெவெல்ஸ் இருக்கு..JLPT எக்ஸாம்ஸ்னு சொல்வாங்க.லெவெல் 1 பாத்தீன்னா ரொம்ப பேஸிக்.
பிரியா:ஹேய் அவங்க எல்லாத்தயுமே படம் படமா வரையவாங்களே?
பூர்ணி:ஆமாடி ரெண்டு விதமான எழுத்து முறை இருக்கு ஹீராகானா கதக்கானானு..அப்புறம் நீ சொல்ற படங்களை காஞ்சினு சொல்வாங்க..லெவெல் 1 ல 200 காஞ்சி தான் இருக்கு..21 லெசன்ஸ் தான் இருக்கு..."இது பேனா","அது புத்தகம்" இது போல..
பிரியா: சூப்பர்டி ..ஈஸியா?
பூர்ணி: பாரு "வதாஷிவா பூர்ணி தெசு"(நான் பூர்ணிமா)","வதாஷிவா நிஹங்கோனோ ககுசேய் தெசு(நான் ஜாப்பனீஸ் ஸ்டூடெண்ட்)அப்படின்னு ரொம்ப சிம்பிள் ..குட்டி பசங்கலேர்ந்து..பெரிய அங்கிள்ஸ்,ஆன்டீஸ் கூட கத்துக்கறாங்க :)
பிரியா:நீ சொல்றதெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு..காஸ்டிலியா இருக்குமோ?
பூர்ணி:இல்ல மாச்சா லெவெல் 1 கிலாஸ்க்கு Rs .3000/- தான் ஒரு வருஷத்துக்கு..நல்லாவே சொல்லிதறாங்க.
பிரியா:இது சூப்பரு..ஆமா எப்ப போற கிலாஸ்க்கு?
பூர்ணி:சண்டேஸ் காலைல 8.30 க்கு ஆரம்பிக்குது..3 மணிநேரம் கிலாஸ்
பிரியா:என்ன!! விடியகாலைல சொல்றே :((
பூர்ணி:போடி இவளே வாரத்துல ஒரு நாள் தானே..படிச்சா கை மேல பலன்.வேணும்னா நீ அடுத்த ஸ்லாட் வா, ஆனா நம்ம சென்னை வெயிலுக்கு 12.00 மணிக்கு முடிச்சிறது நல்லது தானே?
பிரியா: என்ன சொல்றே..கை மேல பலனா?
பூர்ணி:ஆமாடி ..நீ ஆபீஸ்ல உபயோக படுத்தாட்டியும் ஒரு மொழி கத்துகிட்ட மாதிரியும் இருக்கும்..நீயே ஒரு டிரான்சுலேட்டர் மாதிரியும் ஆகலாம்.
பிரியா:ஒ நம்ம சிங்கர் சின்மயி பண்ற மாதிரியா?
பூர்ணி:ஹேய் ஹோல்ட் ஆன் ஆசை படு பேராசை படாதே.முதல்ல கிலாஸ் சேரு :))
பிரியா:சரிங்க மேடம் ..எப்போ ஆரம்பிக்கராங்க?
பூர்ணி: இந்த எக்ஸாம்ஸ் ஒரு வருஷத்துக்கு ஒன்னு தான்..எல்லா டிசம்பர் மாசமும் நடக்கும்..என்னோட நாளைக்கி வா நானே சேர்த்துவிடறேன் :))
பிரியா :சரிடி ஷுர்..ஹேய் இத அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்
பூர்ணி:யாரு அவளுக்கா? இத கூட கொஞ்சம் மாத்தி ஒரு போஸ்ட் போட்டிருவா..போட்டதோட மாச்சாஸ் என்னோட புது போஸ்டு படிங்கனு ஒரு மெயில் நமக்கே தட்டிருவா ..கிர்ர்ர்
பிரியா:விடுடி ஏதோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போயி சேருது இல்லியா?
பூர்ணி:அதுவும் கரெக்ட்தான்..ஒகேடி மாச்சா..பை பை.
பிரியா: ஒகே பை நாளைக்கு கால் பண்றேன்...
என்ன மக்களே நான் பண்ணது கரெக்ட்தானே..இவங்க சொன்னத நான் உங்களுக்கு சொல்லிட்டேன்..என்ன நாமளும் போலமா??
Monday, July 7, 2008
பாசவலை
தொப்புள் கொடி உறவு தந்த தாயின் அரவணைப்பில்
கண்டிப்பு கலந்த தந்தையின் கரிசனத்தில்
குட்டி தங்கையின் சுட்டி சிரிப்பில்
கள்ளமில்லா தூய நட்பின் நேசத்தில்
மரு-மகளாக சென்ற வீட்டினரின் பாசத்தில்
கணவனாகிப்போன ஆசை காதலனின் அணைப்பில்
தனக்குள் ஜனித்த சிசுவின் முதல் அசைவில்
தான் பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசத்தில்
அவள் குழந்தைக்கு பிறந்த குழந்தையின் மழலை மொழியில்
தான் கட்டுண்டு கிடப்பதை எண்ணி பெருமிதத்துடன் மகிழ்ச்சியில்
அது பாசவலை என்று உலகிற்கு பறைசாற்றுகிறாள் பெண்