சூரியன் உதித்து சில நிமிடங்களே முடிந்து காலை பனி விலகாமல் ,இது சென்னை மாநகரம் தானா என்று வியக்கவைக்கும் அந்த ரம்மியமான காலை நேரத்தில்,சென்னையின் முக்கிய சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த நீல நிற ஆல்டோ கார்.
பித்தனையும் கவிதை என்று பிதற்ற வைக்கும் இந்த அற்புதமான தருணத்தை ரசிக்காமல் ஒரு முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறார்கள் ரமணன் ராஜி தம்பதி.
காரின் வேகம் குறைந்து கோபாலபுரத்திற்குள் நுழைந்து சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மணிமொழியன் வீட்டின் முன் நின்றது.
"ஏங்க நல்ல விதமா அமைச்சர் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா"
"நம்பிக்கையா இருமா, எங்க ஹாஸ்பிடல் டீனோட நல்ல நண்பர் இவரு.நம்மளோட உழைப்புல முழு நம்பிக்கை வெச்சுத்தான் எங்க டீன் நரசிம்மன் சார் நம்மள இங்க அனுப்பிருக்காரு"
ஒரு மாநில அமைச்சரை பார்க்க மேற்கொள்ளவேண்டிய அனைத்து கட்டுப்பாட்டு விதி முறைகளையும் செய்து முடித்து ஆவலுடன் அவருக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அரசியல் என்பதை ஒரு வியாபாரமாக கருதாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் திரு.மணிமொழியனும் ஒருவர்.சாதாரண மக்களும் அணுகக்கூடிய பண்பானவர்.
சொன்ன நேரத்திற்கு வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருக்கும் ரமணனையும்,ராஜியையும் நோக்கி கரம் குவித்து "வாங்க டாக்டர் ரமணன்.வாங்கம்மா"
"வணக்கம் சார்.உங்களோட பரபரப்பு நிறைந்த நாளில் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கினதுக்கு நன்றி சார்"
"அடடே முதல்ல நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது.நரசிம்மன் சார் உங்களப்பத்தி நிறைய பேசியிருக்காரு.ஒரு மணி நேரத்தை உங்க கூட இந்த விடிய காலையில் செலவழிப்பது பயனுள்ளதாகத்தான இருக்கும்னு எனக்கும் உங்க திறமை மேல நம்பிக்கை இருக்கு டாக்டர்.
மேலும் நீங்க நினைக்கலாம் என்னடா இவன் இதெல்லாம் ஆபீஸ்லயே வெச்சு பேசலாமேன்னு.ஆனா விடியகாலைல தான் நம்மளோட மூளை சுறுசுறுப்பா இயங்கும்.நீங்க சொல்லப்போறதை நான் நல்லா கிரகிக்க வேணும்னா இது தான் சரியான நேரம்னு நெனச்சேன்"
"ரொம்ப சந்தோஷம் சார்.நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நாம இப்போ பாக்கப்போறது எங்க இருவரோட சில கால ஆராய்ச்சியின் பலன்.கணிணி துறைல நாம நிறைய செய்யறோம்.அதை எப்படி நம்ம மருத்துவ துறைல இன்னும் சிறப்பா பயன்படுத்தலாம்னு நினைக்கும் போது உருவான கான்செப்ட் தான் இந்த ஹெல்த் மானிட்டர்."
"இன்டரெஸ்டிங்.மேல சொல்லுங்க"
ஒரு சின்ன மடிக்கணிணி போன்ற ஒன்றினை காண்பித்து "இது பயன்படுத்தறது ரொம்ப சுலபம்,ஒரு சாதாரண கம்பியூட்டர்ல லாகின் பண்றமாதிரி அவங்க பெயரை முதல்ல செலக்ட் பண்ணனும்.அப்புறம் முதல் தடவைன்னா,அவங்களோட பர்த் சர்டிபிகேட்-ல இருக்கும் நம்பர் கொடுக்கனும்,அதுவே அவங்க வயசு,அட்ரஸ் எல்லா விவரத்தையும் கொடுக்கும்.அதுக்கபுறம் அவங்க சுகர்,பிபி,ஈசிஜி எல்லா விவரத்தையும் இங்க இருக்கும் அதற்கேற்ற, மீட்டர்களில் பதிஞ்சிடனும்.
முக்கியமா அவங்க எந்த ஹாஸ்பிடல் போறாங்களோ அதை செலக்ட் பண்ணிட்டு இந்த அப்டேட் பட்டன் அழுத்திடீங்கன்னா, Web services மூலமா அந்த ஹாஸ்பிடல் டேடாபேஸ்-ல சேவ் ஆகிடும்".
"இதுக்கு எல்லா ஹாஸ்பிடல் விவரமும் திரட்டனும் இல்லியா?"
"இந்த திட்டத்தின் பெரும் பகுதி வெற்றியே அதுல தான் இருக்கு.டாக்டர்கள் எல்லாரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யறாங்க.அவங்க எல்லாரையும் இனைத்து,ஹாஸ்பிடல் எல்லாம் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலோ,இல்ல அரசு சார்ந்த ஹாஸ்பிடலாவோ இருக்கனும்.இந்த மாதிரி பண்ணா,எல்லா மக்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்"
"நீங்க சொல்றது நடைமுறைல வர கொஞ்சம் காலம் ஆகும்.ஆனா எல்லா மாறுதலும் இப்படி தானே தொடங்குது.மேல சொல்லுங்க"
"இப்போ ஒரு ஹாஸ்பிடல் எடுத்துகிட்டீங்கன்னா,எல்லா பேஷன்ட்கும் ஒரு தனி அக்கவுண்ட் வெச்சிருக்கனும்.ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வேணுமா இல்ல ஜிபி பொதுமான்னு அவங்க டீடெய்ல்ஸ் பாத்து மானேஜ்மெண்ட் ஆபீஸ்லயே கொடுத்திருவாங்க.இதுனால ஒவ்வொரு டாக்டருக்கும் சரியான அளவில பேஷன்ட்ஸ் இருக்காங்களான்னு தெரிஞ்சிடும்.டாகடர்ஸும் அவங்களுக்குனு இருக்கும் பேஷன்டோட அக்கவுண்ட் போயிட்டு அவங்க ஹிஸ்ட்ரி எல்லாம் பாத்திடுவாங்க"
"இதுனால திரும்ப எல்லா டெஸ்டும் எடுக்கும் கால விரயம், பண விரயம் எல்லாத்தையும் குறைக்கலாம்.இதுல வேற என்ன பயன்?"
"கண்டிப்பா சார்.இன்னும் இருக்கு.டாக்டர்ஸ், பேஷன்ட்ஸ் ட்ரீட்மென்ட் விவரம் எல்லாம் இதுல பதிஞ்சு இருக்கறதுனால,Business Intelligence மூலமா,ஒரு நாளைக்கு எவ்வளவு பேஷன்ட்ஸ் வராங்க,எவ்வளோ நபர்களுக்கு சரியாகுது,எந்த வியாதிகளுக்கு ட்ரீட்மென்ட் Procedures நல்லா இருக்கு இப்படி பல விதமாக ரிப்போர்ட்ஸ் கிடைக்குது.இதை வெச்சு மானேஜ்மெண்டோ,அரசோ முடிவெடுக்கலாம்", சொல்லும்போதே ராஜினியின் குறலில் நம்பிக்கை தெரித்தது.
"அருமை அருமை.இது தான் சிவனும் சக்தியும் சேர்ந்து,சிவசக்தியா ஒரு நல்ல வழி காட்டுவதா!எனக்கு இதை பற்றிய குறிப்பு எல்லாம் கொடுங்க.நேரம் இருக்கும் போது முதலமைச்சர் கிட்ட பேசறேன்.அருமையான திட்டமா தெரியுது"
"ரொம்ப நன்றி சார்,நாங்க சொல்ல வந்தத இவ்வளோ பாசிடிவ்வா நீங்க எடுத்துப்பீங்கன்னு நெனைக்கலே"
"இதுல்ல என்ன இருக்கு ரமணன் சார்,உங்கள மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யனும்,மருத்துவத்தை "மா" தவமா செய்பவரும்,உங்களுக்கு ஏற்ற துணையான உங்க மனைவி போன்ற மக்களையும் பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு"
ரமணனுக்கும் ராஜிக்கும் ஒரு யுகப்புரட்சிக்கு வித்திட்ட மகிழ்ச்சியில் மனது குதூகளித்தது.
P.S:
1. இக்கதை சிறில் அலெக்ஸ் அவர்களின் "அறிவியல் சிறுகதை" போட்டிக்காக எழுதியது!
2. இக்கதை ஹெல்த் மானிட்டர் பற்றிய செய்தியின் மேல் என்னுடைய கற்பனை கலந்து எழுதியது!
Monday, July 21, 2008
யுகப்புரட்சி
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
வாழ்த்துக்கள் டீச்சர்....
முதல் கதை அதுவும் போட்டிக் கதை.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் கதைகள் எழுத இன்னுமொரு வாழ்த்துக்கள்....
இவன்,
கணக்கு பரிட்சையில் ஃபெயில் ஆன ஜப்பானிய மாணவன்... :)))
வாழ்த்துக்கள் ரம்யா.
நல்ல கான்ஸெப்ட்.
போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா:))
கதையெல்லாம் சூப்பரா எழுத ஆரம்பிச்சுட்டீங்க ரம்யா, கலக்கல்ஸ்!!!
தொடர்ந்து நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்!!
போட்டிக்கான உங்கள் கதைக்கு முதல் பின்னூட்டமே.....ஒரு 'தலை'சிறைந்த கதாசாரியரிடம் இருந்து வந்திருக்கிறது, நிச்சயம் நீங்க பெரிய எழுத்தாளாராக வருவீங்க ரம்யா:))
'மருத்துவ துறையில் கணிணி உபயோகம்' பற்றிய உபயோகமான தகவல்களுடன் கதை அருமையா இருக்கு ரம்யா!!
வாழ்த்துகள்....
நல்ல துவக்கம்...
ரொம்ப நல்லா இருக்கு.......
உங்க ப்ராஜெக்ட் scope documentடையும் கற்பனையையும் கலந்து கதை எழுதியிருக்கீறீர்கள் என்று நினைகிறேன்..........its nice.
//சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மணிமொழியன் வீட்டின் முன் நின்றது.//
என்னை சுகாதரத்துறை அமைச்சராக்கினதுக்கு நன்றி நன்றி :)
//அரசியல் என்பதை ஒரு வியாபாரமாக கருதாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் திரு.மணிமொழியனும் ஒருவர்.சாதாரண மக்களும் அணுகக்கூடிய பண்பானவர்.//
என்னை “நல்லவன்”ன்னு சொல்லிட்டீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Good work rammiaaa :):)
too mujj of jarkand and techie words
but pure tamil kadhai
i loved it
nice way to start off things
This is Mani
இந்த மாதிரி விதயங்கள் சிங்கை போன்ற நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..
மருத்துவமனைக்குச் சென்றாலே நமது மருத்துவ வரலாறு மருத்துவரிடம் தயாராக இருக்கும்.
இத்தனைக்கும் சிங்கை இந்தியாவுக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற ஒரு நாடு.
நமக்கு இது யுகப் புரட்சியாகத் தோன்றுவது இந்தியாவின் சாபக்கேடு !!!!
ஆஹா... ரம்யாவின் அடுத்த படைப்பு... ஒவொரு படைப்பும் ஒவொரு பரிமானம்... ஒரு தேர்ந்த எழுத்தாளர் உருவாகும் மகிழ்வுடன் என் உளம் கவர்ந்த வாழ்த்துகள்...
\\ஜி said...
வாழ்த்துக்கள் டீச்சர்....
முதல் கதை அதுவும் போட்டிக் கதை.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் கதைகள் எழுத இன்னுமொரு வாழ்த்துக்கள்....
இவன்,
கணக்கு பரிட்சையில் ஃபெயில் ஆன ஜப்பானிய மாணவன்... :)))
\\
கதாசிரியரே நெம்ப நன்றி :))
\\சதங்கா (Sathanga) said...
வாழ்த்துக்கள் ரம்யா.
நல்ல கான்ஸெப்ட்.
\\
நன்றி சதங்கா :)
\\Divya said...
போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்யா:))
\\
நன்றி திவ்யா :)
\\Divya said...
போட்டிக்கான உங்கள் கதைக்கு முதல் பின்னூட்டமே.....ஒரு 'தலை'சிறைந்த கதாசாரியரிடம் இருந்து வந்திருக்கிறது, நிச்சயம் நீங்க பெரிய எழுத்தாளாராக வருவீங்க ரம்யா:))
\\
திவ்யா சரியா சொன்னீங்க, உங்களைப்போன்ற நண்பர்கள் இருக்க பயமேன் :))
\\வெட்டிப்பயல் said...
வாழ்த்துகள்....
நல்ல துவக்கம்...
\\
நன்றி அண்ணா :))
\\R A J A said...
ரொம்ப நல்லா இருக்கு.......
உங்க ப்ராஜெக்ட் scope documentடையும் கற்பனையையும் கலந்து கதை எழுதியிருக்கீறீர்கள் என்று நினைகிறேன்..........its nice.
\\
நன்றி ராஜா :))
\\மணிமொழியன் said...
//சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மணிமொழியன் வீட்டின் முன் நின்றது.//
என்னை சுகாதரத்துறை அமைச்சராக்கினதுக்கு நன்றி நன்றி :)
//அரசியல் என்பதை ஒரு வியாபாரமாக கருதாமல் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளில் திரு.மணிமொழியனும் ஒருவர்.சாதாரண மக்களும் அணுகக்கூடிய பண்பானவர்.//
என்னை “நல்லவன்”ன்னு சொல்லிட்டீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
\\
மணிமொழியன் வருகைக்கு நன்றி :))
\\Anonymous said...
Good work rammiaaa :):)
too mujj of jarkand and techie words
but pure tamil kadhai
i loved it
nice way to start off things
This is Mani
\\
மணி அண்ணா "What a Surprise!" ரொம்ப நன்றி :))
\\ அறிவன்#11802717200764379909 said...
இந்த மாதிரி விதயங்கள் சிங்கை போன்ற நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..
மருத்துவமனைக்குச் சென்றாலே நமது மருத்துவ வரலாறு மருத்துவரிடம் தயாராக இருக்கும்.
இத்தனைக்கும் சிங்கை இந்தியாவுக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற ஒரு நாடு.
நமக்கு இது யுகப் புரட்சியாகத் தோன்றுவது இந்தியாவின் சாபக்கேடு !!!!
\\
ஒ சிங்கையில் இருக்கா..தகவலுக்கு நன்றி இக்கதை ஹெல்த் மானிட்டர் பற்றிய செய்தியின் மேல் என்னுடைய கற்பனை கலந்து எழுதியது!
\\priyamanaval said...
ஆஹா... ரம்யாவின் அடுத்த படைப்பு... ஒவொரு படைப்பும் ஒவொரு பரிமானம்... ஒரு தேர்ந்த எழுத்தாளர் உருவாகும் மகிழ்வுடன் என் உளம் கவர்ந்த வாழ்த்துகள்...
\\
நன்றி பிரியா :))
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
பித்தனையும் கவிதை என்று பிதற்ற வைக்கும் இந்த அற்புதமான தருணத்தை ரசிக்காமல் ஒரு முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறார்கள் ரமணன் ராஜி தம்பதி.
//
அழகான வரிகள் :))
!!! eponga post poteega...sollavayla..nice concept..aaall d besstu for the kaampetition
கதையையும் மீறி உங்கள் பதிவில் பொதிந்திருக்கும் விஷயம் தான் வியக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி வழிப்போக்கன் :)
மிக்க நன்றி கில்ஸ் :)
\\விஜய் said...
கதையையும் மீறி உங்கள் பதிவில் பொதிந்திருக்கும் விஷயம் தான் வியக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள்
\\
நன்றி விஜய் :)
hai... story super
நல்ல பாசிடிவ் பாத்திரங்களை மட்டுமே உள்ளடக்கிய அருமையானக் கதை, வெற்றி பெற வாழ்த்துக்கள் ரம்யா ரமணி :):):)
நன்றி anonymous :)
நன்றி rapp :)
//போட்டிக்கான உங்கள் கதைக்கு முதல் பின்னூட்டமே.....ஒரு 'தலை'சிறைந்த கதாசாரியரிடம் இருந்து வந்திருக்கிறது//
En intha raththa veri??
Enna vatchi comedy kemadi pannalaiye??
//வாழ்த்துகள்....
நல்ல துவக்கம்...//
repeeeettteeyyy :))
\\ஜி said...
//போட்டிக்கான உங்கள் கதைக்கு முதல் பின்னூட்டமே.....ஒரு 'தலை'சிறைந்த கதாசாரியரிடம் இருந்து வந்திருக்கிறது//
En intha raththa veri??
Enna vatchi comedy kemadi pannalaiye??
\\
ஜி உங்கள யாராவது அப்ப்டி சொல்வாங்களா! எல்லாம் 100% உண்மை :))
\\கப்பி பய said...
//வாழ்த்துகள்....
நல்ல துவக்கம்...//
repeeeettteeyyy :))
\\
நன்றி கப்பி :)
ம்ம், வெரிகுட். இதே போல நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.
இந்த கதைக்கு இரண்டாம் பின்னூட்டமே ஒரு பெரிய்ய்ய கதயாசிரியை கிட்ட இருந்து வந்ருப்பது நல்ல விஷயம். :p
- இப்படிக்கு கணக்கு கிளாசுக்கு கட் அடித்த ஜப்பான் மொழியில் 100 மார்க் வாங்கின குழந்தை. :))
A small correction, அது மூணாவது பின்னூட்டம்னு இருந்ருக்கனும்.
@சதங்கா கோச்சுகாதீங்க, நீங்களும் பெரிய ஓவியர் தான். :))
\\ambi said...
ம்ம், வெரிகுட். இதே போல நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.
இந்த கதைக்கு இரண்டாம் பின்னூட்டமே ஒரு பெரிய்ய்ய கதயாசிரியை கிட்ட இருந்து வந்ருப்பது நல்ல விஷயம். :p
- இப்படிக்கு கணக்கு கிளாசுக்கு கட் அடித்த ஜப்பான் மொழியில் 100 மார்க் வாங்கின குழந்தை. :))
\\
ஹா ஹா அம்பி ட்ச் :))100% correct!!
நன்றி அண்ணா.. ஆனா குழந்தை எல்லாம்!! ஒன்னும் சொல்றதுக்கு இல்லை :))
ரொம்ப நல்லாவும், informative வாவும் இருக்குது ரம்யா…அதுலும் வார்தைகள நீங்க கையாண்டு இருக்கிர விதம், மிக தெளிவா இருக்கு.
//சூரியன் உதித்து சில நிமிடங்களே முடிந்து காலை பனி விலகாமல் ,இது சென்னை மாநகரம் தானா என்று வியக்கவைக்கும் அந்த ரம்மியமான காலை நேரத்தில்
நீங்க சொல்றது நடைமுறைல வர கொஞ்சம் காலம் ஆகும்.ஆனா எல்லா மாறுதலும் இப்படி தானே தொடங்குது
மருத்துவத்தை "மா" தவமா செய்பவரும்//
இதெல்லாம் நச் வசனங்கள்…கதை போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் ரம்யா…
வாழ்த்துக்கள்
அக்கா அறிவியல் சிறுகதைலாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. !! வாழ்த்துக்கள்.. !! ;) ;)
விரிவா கோடிட்டு சொன்னதுக்கும், வாழ்துக்கும் நன்றி திவ்யப்ரியா
நன்றி திகழ்மிளிர்
நன்றி alb
Romba nalla concepta romba azhaga sonna vidatukaaga....ungalukku paaratukkal.
reminds me of sujata's style of explaining things.
One personal suggestion - avara maadiriaye konjam humour anga anga serteengana...neenga 4 kku badila 6 er adpeenga :-)
@harish,
Thanks for comments..Will surely try to put in best efforts next time :))
@ambi
\\\இந்த கதைக்கு இரண்டாம் பின்னூட்டமே ஒரு பெரிய்ய்ய கதயாசிரியை கிட்ட இருந்து வந்ருப்பது நல்ல விஷயம். :p\\\
????
\\ ambi said...
A small correction, அது மூணாவது பின்னூட்டம்னு இருந்ருக்கனும்.\\
ஹாய் அம்பி....ஏன்....எதற்கு....இப்படி??
எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்....:((((
Divya Madam,
Avar solradhu correct dhane!
Nanum solren repeattuuu...
\\ Ramya Ramani said...
Divya Madam,
Avar solradhu correct dhane!
Nanum solren repeattuuu...\\
You too Brutus....:((((
நல்ல கருத்தை வச்சு கதை பண்ணியிருக்கீங்க :) வாழ்த்துகள் ரம்யா.
நன்றி கவிநயா :)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி வினையூக்கி :)
போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் டீச்சர்....
நன்றி ஆயில்யன் :))
நல்ல Concept, அழகான கதையா சொல்லி இருக்கீங்க
வாழ்த்துக்கள் ரம்யா.. :)
என்னோட Blog பாருங்க...
நன்றி நாணல் விரைவில் நீங்கள் இட்ட பணியை முடிக்கின்றேன்
முதல் கதை அதுவும் போட்டிக் கதை.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் கதைகள் எழுத இன்னுமொரு வாழ்த்துக்கள்....
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி ரம்யா
@ஸ்ரீ
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி
Post a Comment