Sunday, August 31, 2008

Blogging Friends Forever Award

எனக்கு இந்த அவார்ட் கொடுத்த அச்சச்சோ புகழ்-ஸ்ரீ, விஜய்,முகுந்தன் இவங்க எல்லோருக்கும் நன்றி.

நானும் இன்னும் 5 பேருக்கு தரணுமாம். நமக்கு நிறைய மக்களை தெரியுமே,நண்பர்களாச்சே யாருக்கு கொடுக்கலாம் நினைச்சா, சரிடாப்பா எல்லாரையும் சொல்லிட்டே வந்தா போச்சுன்னு தோணிச்சு..
ஸோ மக்களே ஒரு மினி கூகுள் ரீடரே இங்க குறிப்பிட்டிருக்கேன் .. சொல்ப அட்ஜஸ்டு மாடி :)

1.கவிதை, கதை இரண்டும் வெவ்வேறு விஷயம்ன்னு நினைச்சிட்டிருந்த எனக்கு..இரண்டுமே சேர்ந்தே இருப்பது அப்படின்னு விளக்கி,என்ன தமிழ்ல எழுத ஊக்கப்படுத்தின திவ்யா மாஸ்டர்க்கு முதல்ல நன்றி.

2.கவிதைக்கு விளக்கவுரை கேட்ட என்னை கவுஜ எல்லாம் படிக்க வெச்சு , இப்பல்லாம் நானும் எழுத முயற்சி பண்ணும் அளவுக்கு ஊக்கப்படுத்தின "தல" ஜி க்கு அடுத்து நன்றி :)

3.கதையெல்லாம் எப்படி எழுதறதுன்னு எனக்கு "கிராஷ் கோர்ஸ்" எடுத்த ஜாவா பாவலர், உயர்திரு தமிழ் அய்யா கப்பி நிலவருக்கு அடுத்து நன்றி :)

4.இவருக்கு பல விஷயம் தண்ணிபட்ட பாடு போல மிக மிக சுலபா வருது. பேனாவோ இல்ல கீபோர்டுன்னு சொன்னா,தூரிகையோ,கரண்டியோ இவர் சொல்ற பேச்ச அப்படியே கேக்குதாம். யாரு தெரியுதா சதங்கா அண்ணன் தான். அடடே அவர் பத்தி எழுதும் போதே இப்படியெல்லாம் எழுத தோணுதே..நீங்கள்ளாம் அவரோட சமீபத்திய கதை படிக்கனும், கவிதாயினி "ராமலஷ்மி" மேடமும் அவரும் பின்னூட்டத்திலே பேசிக்கறதுக்காகவே நானெல்லாம் கதை படிக்கறேன் :)

5.நச் நச் கவிதை,கதை,ஆன்மீகம்ன்னு எழுதும் கவிநயா அக்கா..அட சொல்ல மறந்திட்டேனே இவங்க பாட்டும் சூப்பர்..சின்ன பொண்ணு வாய்ஸ் மாதிரியே ஸோ சுவீட் :)

சின்ன வயசுல எங்க பாட்டி சாதம் பிசைஞ்சு தரும் போது கடைசி வாய் சாதம் கொடுக்கும்போது "யானை குட்டி போல"ன்னு சொல்வாங்க..அது மாதிரி அஞ்சோட நிறுத்தாம நம்ம மத்த நண்பர்களையும் குறிப்பிடாம இருந்தா எப்படி..ஸோ ஹியர் கோஸ் தி லிஸ்ட் :))


ஆடு புலி ஆட்டத்துல பிஜியா இருக்கும் வெட்டி அண்ணன், கவிதாயினி பிரியா ,கதை+கவிதை+நகைச்சுவை எழுத்தாளர் திவ்யபிரியா,வெட்டிவம்பு விஜய்,எங்க ஊருக்காரரு முகுந்தன்,கவிதாயினி நாணல்,கவிதாயினி ஸ்ரீ, கவிதாயினி கார்த்திகா,கவிதாயினி ராமலஷ்மி மேடம், கவிஞர்கள் சதீஷ், சரவணகுமார்,ஸ்ரீ-ஒற்றை அன்றில், அம்பி அண்ணன், தங்கிலிஷ்லயே எழுதும் கில்ஸ் அண்ணாச்சி,தேண்கிண்ண சூறாவளி மை ஃபரண்டு,ரிலாக்ஸ் ப்ளீஸ் கயல் வருண்,சிங்கைல படிக்கும் துர்கா,ஜி3 அக்கா,தமிழ்மாங்கனி, வழிப்போக்கன்,இவன்,தாரணிபிரியா, தொடுவானம் தீபா,சமீபத்தில அறிமுகமான சுந்தர்,முருக்ஸ் எல்லோருக்குமே இந்த அவார்ட் என் சார்பா கொடுத்து நன்றி சொல்லிக்கரேனுங்கோ!

Thursday, August 21, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-4

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

வியந்து நிற்க்கும் மஹேஷைக்கண்டு சிரிப்போடு,"என்ன மஹேஷ் அப்படி பாக்கற, என்ன நான் சொன்னது தான் நடக்க போகுதா?"என்றார்


"என்ன பாட்டி இப்படி கேக்கறீங்க அப்ப இது உங்க கெஸ்ஸா??"


"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"


"யப்பா பாட்டி நீங்க 2 பொண்ணு, 2 பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருக்கீங்கன்னு ப்ரூவ் பண்றீங்க.ஆனா பாட்டி அப்பா தான் கோவில்ல மீட் பண்ணலாம்னு சொன்னாரே அதுக்குள்ளே இது தேவையான்னு தான் யோசனையா இருக்கு"


"கோவில்ல பேசும்போது அவங்களுக்கு ப்ரைவஸி கிடைக்கும்னு நினைக்கறியா? சாதாரணமா தானே பேசப்போறா எந்த பிரச்சனையும் வராது.உத்ரா நல்ல புத்திசாலி எங்க எப்படி பேசனும்னு தெரியும்."


"மெதுவா பாட்டி கேட்டா அப்படியே உச்சி குளுர்ந்திடும் அவளுக்கு,இப்பவே என்ன பேசறதுன்னு உங்க கிட்ட தான் கேக்க போறாளாம்"


ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்தார் முதியவர்.


சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று, வீட்டில் ஆமைவேகத்தில் வேலைகள் நடந்தன.


சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.இது குடும்பத்தில் பினைப்பிற்க்கும்,பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும் என்பதில் சங்கரன் ரேவதி தம்பதிக்கு திடமான நம்பிக்கை இருந்தது.


அதே போல் அன்றும் அனைவரும் பேச அமர்ந்தும், எல்லோர் மனதிலும் ஒரு யோசனை இருப்பதைப்பாத்த உத்ரா இது தன்னைப்பற்றி தான் என்று முடிவுக்கு வந்தாள். நாமே இதை சரிசெய்யலாம் என்று நினைத்தவளாய் தந்தையிடம் சென்றாள்.


"அப்பா நான் சொல்றத கேட்டு நீங்க கோவப்படகூடாது.பிராமிஸ் பண்ணுங்க"


"என்னமா நான் தேவையில்லாம உங்கள திட்டிருக்கேனா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுடா"என்று அவள் தலையை கோதியவாறே கூறினார்.


"ஹிம்ம் அப்பா இது நேத்து நம்ம வீட்ல நடந்தத பத்தி தான். ஒவ்வொருத்தரும் எதையும் "Presume"பண்ணாம வெளிப்படையா பேசுவோம். நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்.

அவரும் நானும் ஜெனரலா பேசினோம்.வேலை டென்சன்ல சரியா பேச முடியாததுனால போன்ல பேசலாமான்னு கேட்டாரு,நான் தயங்கினதுனால அவர் நம்பர் கொடுத்திருக்காரு பேசச்சொல்லிருக்காரு.ஆனா உங்களுக்கு தெரியாம நான் எதுவுமே செய்து பழக்கம் இல்லாத்தினால உங்ககிட்ட சொல்றேன்.நீங்க என்னப்பா சொல்றீங்க?"


"உத்ரா எனக்கு உன்னப்பார்த்தா பெருமையா இருக்குமா.சரி இதை சொல்லு பேசினத வெச்சு என்ன பீல் பண்றே"


வெட்கத்துடனே"அப்பா அவரு ரொம்ப நல்லா பேசறாரு.அம்மா அப்பா மேல மதிப்பா இருக்காரு.I think he is closely connected to his family"


"உத்ரா நீ ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ இன்னிக்கி பாக்கற கவுதம் வானத்திலேர்ந்து வரலே,அவரை இப்போ இந்த நிலமைக்கு கொண்டு வந்தது அவரோட அம்மா அப்பா தான். நாளைக்கே கல்யாணத்திற்க்கு அப்புறம் அவங்க அம்மாவ 'அம்மா'ன்னு மனசாற கூப்பிடறது உத்தமம்.

அப்பா உன்கிட்ட இப்போ கேக்கறது உன்னோட கனவைப்பத்தி.நமக்கு வரவரு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு உனக்கு எண்ணம் இருக்கலாம்.அதை அவர் மீட் பண்றாரா?" மகளின் தாயகவும்,கணவனின் மனதைப்படித்தவர் போலவும் ரேவதி பேசினார்.


"அம்மா கண்டிப்பா எப்படி அவரு அம்மா மாதிரி வைப் இருக்கனும்னு சொல்றாரோ அதே மாதிரி எனக்கும் வரவரு அப்பா மாதிரி ஆர்கனைஸ்டா,மஹேஷ் மாதிரி என்ன நக்கல் அடிச்சாலும் என் மேல கேரோட இருக்கனும்னு பீல் பண்ணுவேன். இவங்க தானே என்னோட ஹீரோஸ்"


"அப்பா உங்களுக்கும் எனக்கும் இப்போ ஜூரம் தான். தங்கச்சி என்ன போடா ஜீரோன்னு சொல்லாம ஹீரோவாக்கிட்டியே மா.இந்த அண்ணன் எப்படிமா தாங்குவேன் எப்படித் தாங்குவேன்!!"


"மஹேஷ்! ஹிம்ம் சொல்லுமா உன்னோட அப்படிப்பட்ட தேவை எல்லாம் மீட் பண்றாரா?"


"அப்பா என்னால 100% சொல்ல முடியல ஆனா நம்பிக்கை இருக்கு.நான் அவங்க பேமலியோட எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு"


"உத்ரா நீ இவ்ளோ தெளிவா பேசறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேசுவீங்களே அது பேரு என்ன?"
"சுவீட் நத்திங்ஸ் பாட்டி" என்று சொல்லி நாக்கை கடித்தாள் உத்ரா.

சிரித்துவிட்டு "ஹிம்ம் அப்போ அவரோட,அப்போ அவரோட,அவர் வீட்டாளுங்களோட விருப்பு வெறுப்பு,இயல்பு எல்லாம் தெரிஞ்சிக்கோ.நாளைக்கே உன்னோட நாத்தனார்,அவங்க பசங்க வீட்டுக்கு வந்தா நீ குறிப்பறிஞ்சு நடக்கறத பாக்கும்போதே அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்" அமைதியாகவும் தெளிவாகவும் விளக்கினார் கமலா பாட்டி.


"உத்ரா அப்பறம் நீ அவருக்கும் அவர் உனக்கும் தான் எல்லாமே.எதாவது மனகசப்பு வந்தாலும் நீ இந்த ஈகோவ மட்டும் வளக்காதே.

இரண்டொருதடவை நீ விட்டு கொடுத்து போனா தானா அவரு உன்னை மதிப்பாரு. உன்னை கேக்காம எதுவும் செய்யவும் யோசிப்பாரு" தன்னுடைய வெற்றிகரமான இல்லற ரகசியத்தை பகிர்ந்தார் ரேவதி.


"அம்மா கலக்கறீங்க விட்டுகொடுக்கறாமாதிரி நீங்க விண் பண்ணுவீங்களா?"


"அப்படி இல்ல மஹேஷ் நாங்க தான் எங்க பிறந்த வீட்டுக்கும்,புகுந்த வீட்டுக்கும் பாலம்.நான் கொடுக்கற பிக்சர்ல தான் உங்க அப்பாவோட மதிப்பே இருக்கு.ஸோ நான் பொறுமையா,விவேகமா,புத்திசாலித்தனமா இருக்கனும் இல்லியா?

உனக்கும் இதே தான். நீ எப்படி உன்னோட மனைவியை ட்ரீட் பண்றியோ அதை வெச்சு தான் மத்தவங்களும் நடப்பாங்க .புரியுதா?"


"அதுவும் சரிதான் உத்ரா உங்க அம்மா சொல்றதையே தான் செய்தா, செய்துகிட்டும் இருக்கா.எனக்கு தெரிஞ்சு நீ உனக்கு உன் கணவர் தரும் முதல் பரிச என்னிக்கும் பத்திரமா வெச்சுக்கோ.உங்க அம்மாவுக்கு நான் முதல்ல வாங்கி கொடுத்த ஹேன்ட் பேக இன்னும் பத்திரமா வெச்சிருக்கா.எனக்கும் அதை நினைக்கும் போது பெருமைதான்" மனைவியின் வெட்கத்தை பார்த்து பெருமை பொங்க கூறினார்.


வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சிரிக்கும் ஓசைக்கு ஏற்றவாறு டெலிபோனும் ஒலிக்க, பேசிவிட்டு வந்த சங்கரன் "அவங்க வீட்லேர்ந்து தான் புதன் கிழமை பெருமாள் கோவில்ல மீட் பண்ணலாமான்னு கேட்டாங்க.நானும் சரின்னு சொல்லிட்டேன்"என்றார்.


"பெண் கிடைச்சாலும் புதன் கிடைக்காதாம்.எல்லாம் நல்லபடியா நடக்கும்"என்ற கமலா பாட்டியின் குரலை கேட்ட உத்ராவிற்க்கு ஒரு கவிதை தோன்றியது .


உன்னை நினைக்கும் போது துடிப்பது

என் இதயமா...?

இல்லையில்லை

என்னுள் இருக்கும் உன் இதயம்!


கிளுக்கி சிரித்தவாறே சென்றவளை பார்த்த நால்வரும் மனதாற அவள் சிறப்புடன் வாழ வாழ்த்தினர்.


(சுபம்)

P.S : என்னுடைய முதல் தொடர்கதையை தொடர்ந்து படித்த,கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி :)

Tuesday, August 19, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-3

பகுதி - 1
பகுதி - 2


உத்ராவின் அறைக்கதவருகே சென்ற மஹேஷ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பேசாமல் சென்று என்ன பயன் என்று கதவைத்தட்டினான். ஓசைக்கேட்டு, உள்ளே அவள் போன் பேசுவது நிறுத்திவிட்டு வருவதை மஹேஷ் கவனிக்க தவறவில்லை.

"என்னடா மஹேஷ் எப்ப வந்தே"என்று உத்ரா லகுவாக பேச முயன்றாள்.

"மேடம் என்ன என் கிட்டயே நடிப்பா, சொல்லு என்ன நான் கதவைத்தட்டின உடனே போன் கட் பண்ணிட்டே, யாருகிட்ட பேசின?"

"என்னடா என்னையே சந்தேகப் படறியா? நான் சுவாதிகிட்டதான் பேசினேன்.என்னன்னு கேக்காதே It's all Girl Talks"

"அட்ரா சக்கை. சரி நான் நேராவே சொல்றேன். உன்கிட்ட கவுதம் பத்திப்பேச வந்தேன்.எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.அவங்க பேமலி பத்தி எல்லாமே விசாரிச்சாச்சு.ரொம்ப திருப்தியாத்தான் அப்பா ஃபீல் பண்றாரு ப்ளஸ் கவுதம் ஆபீஸ்ல குமாரவெச்சு விசாரிக்க வேண்டியது என் பொறுப்பு.இப்போ நீ சொல்லு What is your opinion?"


"மஹேஷ் நீ இவ்ளோ பொறுப்பானவனா..நம்பவே முடியலடா"

"சீ உத்ரா திஸ் இஸ் நாட் தி டைம் டு கிட். அவரு கிட்ட நீ 10 நிமிஷம் பேசின ஆனா உன்னோட ரியாக்ஷன் வெச்சு எதுவுமே கண்டுபிடிக்க முடியல.பீ பிராங்க் வித் மீ"

"மஹேஷ், கவுதம் இஸ் ரியலி சூப்பர்ப்டா. நீ கூட என்னோட ரியாக்ஷன் வெச்சு டிரேஸ் பண்ணமுடியலையா.?என்ன முழிக்கறே.நாங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டு தான் அப்படி கண்ப்யூஸ்டா இருக்கறா மாதிரி ரியாக்ட் பண்ணோம்."

"வாட்". நிஜமாகவே அலரிவிட்டான்.

"ஹே கத்தாதே. நானே சொல்றேன் என்ன பேசினோம்னு. பாரு அவருக்கு இன்னிக்கி ஆபீஸ்ல கோலைவ்.ஸோ போயி சப்போர்ட் பண்ண வேண்டிய நிலமையாம்.ஆனா அவங்க அப்பா அம்மா பொண்ண பார்த்திட்டு வருவோம்னு கம்பல் பண்ணதாலே வந்தாரு.ஆனா இது நம்ம லைப் டெசிஸன் . அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிறைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"

"ஹே உண்மைய சொல்லு உனக்கு அவர் சொன்னது மட்டும் பிடிச்சிதா இல்ல அவரையே" என்றான் கண் சிமிட்டியவாறே

"ஆக்சுவலா சொல்லனும்னா எனக்கு முதல்ல இவரு சொல்றா மாதிரியெல்லாம் ஏன் பேசனும்னு தோணிச்சு.ஆனா அவர் எனக்கு சொன்ன விதம்,பேசின பேச்சு,சிரிப்பு, ஓப்பன்னஸ்,

முதல்ல என்ன மன்னிச்சிடு உத்ரா உன்கிட்ட எல்லாமே இன்னிக்கி பேசமுடியல, போன் நம்பர் தறியான்னு கேட்டுட்டு ரொம்ப யோசிச்சாரு.அப்பறம் ஏதோ மைண்ட் ரீடிங்க மாதிரி நான் நம்பர் கொடுக்க யோசிச்சப்ப அவரே ஒரு தீர்வு சொன்ன விதம் எனக்கு பிடிச்சுபோச்சு..எப்படி ஒருத்தர் என்ன இப்படி 10 நிமிஷத்துல இம்பிரஸ் பண்ணமுடியும்னு யோசிச்சுகிட்டே தான் வெளிய வந்தேன்"

"ஓ அதானா உன்னோட குழப்பமான ரியாக்ஷன்.சரி நம்பர் கொடுத்திட்டியா என்ன?"

"இல்லடா அதான் சொன்னேனே நம்பர் கேட்டாரு ஆனா நான் யோசிச்சேன்.அப்புறம் அவரே உங்கிட்ட என் நம்பர் கொடுக்கறேன்.உங்க அண்ணன் கிட்ட சொல்லு அவனுக்கு இது ஓகேன்னு பட்டிச்சின்னா அவன் நம்பர்லேர்ந்து பேசுன்னு சொன்னாரு.நீ என்ன சொல்ற மஹேஷ்?"

"பாரு உத்ரா எனக்கு தெரிஞ்சு இதுல எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா நீ செவ்வாய்கிழமைக்கு மேல பேசு.நான் அதுகுள்ள குமார வெச்சு விசாரிச்சிடறேன்.ஆனா பயங்கரமான ஆளு தான் போல.பேச வரும்போது அவர் அம்மாகிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டாரு?"

"அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்.ஆனா நீ நீயாவே இருன்னு சொல்லிட்டு ஒரு கான்ஸப்ட் வேற அரேஞ்சுடு மேரேஞ் பத்தி சாப்ட்வேர் டெர்ம்ஸ்ல சொன்னாரு"

We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
Finally the Successful Vendors get the Project.
So It is Development and Lifetime Support

இதைச்சொல்லிட்டு ஒரு சிரிப்பு வேற, வாஸ் ஸோ கியூட்டா என்ன சிரிக்கறே, பாரு நான் அப்பியரன்ஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் தர மாட்டேன்னு உனக்கே தெரியும்.ஆனா தேர் இஸ் சம்திங்க இன் ஹிம்டா. அவரும் இதையேத்தான் என்னப்பத்தியும் சொன்னாரு" சொல்லிவிட்டு அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது.

"அடடா அடடா உத்ரா வெக்கம்!ஹிம்ம், மக்களே ஆள பாத்து எடை போடக் கூடாது அப்படிங்கிறதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. அம்மா தாயே என்ன பேசறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"

"ஹிம்ம் அத பத்தி தான் சுவாதிக்கிட்ட கூட பேசிட்டிருந்தேன்.அவ என்னடி அதுகுள்ள கடலையான்னு நக்கல் அடிக்கறா. பேசாம பாட்டியையே கேட்டா என்ன?"

"அம்மாடி நீ முடிவுல தான் இருக்க போல.நடத்து.ஸோ எனக்கு தெரிஞ்சு கவுதம் உன்ன இம்பிரஸ் பண்ணிட்டாரு,அவருக்கும் உன்ன பிடிச்சுப்போச்சு அதான் நம்பர் எல்லாம் கொடுத்திருக்காரு"

"சீ போடா" என்று உத்ரா வெட்கப்படவும் "ஆஹா இனிமே நாங்க எல்லாம் சீ தான்..விடு நானும் டி.ர் மாதிரி டயலாக் எல்லாம் ப்ரிப்பேர் பண்றேன் " என்று அவள் அறைவிட்டு வந்தான்.

அவளிடம் இப்படி சொன்னாலும் உத்ரா செய்வது சரியா என்று குழம்பினான். நேராக தோட்டத்தில் இருந்த பாட்டியிடம் சென்றான்.

அவனைக்கண்ட கமலாபாட்டி ஏதோ பொதுவாக பேசிக்கொண்டே இருந்தவர் அவனைப்பார்த்து "என்ன மஹேஷ் உத்ராகிட்ட பேசினியா என்ன அவ கவுதம் கிட்ட போன்ல பேசப்போறாளா?" என்று கேட்க ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான்.

பாட்டிக்கு எப்படி தெரிந்தது நானே காட்டிக்கொடுத்துவிட்டேனா,
உளறிவிட்டேனா? இல்லை உத்ராவே சொல்லிவிட்டாளா ?ஆனால் அவள் இன்னும் பாட்டியிடம் பேசியதாக சொல்லவில்லையே? இப்படி பலவாறாக குழம்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.
(தொடரும்)

Friday, August 15, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-2

பகுதி- 1

வாசல் கதவைத்திறந்த மஹேஷ் அசந்து நிற்க, "வழி விடேன்டா"என்றவாறு உள்ளே வந்து கொண்டிருந்தார் சங்கரன்.

"யாரு மஹேஷ்" என்ற பாட்டியும், "நான்தான்மா" என்ற குரலைக்கேட்டு வந்த உத்ராவும் கூட திகைத்துவிட்டனர்.

"என்ன எல்லாம் அப்படியே நிக்கறீங்க? அம்மா, ரேவதி எங்க கோவிலுக்கா?சரி மஹேஷ் நீ போய் அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு என்ன உத்ரா நீ இன்னும் குளிக்கவேயில்லியா?போ மச மசன்னு நிக்காதே" என்று அதட்டிக்கொண்டிருந்தார்.

"எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! என்ன நடக்குது இந்த வீட்ல, சனிக்கிழமை கூட ஆபீஸே கதின்னு இருக்கும் ஒரு சின்ஸியர் கவர்ன்மென்ட் ஆபீஸர் இன்னிக்கி 10 மணிக்கே வீட்ல ஆஜர்,வாயாடியான என் அருமை தங்கச்சி பேச யோசிக்கறா, கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues பத்தி பேசறா.ஒன்னுமே புரியல இந்த உலகத்துல.!!"

"இப்போ உன்னோட இந்த அச்சு பிச்சு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நேரம் இல்ல..நான் சொன்னத செய்..அம்மாகிட்ட சொல்லு உத்ராவ பெண் பார்க்க இன்னும் ஒன்றரை மணிநேரத்துல வராங்களாம்.அந்த பையனுக்கு ஏதோ ஆபீஸ்ல வேலையாம்.அதுனால அங்க போயிட்டு சாயந்திரம் திரும்பி வரமுடியாது,இங்க வேலைய முடிச்சிட்டு அப்படியே போறாராம் அவங்க அப்பா கூப்பிட்டு சொன்னாரு.போதுமா இனிமே கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யறீங்களா..ஒரே டென்ஷன் தான் எனக்கு"

இனிமேல் அங்கு இருந்தால் பாட்டு விழும் என்று மூவரும் உள்ளே சென்றனர்."பாட்டி நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்" என்று சென்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்து "உத்ரா இன்னிக்கே குளிச்சிட்டு வந்திடு"என்று வம்பிழுத்துவிட்டு அவளின் சிணுங்கலை கவனியாமல் பைக் சாவியுடன் சென்றான்.

கமலாப்பாட்டியும் ரேவதியும் பலகாரங்கள் செய்ய, உத்ரா குளித்து ரெடியாக, மஹேஷும் சங்கரனும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர்.
சொல்லியது போல் வந்த கவுதம் குடும்பத்தினருக்கு, உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது.

"சரி நாமளே பேசிண்டிருக்கோம், அவங்க ரெண்டுபேரையும் பேச விடுவோம்" என்ற சுந்தரத்தின் அதிகார குரலைக்கேட்ட உத்ராவிற்க்கு வயிற்றில் ஏதோ பிசைவது போல் இருந்தது. கமலாப்பாட்டியின் கரம் வாஞ்சையுடன் முதுகில் விழ தைரியம் வந்தது.

தயக்கத்துடனே இருந்த கவுதமிற்க்கும் அவன் அம்மா பார்வதியின் கண் அசைவில் பலம் பெற்று தோட்டத்திற்க்குச் சென்றான். ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு "சரி நமக்கு தான் இரண்டு குடும்பத்தையும் பிடிச்சுபோச்சே, இவங்க ரெண்டுபேரும் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுப்போம்.ஒரே நாள்ல அவங்க எப்படி முடிவு பண்ணுவாங்க சின்ன பசங்க."

"சரியா சொன்ன பார்வதி, இவனும் ஏதோ பிராஜக்ட் டென்ஷன்னு சொல்லிட்டு இருந்தான்.நாங்க தான் இன்னிக்கே பொண்ண பாத்திடலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்தோம்.இந்த வாரத்துல நம்ம தொந்தரவு இல்லாம ஒரு நாள் இவங்க பேசி முடிவு பண்ணட்டும்.நீங்க என்ன சொல்றீங்க சங்கரன் சார்"

குழப்பத்துடன் அம்மாவையும் மனைவியையும் பார்த்து ஒப்புதல் கிடைத்தபின்னர்,"சரிங்க உங்க பையன் ப்ரீயா இருக்கும் ஒரு நாள் சாயந்திரமா சொல்லுங்க நாம ஒரு கோவில்ல பாத்து பேசுவோம்"என்றார்.
ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அவர்கள் விடைப்பெற்றுச் சென்றனர்.

மதிய உணவு முடித்து, சங்கரன் அபீஸ் பைல்களுடனும், உத்ராவும்,மஹேஷும் கையில் புத்தகத்துடன் பாட்டியின் மடியில் படுத்திருந்தனர்.அங்கு வந்த ரேவதி "என்னங்க வீட்லேயும் ஆபீஸ் வேலையா?"

"ஏன்பா நீங்க ஆபீஸ் நேரத்துல வேலய பாப்பீங்களா இல்லியா, இப்போ இவ்ளோ வேலை பாக்கறீங்க?"

"ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.

"அப்படி சொல்லுடிக்கண்ணு.ஆமா நீ இன்னிக்கி பாடின பாட்டு என்ன ராகம்?" என்று மெள்ள பேச்சை ஆரம்பித்தார்.

"அட இதுதெரியாதப்பா,நம்ம உத்ரா செம்ம டாலென்டட், "ஆனந்த பைரவில ஆரம்பிச்சு,பாதாள பைரவில" முடிச்சிட்டா தெரியுமோ?".

இதைக்கேட்ட உத்ரா சிணுங்கவும், அவள் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது."இருடா சுவாதி கால் பண்றா,பேசிட்டு வந்து உன் கச்சேரி வெச்சுக்கறேன்" என்று மற்றவர்களின் பதிலுக்கு நிற்காமல் ஓடிவிட்டாள்.

"ஹிம்ம் கர்ணனுக்கு கவச குண்டலமாம் உங்க பொண்ணுக்கு செல்போனாம்"என்றாள் ரேவதி.

"சரி விடும்மா நீ சொல்லு உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?"

"ஆமாங்க அவங்க நல்லா பேசறாங்க,நானும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகொடுத்திருக்கேன்.உங்க பொண்ணு எனக்கும் மக தான்னு சொல்றாங்க.பையன பார்த்தாலும் நம்ம உத்ராவுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு"

"ஹிம்ம் நானும் அப்படிதான் நினைக்கறேன்.நீ என்னமா சொல்ற"

"சங்கரா நம்ம எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஆனா உத்ரா சம்மதம் தான் முக்கியம்.நீ என்ன மஹேஷ் சொல்ற"

"என்ன பொருத்தவரை இந்த இடம் சூப்பர்.அந்த அங்கிள் என்ன "Mr.Mahesh"ன்னு கூப்பிட்டு குளுரவெச்சிட்டார்.என்னம்மா சரி சரி முறைக்காதே..என்னோட ஃப்ரண்டு அவர் கம்பனில தான் HRஆ இருக்கான் அவன வெச்சு நான் விசாரிச்சு சொல்றேன்.நீங்க பேமலி பத்தி விசாரிங்க சரியாப்பா?"

"அதெல்லாம் திருப்தியா விசாரிச்சப்புறம் தான் அவங்கள வரச்சொன்னதே.நீ தான் உத்ரா கிட்ட பேசிச் சொல்லனும்"

"என்ன நானா? அவகிட்டயா"

"ஆமாடா அவ சண்டை போட்டாலும் எதுன்னாலும் உங்கிட்ட தான் சொல்றா..இதையும் நீயே பேசிச்சொல்லு"

"என்னமோ சொல்றீங்க.பாக்கறேன்"என்றவன் உத்ராவின் அறைக்கதவைத்தட்ட எத்தனித்து, உள்ளே உத்ராவின் குறலில் கேட்பது சிணுங்கலா,அழுகையாயென்ற குழப்பத்தில் நின்று விட்டான்.

(தொடரும்)

Monday, August 11, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-1

வாரநாட்களின் பரபரப்பு இல்லாமல் அமைதியான சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு உத்ரா குறுக்கும் நெடுக்குமாக கூடத்தில் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அவள் அண்ணன் மஹேஷ்,"என்ன உத்ரா வீக்கெண்டு இவ்ளோ சீக்கிரமா உனக்கு விடிஞ்சிருச்சு என்ன எங்கேயாவது ஊர் சுத்த போறியா?"என்று அவளை சீண்டினான்.


தலையை சிலுப்பி அவனைப்பார்த்து முறைத்துவிட்டு, "தோ பாருடா நானே டென்ஷனா இருக்கேன் என்னோட வாயை பிடுங்காதே எதாவது சொல்லிடபோறேன்!"


"அட இங்க பாருடா இவ சொல்ற வரைக்கும் என்ன நாங்க சும்மா இருப்போமா. ஏதோ பாவம் இன்னிக்கி உன்ன அம்மா ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாளே..நீயும் வேற குட்டிப்போட்ட பூனையாட்டம் சுத்திண்டு இருக்கியேன்னு கேட்டா எனக்கு இன்னும் தேவை தான்"


இவர்களின் சம்பாஷனையைக்கேட்டுக்கொண்டே வந்த கமலாப்பாட்டி, "ஏன்டா கண்ணா அவளை வம்பிழுக்கறே? இன்னிக்கி அந்த பையன் வீட்லேர்ந்து வந்து பாத்திட்டு போனாங்கன்னா குழந்தைக்கு சீக்கிரமா கல்யாணம் ஆயிடும்.அப்பறம் நீ இப்படியெல்லாம் அவளைப்பேச முடியாது"


"என்ன பாட்டி நீங்க அதுக்குள்ளே கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க..நானே என்ன பேசறதுன்னு பயங்கற குழப்பத்துல இருக்கேன்"


"அடடே என்னோட தங்கை பேச கூட யோசிப்பாளா!!"


"குழந்தே சும்மா இரேண்டா! நீ சொல்லுடி தங்கம் உனக்கு என்ன கவலை"


"பாட்டி நீயே சொல்லு அந்த ஆன்டி என்ன கோவில்ல பார்த்தாளாம்.அப்பறம் ஒரு கல்யாணத்துல பார்த்துட்டு அப்பா கிட்ட பேசி இதோ இன்னிக்கி பொண்ணு பாக்கறவரைக்கும் வந்திருக்கு..அம்மாவும் அப்பாவும் நீங்கள்ளாம் கூட என்னோட கருத்த கேக்ககாம ஒத்துக்கிட்டீங்க..எப்படி பாட்டி நான் ஒன்னுமே தெரியாத பையன கல்யாணம் பண்ணிகிட்டு,லைஃப் முழுக்க ஷேர் பண்ணுவேன்? கேக்கவே சகிக்கலை"


"என்ன உத்ரா யாரயாவது லவ் பண்றியா?? அதச்சொல்ல பயந்துகிட்டு இப்படியெல்லாம் மழுப்பறியா?நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"


"அட என்னோட ரேஞ்சுக்கு யாருமே கிடைக்கலைடா"என்று கூறி அவனுக்கு பழிப்புக்காட்டினாள்.


பரிவுடன் அவள் கூந்தலை வருடிக்கொண்டே"உத்ரா உன்னோட கவலை எனக்கு நல்லாவே புரியுதுடா கண்ணா.பாரு அரேஞ்சுடு மேரேஜ்னா இதெல்லாம் சகஜம் தானே.சரி உனக்கு நான் சொல்றது பிடிச்சிருந்ததுன்னாக்க அப்படியே பேசு சரியா?"


மகிழ்ச்சியுடன் பாட்டியிடம் வந்த உத்ரா,"Come On பாட்டி சொல்லுங்க".ஏதோ மொக்கை மேட்ச் பார்க்க் உட்காந்த மஹேஷ் ஆஃப் பண்ணிவிட்டு வந்தமர்ந்தான்.


"சரி அந்த பையன் பேரு என்ன?"


"கோதம் பாட்டி" கிரீச்சிட்டான் மஹேஷ்.


"கோதமும் இல்ல ஹிக்கிம் போதமும் இல்ல அவன் பேரு கவுதம்"


"இதோ பாரு உத்ரா முதல்ல நீ அந்த பையன "அவன் இவன் வாடா போடா"ன்னு சொல்லாதே.என்ன தான் பசங்களுக்கு பொண்ணுங்க செல்லமா அப்படி கூப்பிடறது பிடிக்கும்னாலும் முதலேயே அப்படி கூப்பிடாதே.வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,அவனா கொஞ்ச நேரத்துல நீ என்னை வா போன்னு சொல்லலாம் எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்னு சொல்வான் அதை அப்புறம் கெட்டியா பிடிச்சிக்கோ"என்று கண் சிமிட்டினாள்.


"அட அட என்னமா கவுக்கறீங்கப்பா ஒரு பையன"


"பாருடாமா அப்புறம் அவங்க இன்னிக்கி உன்ன பொண்ணு பாக்க வராங்கன்னாலும் எல்லாமே விசாரிச்சிருப்பாங்க..இது ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்.அவங்க வீட்லயும்,பையனுக்கும் உன்ன பிடிச்சிடுச்சாம்.நீ எப்பவுமே இருக்கறாப்போல இயல்பா இரு.உனக்கு ஏதாவது பையன்கிட்டக்கேக்கனும்னாலும் பேசு"


"அது தான் பாட்டி பெரிய பிரச்சனையே என்னன்னு பேசுவேன்.நான் முன்ன பின்ன பாத்தது கூட இல்லியே..அன்னிக்கி அவரோட கஸின் கல்யாணம் அதுக்குக்கூட இல்லாம ஆபீஸ் போயிட்டார் சின்ஸியர் சிகாமணி"


சிரித்துவிட்டு "முதல்ல பேசச்சொல்லும்போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கும் ஆனா பேசினாத்தானே ஆகும்"


"ஏன்டி என்கிட்ட இவ்ளோ வாயடிக்கறே அவர் கிட்ட பேசமாட்டியோ?"


"ஹிம்ம் இதத்தான் சொல்ல வந்தேன். நீ முதல்ல எதுவும் பேசாதே.அந்த பையன பேசவிடு..நல்லா அப்சர்வ் பண்ணு எப்படி பேசறான்,எதைப்பத்தில்லாம் பேசறான்,தற்பெருமை அடிக்கறானா.ஒருத்தர் பேசும் விதம் வார்த்தைய வெச்சுக்கிட்டே நீ கம்பர்டபிளா பீல் பண்றியான்னு தெரிஞ்சுக்கலாம்"


"என்ன பேசினா எப்படின்னு புரிஞ்சுப்பேன்?"


"அவங்க அம்மா அப்பா குடும்பம் பத்தி சொன்னா,அவங்கத்தான் எனக்கு முக்கியம்..நீ அவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் அப்படினின்னுப்பேசினா கேட்டுக்கோ.அப்படி பேசும் பசங்க உன் மேலேயும் பின்னாடி அக்கறையா இருப்பாங்க.

நீயும் உங்க அம்மா அப்பா குடும்பத்தப்பத்தி சுருக்கமா சொல்லிடு.அடுத்து உன்னோட வேலைப்பத்திக்கேட்டா, பாரதி கண்ட புதுமைப்பெண் நான் தான் அப்படின்னு ஒரேடியா பேசாம, எனக்கு கேரியர் முக்கியம் தான். அதுக்காக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தருவேன் அப்படின்னு பொறுமையா சொல்லு.ஒரு அந்நியன் கிட்ட பேசும்பொது நீ எப்படி பேசுவியோ அப்படி பேசனும் ஆனா முக்கியமான விஷயத்தையும் சொல்லிடனும்"


"மொத்ததுல இவ வால சுருட்டி வெச்சுக்க சொல்றீங்க!"


மஹேஷை முறைத்திவிட்டு "ஏன் பாட்டி ஒரு 10 நிமிஷத்துல எப்படி முடிவு பண்றதாம்?"


"அதான்டிப்பொண்ணே சொல்றேன்..இன்னிக்கி கொஞ்சமாத்தான் தெரியும் உனக்கு..எப்படியும் மத்த விஷயமெல்லாம் பேசி இந்த இடம் முடிவாச்சுன்னா கொஞ்சம் கொஞ்சமா தெரியும்.நானே உனக்கு எப்படி அணுகறதுன்னு சொல்றேன்"


பாட்டியை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு "சோ சுவீட் பாட்டி நீங்க!"


"பாட்டி பாவம்டி விடு உன்னோட வெயிட் அவங்க தாங்க மாட்டாங்க" மஹேஷ் இப்படி அவளை வம்பிழுத்துக்கொண்டிருக்கும் போதே வாசலில் மணிஅடிக்க திறந்தவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான்.


(தொடரும்)

Sunday, August 10, 2008

A for Apple

நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A
http://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க,
http://amazon.com/ - கண்டதையும் வாங்க ;)

B
http://blogsearch.google.com/ - பளாக் தேட

C
http://www.coolhotmail.com/ இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,
http://www.chennaionline.com/

D
http://deals2buy.com/

E
http://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,
http://www.esnips.com/

F
http://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட மாதிரி ஆச்சு, எதோ உதவி பண்ணாமாதிரியும் இருக்கும் :),
http://www.frozenthoughts.com/ இது எனக்குப்பிடித்த பத்திரிக்கை

G
http://www.google.com/

H
http://www.hindu.com/

I
http://www.imdb.com/ பார்க்கும் படங்களை பற்றி தெரிஞ்சுக்க

J
http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

K
http://keetru.com/ கதை கவிதை படிக்க,
http://www.kandamangalam.com/new/ புத்தகம்,பாட்டு Download செய்ய

M
http://mail.yahoo.com/,
http://maps.google.com/- ஊர் சுத்த வழி தேட,
http://www.mouthshut.com/ -நல்ல Reviews படிக்க

N
http://www.ndtv.com/,
http://news.google.com/

O
http://www.orkut.com/

P
http://picasaweb.com/

R
http://www.rediff.com/index.html,
http://reader.google.com/ யாரெல்லாம் Post எழுதிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க

S
http://smashits.com/ -பாட்டு கேக்க,
http://scribd.com/ எனக்கு பிடித்த் புக் Download செய்ய

T
http://twitter.com/,
http://thenkinnam.blogspot.com/ -பாட்டு கேக்க,
http://www.tamilmanam.net/index.html


W
http://wordsmith.org/

Y
http://www.youtube.com/

நான் விரும்பி அழைக்கப்போகும் மூவர் தமிழ்மணத்திற்க்கு புதியவர்கள் ஆனால் வெகு நாட்களாக அழகாக எழுதிக்கொண்டிருக்கும் தனிப்பான்மையானவர்கள்

1.வெட்டிவம்பு விஜய் - எனக்குத்தெரிந்து இவர் எழுதாத தலைப்பே இல்லை..மிக அற்புதமான எழுத்தாளர்

2.விரிந்தசிறகுகள் திவ்யபிரியா- கதை,கவிதை,நகைச்சுவை என்று எழுதும் சகலகலாவல்லி!!

3.பிரியா-என்னுடைய பதிவுகளின் முதல் வாசகி,என் உயிர் நண்பி,கவிதாயினி பிரியா :))


Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.