Tuesday, August 19, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-3

பகுதி - 1
பகுதி - 2

உத்ராவின் அறைக்கதவருகே சென்ற மஹேஷ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பேசாமல் சென்று என்ன பயன் என்று கதவைத்தட்டினான். ஓசைக்கேட்டு, உள்ளே அவள் போன் பேசுவது நிறுத்திவிட்டு வருவதை மஹேஷ் கவனிக்க தவறவில்லை.

"என்னடா மஹேஷ் எப்ப வந்தே"என்று உத்ரா லகுவாக பேச முயன்றாள்.

"மேடம் என்ன என் கிட்டயே நடிப்பா, சொல்லு என்ன நான் கதவைத்தட்டின உடனே போன் கட் பண்ணிட்டே, யாருகிட்ட பேசின?"

"என்னடா என்னையே சந்தேகப் படறியா? நான் சுவாதிகிட்டதான் பேசினேன்.என்னன்னு கேக்காதே It's all Girl Talks"

"அட்ரா சக்கை. சரி நான் நேராவே சொல்றேன். உன்கிட்ட கவுதம் பத்திப்பேச வந்தேன்.எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.அவங்க பேமலி பத்தி எல்லாமே விசாரிச்சாச்சு.ரொம்ப திருப்தியாத்தான் அப்பா ஃபீல் பண்றாரு ப்ளஸ் கவுதம் ஆபீஸ்ல குமாரவெச்சு விசாரிக்க வேண்டியது என் பொறுப்பு.இப்போ நீ சொல்லு What is your opinion?"

"மஹேஷ் நீ இவ்ளோ பொறுப்பானவனா..நம்பவே முடியலடா"

"சீ உத்ரா திஸ் இஸ் நாட் தி டைம் டு கிட். அவரு கிட்ட நீ 10 நிமிஷம் பேசின ஆனா உன்னோட ரியாக்ஷன் வெச்சு எதுவுமே கண்டுபிடிக்க முடியல.பீ பிராங்க் வித் மீ"

"மஹேஷ், கவுதம் இஸ் ரியலி சூப்பர்ப்டா. நீ கூட என்னோட ரியாக்ஷன் வெச்சு டிரேஸ் பண்ணமுடியலையா.?என்ன முழிக்கறே.நாங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுகிட்டு தான் அப்படி கண்ப்யூஸ்டா இருக்கறா மாதிரி ரியாக்ட் பண்ணோம்."

"வாட்". நிஜமாகவே அலரிவிட்டான்.

"ஹே கத்தாதே. நானே சொல்றேன் என்ன பேசினோம்னு. பாரு அவருக்கு இன்னிக்கி ஆபீஸ்ல கோலைவ்.ஸோ போயி சப்போர்ட் பண்ண வேண்டிய நிலமையாம்.ஆனா அவங்க அப்பா அம்மா பொண்ண பார்த்திட்டு வருவோம்னு கம்பல் பண்ணதாலே வந்தாரு.ஆனா இது நம்ம லைப் டெசிஸன் . அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிறைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"

"ஹே உண்மைய சொல்லு உனக்கு அவர் சொன்னது மட்டும் பிடிச்சிதா இல்ல அவரையே" என்றான் கண் சிமிட்டியவாறே

"ஆக்சுவலா சொல்லனும்னா எனக்கு முதல்ல இவரு சொல்றா மாதிரியெல்லாம் ஏன் பேசனும்னு தோணிச்சு.ஆனா அவர் எனக்கு சொன்ன விதம்,பேசின பேச்சு,சிரிப்பு, ஓப்பன்னஸ்,

முதல்ல என்ன மன்னிச்சிடு உத்ரா உன்கிட்ட எல்லாமே இன்னிக்கி பேசமுடியல, போன் நம்பர் தறியான்னு கேட்டுட்டு ரொம்ப யோசிச்சாரு.அப்பறம் ஏதோ மைண்ட் ரீடிங்க மாதிரி நான் நம்பர் கொடுக்க யோசிச்சப்ப அவரே ஒரு தீர்வு சொன்ன விதம் எனக்கு பிடிச்சுபோச்சு..எப்படி ஒருத்தர் என்ன இப்படி 10 நிமிஷத்துல இம்பிரஸ் பண்ணமுடியும்னு யோசிச்சுகிட்டே தான் வெளிய வந்தேன்"

"ஓ அதானா உன்னோட குழப்பமான ரியாக்ஷன்.சரி நம்பர் கொடுத்திட்டியா என்ன?"

"இல்லடா அதான் சொன்னேனே நம்பர் கேட்டாரு ஆனா நான் யோசிச்சேன்.அப்புறம் அவரே உங்கிட்ட என் நம்பர் கொடுக்கறேன்.உங்க அண்ணன் கிட்ட சொல்லு அவனுக்கு இது ஓகேன்னு பட்டிச்சின்னா அவன் நம்பர்லேர்ந்து பேசுன்னு சொன்னாரு.நீ என்ன சொல்ற மஹேஷ்?"

"பாரு உத்ரா எனக்கு தெரிஞ்சு இதுல எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா நீ செவ்வாய்கிழமைக்கு மேல பேசு.நான் அதுகுள்ள குமார வெச்சு விசாரிச்சிடறேன்.ஆனா பயங்கரமான ஆளு தான் போல.பேச வரும்போது அவர் அம்மாகிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டாரு?"

"அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்.ஆனா நீ நீயாவே இருன்னு சொல்லிட்டு ஒரு கான்ஸப்ட் வேற அரேஞ்சுடு மேரேஞ் பத்தி சாப்ட்வேர் டெர்ம்ஸ்ல சொன்னாரு"

We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
Finally the Successful Vendors get the Project.
So It is Development and Lifetime Support

இதைச்சொல்லிட்டு ஒரு சிரிப்பு வேற, வாஸ் ஸோ கியூட்டா என்ன சிரிக்கறே, பாரு நான் அப்பியரன்ஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் தர மாட்டேன்னு உனக்கே தெரியும்.ஆனா தேர் இஸ் சம்திங்க இன் ஹிம்டா. அவரும் இதையேத்தான் என்னப்பத்தியும் சொன்னாரு" சொல்லிவிட்டு அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது.

"அடடா அடடா உத்ரா வெக்கம்!ஹிம்ம், மக்களே ஆள பாத்து எடை போடக் கூடாது அப்படிங்கிறதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. அம்மா தாயே என்ன பேசறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"

"ஹிம்ம் அத பத்தி தான் சுவாதிக்கிட்ட கூட பேசிட்டிருந்தேன்.அவ என்னடி அதுகுள்ள கடலையான்னு நக்கல் அடிக்கறா. பேசாம பாட்டியையே கேட்டா என்ன?"

"அம்மாடி நீ முடிவுல தான் இருக்க போல.நடத்து.ஸோ எனக்கு தெரிஞ்சு கவுதம் உன்ன இம்பிரஸ் பண்ணிட்டாரு,அவருக்கும் உன்ன பிடிச்சுப்போச்சு அதான் நம்பர் எல்லாம் கொடுத்திருக்காரு"

"சீ போடா" என்று உத்ரா வெட்கப்படவும் "ஆஹா இனிமே நாங்க எல்லாம் சீ தான்..விடு நானும் டி.ர் மாதிரி டயலாக் எல்லாம் ப்ரிப்பேர் பண்றேன் " என்று அவள் அறைவிட்டு வந்தான்.

அவளிடம் இப்படி சொன்னாலும் உத்ரா செய்வது சரியா என்று குழம்பினான். நேராக தோட்டத்தில் இருந்த பாட்டியிடம் சென்றான்.

அவனைக்கண்ட கமலாபாட்டி ஏதோ பொதுவாக பேசிக்கொண்டே இருந்தவர் அவனைப்பார்த்து "என்ன மஹேஷ் உத்ராகிட்ட பேசினியா என்ன அவ கவுதம் கிட்ட போன்ல பேசப்போறாளா?" என்று கேட்க ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான்.

பாட்டிக்கு எப்படி தெரிந்தது நானே காட்டிக்கொடுத்துவிட்டேனா,
உளறிவிட்டேனா? இல்லை உத்ராவே சொல்லிவிட்டாளா ?ஆனால் அவள் இன்னும் பாட்டியிடம் பேசியதாக சொல்லவில்லையே? இப்படி பலவாறாக குழம்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.
(தொடரும்)

45 comments:

 1. Divya said...

  உத்ரா & மஹேஷ் உரையாடல் அருமை.
  கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீங்க ரம்யா, வாழ்த்துக்கள்!

 2. Divya said...

  \\பாட்டிக்கு எப்படி தெரிந்தது நானே காட்டிக்கொடுத்துவிட்டேனா,
  உளறிவிட்டேனா?
  இல்லை உத்ராவே சொல்லிவிட்டாளா ?ஆனால் அவள் இன்னும் பாட்டியிடம் பேசியதாக சொல்லவில்லையே? இப்படி பலவாறாக குழப்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.\\

  பாட்டி தான் இந்த கதையின் முக்கியமான 'பார்டி' போலிருக்கு:))

  கமலா பாட்டியின் பதிலுக்காக ஆவலுடன் வெயிட்டீங்...

 3. M.Saravana Kumar said...

  // Divya said...
  உத்ரா & மஹேஷ் உரையாடல் அருமை.
  கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீங்க ரம்யா, வாழ்த்துக்கள்!//

  நானும் இததான் சொல்லனும்னு நெனச்சேன்.
  :)

 4. M.Saravana Kumar said...

  //Divya said...
  பாட்டி தான் இந்த கதையின் முக்கியமான 'பார்டி' போலிருக்கு:))//

  கலக்கல்.. :)

 5. M.Saravana Kumar said...

  ஒரு முடிவோடதான் இப்போ எல்லோரும் கதை எழுதறாங்க.

  நீங்க கலக்கலா எழுதுறீங்க.

  திவ்யாவுக்கு போட்டியா??

 6. M.Saravana Kumar said...

  இப்போதான் தலைப்பு கட்சிதமாய் கதைக்கு பொருந்துகிறது..
  :)

 7. வெட்டிப்பயல் said...

  // M.Saravana Kumar said...

  ஒரு முடிவோடதான் இப்போ எல்லோரும் கதை எழுதறாங்க.

  நீங்க கலக்கலா எழுதுறீங்க.

  திவ்யாவுக்கு போட்டியா??//

  சூப்பர்...

  இப்படி தான் குட்டையை குழப்பனும் :-))))))

  BTW, கதை சூப்பரா போயிட்டு இருக்குமா. எல்லாரும் அவுங்க ரூம்ல என்ன பேசிக்கிட்டாங்கனு தெரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதை இந்த பகுதில சொன்னது சூப்பர்.

 8. வெட்டிப்பயல் said...

  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)

 9. Divya said...

  \\வெட்டிப்பயல் said...
  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)\\

  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))

 10. M.Saravana Kumar said...

  //divya said...
  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))//

  DIVYA, ஏன் இந்த கொலைவெறி??
  பாவம்ல பசங்க..
  :)

 11. வெட்டிப்பயல் said...

  // Divya said...

  \\வெட்டிப்பயல் said...
  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)\\

  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))//

  இதை ஏற்கனவே ஒரு பாட்டி கொடுத்துட்டாங்களே ;)

  இதோ லிங்

  மாமியாரை அட்ராக்ட் பண்ணாலே கணவனை பண்ண மாதிரி தான். (அந்த மாதிரி கணவர்கள் கிடைக்கும் பட்சத்தில்)

 12. Sundar said...

  நல்ல விறுவிறுப்பா கதையை நகர்த்தறீங்க. புது திருப்பம் என்னவென்று அறிய ஆவல்.

 13. ஜி said...

  கலக்கல் ரம்யா... எங்களோட‌ படையெடுப்புல எப்படியெல்லாம் ப்ரிப்பேர் பண்ணி மடக்கனும்னு (ஏமாத்தனும்) கௌதம் மூலமா சொல்லிட்டீங்க :))

  //இதை ஏற்கனவே ஒரு பாட்டி கொடுத்துட்டாங்களே ;)//

  :)) பாட்டியா அவுங்க?? ப்ரோஃபைல் ஃபோட்டோல மட்டும் ஸ்கூல் பொண்ணு மாதிரி போட்டு ஏமாத்துறாங்க?? ;))

 14. இவன் said...

  கலக்கல் கதை... சூப்பரா இருக்குது அடுத்த பகுதி எப்போ?

 15. கயல்விழி said...

  கதை சுவாரஸ்யமாக நகர்கிறது :)

 16. கவிநயா said...

  //We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support//

  ஹா ஹா :)) சூப்பரு!
  பாட்டி பதிலுக்கு நானும் வெயிட்டிங்...

 17. சதங்கா (Sathanga) said...

  ramya,

  //ஆனா இது நம்ம லைப் டெசிஸன் . அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிரைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"//

  so practical and touching :))

 18. sathish said...

  கலகலப்பா போகுது :)) அருமை!

 19. sathish said...

  //We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support//

  எப்படி இப்படி எல்லாம் :))

 20. விஜய் said...

  absolutely superb ;-)

  ரம்யா, கலக்கறீங்க. படு இயல்பா போயிட்டிருக்கு :-) ஆஃபீஸ் போய் சாவகாசமா மறுபடியும் படிச்சுட்டு நிறைய கமென்ட் எழுதறேன்.

 21. விஜய் said...

  \\அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிரைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"\\

  அதான் கௌதம் சொன்னதே பிடிச்சுப் போச்சே. அதுவே கைதமைப் பிடிசச மாதிரி தான். இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே கிரிமினல் புத்தியுள்ளவங்க. அவங்களா ஒண்ணும் சொல்லிட மாட்டாங்க :)

  \\"எப்படி ஒருத்தர் என்ன இப்படி 10 நிமிஷத்துல இம்பிரஸ் பண்ணமுடியும்னு யோசிச்சுகிட்டே தான் வெளிய வந்தேன்"\\
  இம்ப்ரெஸ் ஆகியுமா ஃபோன் நம்பர் கொடுக்கலை. கௌதம் பாவம்.

  \\அவர் அம்மாபிள்ளையாம் \\
  யார் தான் இல்லை?

  \\We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support\\
  Good Analogy. So the boy is the customer and the girl is the vendor. But this holds good only until marriage. No customer knows about this hard truth. After marriage the parties switch sides. Woman becomes customer and the man becomes the vendor, and worst thing, requirement changes every now and then :)
  இதெப்படி இருக்கு??

  \\அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது\\
  வைரமுத்துவே உங்க உவமைக்கு தோற்றுப்போயிடுவார்

  \\இப்படி பலவாறாக குழம்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.\\
  கமலா பாட்டு கலக்கல் பார்டி :)

  சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடுங்க :)

 22. Divyapriya said...

  //We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support//

  அட அட, என்ன ஒரு தத்துவம், சூப்பர் ரம்யா :-))

 23. Divyapriya said...

  பாட்டி செம ஸ்பீட் தான் போல, கதை சூப்பரா போகுது...

 24. gils said...

  arranged marriageku s/w engr mathiri desci sooper :D

 25. naanal said...

  கதை ரொம்ப நல்ல போய்ட்டு இருக்கு ரம்யா...
  எப்படி ஒருத்தரை பற்றி 10 நிமிஷத்துல முடிவெடுக்கறாங்களோண்ணு யோசிச்சுட்டு இருப்பேன்... இப்ப அதற்கு அழகா நீங்க கவுதம், உத்ரா
  உரையாடல் மூலம் சொல்லி இருக்கீங்க.. :)

 26. naanal said...

  பாட்டி பயங்கரமான பாட்டி யா இருக்காங்களே...
  அவங்க விலாசம் இருந்தா கொடுங்களேன்.. ;) டிப்ஸ் வேணுங்கரப்போ கேட்டு வாங்கிக்கலாம்.. ;-)

 27. ராமலக்ஷ்மி said...

  அழகாகப் போகிறது கதை. நான் சொல்ல நினைச்சதையே நாணலும் சொல்லியிருக்காங்க. சூப்பர் பாட்டியா இருக்காங்க.

 28. ambi said...

  அந்த பாட்டியை ஒரு பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க, நிறைய பேருக்கு ரொம்ப உதவியா இருக்கும்!(எனகில்லைப்பா) :))

 29. Sri said...

  அச்சச்சோ எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு மட்டும் கதைத் தெரியலையே..!! :( உங்களுடைய இந்தக் கதைக்கு வந்தப் பின்னூட்டத்தால தான் நான் இப்படி பொலம்பறேன்..!! :( சாரி ரம்யா படிக்க டைம் இல்ல முழுசா முடிஞ்சதும் சொல்லுங்க வந்து படிக்கறேன்..!! :(( சாரி...!! :(

 30. Ramya Ramani said...

  \\Divya said...
  உத்ரா & மஹேஷ் உரையாடல் அருமை.
  கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீங்க ரம்யா, வாழ்த்துக்கள்!
  \\

  \\பாட்டி தான் இந்த கதையின் முக்கியமான 'பார்டி' போலிருக்கு:))

  கமலா பாட்டியின் பதிலுக்காக ஆவலுடன் வெயிட்டீங்...\\

  நன்றி திவ்யா ..ஆமாங்க கமலா பாட்டி தான் அறிவிக்கபடாத் ஹீரோயின் :)

 31. Ramya Ramani said...

  \\M.Saravana Kumar said...
  ஒரு முடிவோடதான் இப்போ எல்லோரும் கதை எழுதறாங்க.

  நீங்க கலக்கலா எழுதுறீங்க.

  திவ்யாவுக்கு போட்டியா??
  \\

  நன்றி சரவணன் ஆனா திவ்யா மாஸ்டரோட கம்பேர் பண்ணாதீங்க அவங்க புலி நானெல்லாம் இப்ப தான் முதல் நிலைலேயே இருக்கேன் .

  \\M.Saravana Kumar said...
  இப்போதான் தலைப்பு கட்சிதமாய் கதைக்கு பொருந்துகிறது..
  :)
  \\
  அப்படியா நல்லது..தொடர்ந்து படிக்கிறீங்க நன்றி :)

 32. Ramya Ramani said...

  \\வெட்டிப்பயல் said...
  // M.Saravana Kumar said...

  ஒரு முடிவோடதான் இப்போ எல்லோரும் கதை எழுதறாங்க.

  நீங்க கலக்கலா எழுதுறீங்க.

  திவ்யாவுக்கு போட்டியா??//

  சூப்பர்...

  இப்படி தான் குட்டையை குழப்பனும் :-))))))

  BTW, கதை சூப்பரா போயிட்டு இருக்குமா. எல்லாரும் அவுங்க ரூம்ல என்ன பேசிக்கிட்டாங்கனு தெரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதை இந்த பகுதில சொன்னது சூப்பர்.

  \\

  அடடா நன்றி அண்ணா ..தொடர்ந்து படிப்பதற்க்கும் நன்றி !

 33. Ramya Ramani said...

  \\வெட்டிப்பயல் said...
  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)
  \\

  அப்படியா நீங்க சொன்ன சரிதான்

 34. Ramya Ramani said...

  \\Divya said...
  \\வெட்டிப்பயல் said...
  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)\\

  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))
  \\

  கண்டிப்பா மாஸ்டர் உங்கள விடவா டிப்ஸ் தர முடியும் ..முயற்சி பண்றேன்

 35. Ramya Ramani said...

  \\M.Saravana Kumar said...
  //divya said...
  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))//

  DIVYA, ஏன் இந்த கொலைவெறி??
  பாவம்ல பசங்க..
  :)
  \\

  பாருங்க சரவணகுமார் அவங்க சொல்றது உங்க வாழ்கைய ஈஸி ஆக்கத்தான்.அப்படித்தானே திவ்யா??

 36. Ramya Ramani said...

  \\வெட்டிப்பயல் said...
  // Divya said...

  \\வெட்டிப்பயல் said...
  //அவங்க அம்மாபத்தியும் சொன்னாரே.அவர் அம்மாபிள்ளையாம் அவங்கள மாதிரி தான் தன் மனைவியும் இருக்கனும்னு பீல் பண்றாராம்"

  பொதுவா பசங்க எல்லாரும் இந்த கேட்டகிரி தான் :-)\\

  இந்த கேட்டகிரி பசங்களை எப்படி ஹேண்டிள் பண்றதுன்னு , 'கமலா'பாட்டியை கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க சொல்லுங்க ரம்யா:))//

  இதை ஏற்கனவே ஒரு பாட்டி கொடுத்துட்டாங்களே ;)

  இதோ லிங்

  மாமியாரை அட்ராக்ட் பண்ணாலே கணவனை பண்ண மாதிரி தான். (அந்த மாதிரி கணவர்கள் கிடைக்கும் பட்சத்தில்)
  \\

  ஆஹா மாஸ்டர் ஏற்கனவே சொல்லிருக்காங்க.. அதை இங்கே லிங்க் கொடுத்திட்டீங்க சூப்பரு !!நன்றி

 37. Ramya Ramani said...

  \\Sundar said...
  நல்ல விறுவிறுப்பா கதையை நகர்த்தறீங்க. புது திருப்பம் என்னவென்று அறிய ஆவல்.
  \\
  தொடர்ந்து வரும் உங்கள் வருகைக்கும்.கருத்திற்கும் நன்றி சுந்தர்

 38. Ramya Ramani said...

  \\ஜி said...
  கலக்கல் ரம்யா... எங்களோட‌ படையெடுப்புல எப்படியெல்லாம் ப்ரிப்பேர் பண்ணி மடக்கனும்னு (ஏமாத்தனும்) கௌதம் மூலமா சொல்லிட்டீங்க :))
  \\

  யப்பா பாயின்ட பிடிச்சிட்டீங்களே சூப்பரு !!

  \\

  //இதை ஏற்கனவே ஒரு பாட்டி கொடுத்துட்டாங்களே ;)//

  :)) பாட்டியா அவுங்க?? ப்ரோஃபைல் ஃபோட்டோல மட்டும் ஸ்கூல் பொண்ணு மாதிரி போட்டு ஏமாத்துறாங்க?? ;))
  \\

  ஹிம்ம்ம் பாட்டி மாதிரி பேசினாலும் , அவங்களுக்கு குழந்தை மனசாம் சிம்பாலிக்கா காட்ட அந்த போட்டோவாம் புரியுதா???

 39. Ramya Ramani said...

  \\இவன் said...
  கலக்கல் கதை... சூப்பரா இருக்குது அடுத்த பகுதி எப்போ?
  \\

  நன்றி இவன் :)

  \\கயல்விழி said...
  கதை சுவாரஸ்யமாக நகர்கிறது :)
  \\
  நன்றி கயல்விழி :)

 40. Ramya Ramani said...

  \\கவிநயா said...
  //We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support//

  ஹா ஹா :)) சூப்பரு!
  பாட்டி பதிலுக்கு நானும் வெயிட்டிங்...
  \\

  நன்றி கவிநயா..பாட்டி பதில் விரைவில் அடுத்த பார்ட்ல :)

 41. Ramya Ramani said...

  \\சதங்கா (Sathanga) said...
  ramya,

  //ஆனா இது நம்ம லைப் டெசிஸன் . அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிரைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"//

  so practical and touching :))
  \\

  நன்றி சதங்கா..உங்களுக்கு அந்த கருத்து பிடிச்சிருக்கா சூப்பர்

  \\sathish said...
  கலகலப்பா போகுது :)) அருமை!
  \\

  நன்றி கவிஞரே!

  \\sathish said...
  //We Give the Requirement , Our Parents Pick the Vendors and They quote
  Finally the Successful Vendors get the Project.
  So It is Development and Lifetime Support//

  எப்படி இப்படி எல்லாம் :))
  \\

  இது Fellow Blogger "The Mask" சொன்ன கருத்து

 42. Ramya Ramani said...

  \\விஜய் said...
  absolutely superb ;-)

  ரம்யா, கலக்கறீங்க. படு இயல்பா போயிட்டிருக்கு :-) ஆஃபீஸ் போய் சாவகாசமா மறுபடியும் படிச்சுட்டு நிறைய கமென்ட் எழுதறேன்.
  \\

  நன்றி விஜய்..ஓ ஆபீஸ்ல போயிட்டு பொறுமையா திரும்பி படிக்கிறீங்களா?? ரொம்ப நல்லவரா இருக்கீங்களே!!

 43. Ramya Ramani said...

  \\விஜய் said...
  \\அதுனால நாம் கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணனும்.நிரைய பேசனும்.இன்னிக்கி முடியாது.நீயும் அதே மைண்ட் செட்ல தான் இருப்பே ,ஸோ நாம டைம் எடுத்து டிசைட் பண்ணுவோம்னு சொன்னாரு.எனக்கும் அவர் சொன்னது பிடிச்சுப்போச்சு"\\

  அதான் கௌதம் சொன்னதே பிடிச்சுப் போச்சே. அதுவே கைதமைப் பிடிசச மாதிரி தான். இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே கிரிமினல் புத்தியுள்ளவங்க. அவங்களா ஒண்ணும் சொல்லிட மாட்டாங்க :)
  \\

  அடடா என்ன விஜய் இப்படி சொல்றீங்க..அது வெட்கம் சார்!

  \\
  இம்ப்ரெஸ் ஆகியுமா ஃபோன் நம்பர் கொடுக்கலை. கௌதம் பாவம்.
  \\

  பின்ன இன்னும் முடிவாகல இல்லியா?

  \\Good Analogy. So the boy is the customer and the girl is the vendor. But this holds good only until marriage. No customer knows about this hard truth. After marriage the parties switch sides. Woman becomes customer and the man becomes the vendor, and worst thing, requirement changes every now and then :)
  இதெப்படி இருக்கு??\\

  IMHO, Hmm to tell you frankly ladies crib about things.But if you look closely it will be for your good.Just like parents correcting the child a wife does it after marriage

  \\வைரமுத்துவே உங்க உவமைக்கு தோற்றுப்போயிடுவார்
  \\

  விஜய் இது சுட்ட உவமை!
  ரமணி சந்திரன் படிங்க உங்களுக்கே தெரியும்..இது இங்க Appropriate தோணிச்சு அதுனால உபயோகப்படுத்தினேன் :)
  \\இப்படி பலவாறாக குழம்பியவனுக்கு கமலா பாட்டியே பதில் கூறினார்.\\
  கமலா பாட்டு கலக்கல் பார்டி :)

  சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடுங்க :)

 44. Ramya Ramani said...

  \Divyapriya said...
  பாட்டி செம ஸ்பீட் தான் போல, கதை சூப்பரா போகுது...
  \\

  மிக்க நன்றி திவ்யபிரியா :)

  \\gils said...
  arranged marriageku s/w engr mathiri desci sooper :D
  \\

  Gils, Idhu Mask sonnadhu :)

  \\naanal said...
  கதை ரொம்ப நல்ல போய்ட்டு இருக்கு ரம்யா...
  எப்படி ஒருத்தரை பற்றி 10 நிமிஷத்துல முடிவெடுக்கறாங்களோண்ணு யோசிச்சுட்டு இருப்பேன்... இப்ப அதற்கு அழகா நீங்க கவுதம், உத்ரா
  உரையாடல் மூலம் சொல்லி இருக்கீங்க.. :)

  \\
  மிக்க நன்றி naanal

  \\naanal said...
  பாட்டி பயங்கரமான பாட்டி யா இருக்காங்களே...
  அவங்க விலாசம் இருந்தா கொடுங்களேன்.. ;) டிப்ஸ் வேணுங்கரப்போ கேட்டு வாங்கிக்கலாம்.. ;-)
  \\

  ஆஹா அவங்களுக்கு இவ்ளோ fansah!!

 45. Ramya Ramani said...

  \\ராமலக்ஷ்மி said...
  அழகாகப் போகிறது கதை. நான் சொல்ல நினைச்சதையே நாணலும் சொல்லியிருக்காங்க. சூப்பர் பாட்டியா இருக்காங்க.
  \\

  நன்றி ராமலஷ்மி மேடம் :)

  \\ambi said...
  அந்த பாட்டியை ஒரு பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க, நிறைய பேருக்கு ரொம்ப உதவியா இருக்கும்!(எனகில்லைப்பா) :))

  \\

  ஹிம்ம்ம் ஹிம்ம்ம் ஆரம்பிக்க சொல்லாமே

  \\Sri said...
  அச்சச்சோ எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு மட்டும் கதைத் தெரியலையே..!! :( உங்களுடைய இந்தக் கதைக்கு வந்தப் பின்னூட்டத்தால தான் நான் இப்படி பொலம்பறேன்..!! :( சாரி ரம்யா படிக்க டைம் இல்ல முழுசா முடிஞ்சதும் சொல்லுங்க வந்து படிக்கறேன்..!! :(( சாரி...!! :(
  \\

  Sri கொஞ்ச நாள்ல முடிஞ்சிரும்பா சேர்த்து படிச்சிடுங்க :)