Thursday, August 21, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-4

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

வியந்து நிற்க்கும் மஹேஷைக்கண்டு சிரிப்போடு,"என்ன மஹேஷ் அப்படி பாக்கற, என்ன நான் சொன்னது தான் நடக்க போகுதா?"என்றார்

"என்ன பாட்டி இப்படி கேக்கறீங்க அப்ப இது உங்க கெஸ்ஸா??"

"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"

"யப்பா பாட்டி நீங்க 2 பொண்ணு, 2 பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருக்கீங்கன்னு ப்ரூவ் பண்றீங்க.ஆனா பாட்டி அப்பா தான் கோவில்ல மீட் பண்ணலாம்னு சொன்னாரே அதுக்குள்ளே இது தேவையான்னு தான் யோசனையா இருக்கு"

"கோவில்ல பேசும்போது அவங்களுக்கு ப்ரைவஸி கிடைக்கும்னு நினைக்கறியா? சாதாரணமா தானே பேசப்போறா எந்த பிரச்சனையும் வராது.உத்ரா நல்ல புத்திசாலி எங்க எப்படி பேசனும்னு தெரியும்."

"மெதுவா பாட்டி கேட்டா அப்படியே உச்சி குளுர்ந்திடும் அவளுக்கு,இப்பவே என்ன பேசறதுன்னு உங்க கிட்ட தான் கேக்க போறாளாம்"

ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்தார் முதியவர்.

சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று, வீட்டில் ஆமைவேகத்தில் வேலைகள் நடந்தன.

சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.இது குடும்பத்தில் பினைப்பிற்க்கும்,பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும் என்பதில் சங்கரன் ரேவதி தம்பதிக்கு திடமான நம்பிக்கை இருந்தது.

அதே போல் அன்றும் அனைவரும் பேச அமர்ந்தும், எல்லோர் மனதிலும் ஒரு யோசனை இருப்பதைப்பாத்த உத்ரா இது தன்னைப்பற்றி தான் என்று முடிவுக்கு வந்தாள். நாமே இதை சரிசெய்யலாம் என்று நினைத்தவளாய் தந்தையிடம் சென்றாள்.

"அப்பா நான் சொல்றத கேட்டு நீங்க கோவப்படகூடாது.பிராமிஸ் பண்ணுங்க"

"என்னமா நான் தேவையில்லாம உங்கள திட்டிருக்கேனா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுடா"என்று அவள் தலையை கோதியவாறே கூறினார்.

"ஹிம்ம் அப்பா இது நேத்து நம்ம வீட்ல நடந்தத பத்தி தான். ஒவ்வொருத்தரும் எதையும் "Presume"பண்ணாம வெளிப்படையா பேசுவோம். நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்.

அவரும் நானும் ஜெனரலா பேசினோம்.வேலை டென்சன்ல சரியா பேச முடியாததுனால போன்ல பேசலாமான்னு கேட்டாரு,நான் தயங்கினதுனால அவர் நம்பர் கொடுத்திருக்காரு பேசச்சொல்லிருக்காரு.ஆனா உங்களுக்கு தெரியாம நான் எதுவுமே செய்து பழக்கம் இல்லாத்தினால உங்ககிட்ட சொல்றேன்.நீங்க என்னப்பா சொல்றீங்க?"

"உத்ரா எனக்கு உன்னப்பார்த்தா பெருமையா இருக்குமா.சரி இதை சொல்லு பேசினத வெச்சு என்ன பீல் பண்றே"

வெட்கத்துடனே"அப்பா அவரு ரொம்ப நல்லா பேசறாரு.அம்மா அப்பா மேல மதிப்பா இருக்காரு.I think he is closely connected to his family"

"உத்ரா நீ ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ இன்னிக்கி பாக்கற கவுதம் வானத்திலேர்ந்து வரலே,அவரை இப்போ இந்த நிலமைக்கு கொண்டு வந்தது அவரோட அம்மா அப்பா தான். நாளைக்கே கல்யாணத்திற்க்கு அப்புறம் அவங்க அம்மாவ 'அம்மா'ன்னு மனசாற கூப்பிடறது உத்தமம்.

அப்பா உன்கிட்ட இப்போ கேக்கறது உன்னோட கனவைப்பத்தி.நமக்கு வரவரு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு உனக்கு எண்ணம் இருக்கலாம்.அதை அவர் மீட் பண்றாரா?" மகளின் தாயகவும்,கணவனின் மனதைப்படித்தவர் போலவும் ரேவதி பேசினார்.

"அம்மா கண்டிப்பா எப்படி அவரு அம்மா மாதிரி வைப் இருக்கனும்னு சொல்றாரோ அதே மாதிரி எனக்கும் வரவரு அப்பா மாதிரி ஆர்கனைஸ்டா,மஹேஷ் மாதிரி என்ன நக்கல் அடிச்சாலும் என் மேல கேரோட இருக்கனும்னு பீல் பண்ணுவேன். இவங்க தானே என்னோட ஹீரோஸ்"

"அப்பா உங்களுக்கும் எனக்கும் இப்போ ஜூரம் தான். தங்கச்சி என்ன போடா ஜீரோன்னு சொல்லாம ஹீரோவாக்கிட்டியே மா.இந்த அண்ணன் எப்படிமா தாங்குவேன் எப்படித் தாங்குவேன்!!"

"மஹேஷ்! ஹிம்ம் சொல்லுமா உன்னோட அப்படிப்பட்ட தேவை எல்லாம் மீட் பண்றாரா?"

"அப்பா என்னால 100% சொல்ல முடியல ஆனா நம்பிக்கை இருக்கு.நான் அவங்க பேமலியோட எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு"

"உத்ரா நீ இவ்ளோ தெளிவா பேசறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேசுவீங்களே அது பேரு என்ன?"
"சுவீட் நத்திங்ஸ் பாட்டி" என்று சொல்லி நாக்கை கடித்தாள் உத்ரா.

சிரித்துவிட்டு "ஹிம்ம் அப்போ அவரோட,அப்போ அவரோட,அவர் வீட்டாளுங்களோட விருப்பு வெறுப்பு,இயல்பு எல்லாம் தெரிஞ்சிக்கோ.நாளைக்கே உன்னோட நாத்தனார்,அவங்க பசங்க வீட்டுக்கு வந்தா நீ குறிப்பறிஞ்சு நடக்கறத பாக்கும்போதே அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்" அமைதியாகவும் தெளிவாகவும் விளக்கினார் கமலா பாட்டி.

"உத்ரா அப்பறம் நீ அவருக்கும் அவர் உனக்கும் தான் எல்லாமே.எதாவது மனகசப்பு வந்தாலும் நீ இந்த ஈகோவ மட்டும் வளக்காதே.

இரண்டொருதடவை நீ விட்டு கொடுத்து போனா தானா அவரு உன்னை மதிப்பாரு. உன்னை கேக்காம எதுவும் செய்யவும் யோசிப்பாரு" தன்னுடைய வெற்றிகரமான இல்லற ரகசியத்தை பகிர்ந்தார் ரேவதி.

"அம்மா கலக்கறீங்க விட்டுகொடுக்கறாமாதிரி நீங்க விண் பண்ணுவீங்களா?"

"அப்படி இல்ல மஹேஷ் நாங்க தான் எங்க பிறந்த வீட்டுக்கும்,புகுந்த வீட்டுக்கும் பாலம்.நான் கொடுக்கற பிக்சர்ல தான் உங்க அப்பாவோட மதிப்பே இருக்கு.ஸோ நான் பொறுமையா,விவேகமா,புத்திசாலித்தனமா இருக்கனும் இல்லியா?

உனக்கும் இதே தான். நீ எப்படி உன்னோட மனைவியை ட்ரீட் பண்றியோ அதை வெச்சு தான் மத்தவங்களும் நடப்பாங்க .புரியுதா?"

"அதுவும் சரிதான் உத்ரா உங்க அம்மா சொல்றதையே தான் செய்தா, செய்துகிட்டும் இருக்கா.எனக்கு தெரிஞ்சு நீ உனக்கு உன் கணவர் தரும் முதல் பரிச என்னிக்கும் பத்திரமா வெச்சுக்கோ.உங்க அம்மாவுக்கு நான் முதல்ல வாங்கி கொடுத்த ஹேன்ட் பேக இன்னும் பத்திரமா வெச்சிருக்கா.எனக்கும் அதை நினைக்கும் போது பெருமைதான்" மனைவியின் வெட்கத்தை பார்த்து பெருமை பொங்க கூறினார்.

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சிரிக்கும் ஓசைக்கு ஏற்றவாறு டெலிபோனும் ஒலிக்க, பேசிவிட்டு வந்த சங்கரன் "அவங்க வீட்லேர்ந்து தான் புதன் கிழமை பெருமாள் கோவில்ல மீட் பண்ணலாமான்னு கேட்டாங்க.நானும் சரின்னு சொல்லிட்டேன்"என்றார்.

"பெண் கிடைச்சாலும் புதன் கிடைக்காதாம்.எல்லாம் நல்லபடியா நடக்கும்"என்ற கமலா பாட்டியின் குரலை கேட்ட உத்ராவிற்க்கு ஒரு கவிதை தோன்றியது .

உன்னை நினைக்கும் போது துடிப்பது

என் இதயமா...?

இல்லையில்லை

என்னுள் இருக்கும் உன் இதயம்!

கிளுக்கி சிரித்தவாறே சென்றவளை பார்த்த நால்வரும் மனதாற அவள் சிறப்புடன் வாழ வாழ்த்தினர்.

(சுபம்)

P.S : என்னுடைய முதல் தொடர்கதையை தொடர்ந்து படித்த,கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி :)

56 comments:

 1. வெட்டிப்பயல் said...

  எங்க பாட்டிக்கெல்லாம் CBIனா என்னனே தெரியாது :)

  இங்க பாட்டி ஸ்வீட் நத்திங்ஸ் எல்லாம் பேசறாங்க... மெட்ராஸ்ல இப்படி இருப்பாங்க போல :)

  முதல் கதை என்பதால் ஓகே சொல்லலாம்...

  டயலாக்ஸ் எல்லாம் நல்லா இருக்குமா.

  தொடர்ந்து எழுதினா கதை ஃப்லோ சூப்பரா வரும்னு நினைக்கிறேன்... அதே மாதிரி முடிவும் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாம்.

 2. Divya said...

  அட........கதை அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா:(

 3. Divya said...

  டயலாக்ஸ் எல்லாம் ரொம்ப இயல்பா......ஒரு குடும்பத்துக்குள் நடக்கிற கேஷுவல் உரையாடலகளாய் ரொம்ப நல்லாயிருக்கு:))

 4. Divya said...

  \\உன்னை நினைக்கும் போது துடிப்பது
  என் இதயமா இல்லையில்லை
  என்னுள் இருக்கும் உன் இதயம்!\

  கலக்கல்ஸ் ரம்யா:))

  கவிதை வரிகள் சூப்பரு!!

  \உன்னை நினைக்கும் போது துடிப்பது
  என் இதயமா...?
  இல்லையில்லை
  என்னுள் இருக்கும்
  உன் இதயம்!\

  இப்படி மடக்கி எழுதியிருந்தா இன்னும் எஃப்க்டிவ்வா இருந்திருக்குமோ?

  வரிகள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு ரம்யா, பாராட்டுக்கள்!!

 5. Divya said...

  \அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"\\

  அட....பாட்டி விவரமான 'பார்டி'தான்!

  கண்ஜாடை எல்லாம் சூப்பரா கண்டுபிடிக்கிறாங்க:)))

 6. Divya said...

  \சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.இது குடும்பத்தில் பினைப்பிற்க்கும்,பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும் என்பதில் சங்கரன் ரேவதி தம்பதிக்கு திடமான நம்பிக்கை இருந்தது.\

  மிக நல்ல பழக்கம்:)

  முடிந்தவரை இரவு உணவு தினமும் குடும்பமாக அமர்ந்து அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசி பகிர்ந்துக்கொண்டே உணவருந்துவது எங்கள் வீட்டின் வழக்கம்.

  கதையின் நடை மிக அழகு ரம்யா, என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் முதல் தொடர் கதைக்கு!!

  தொடர்ந்து நிறைய எழுதுங்க.....படிக்க ஆவலுடன் வெயிட்டீங்!!

 7. கயல்விழி said...

  நல்ல தொடர், நல்ல முயற்சி :)

  மேலும் கதைகள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

 8. Ramya Ramani said...

  திவ்யா மாஸ்டர் நீங்க சொல்லி கேக்காம இருப்பேனா மாத்தியாச்சு..மிக்க நன்றி :)

 9. Divya said...

  \\Ramya Ramani said...
  திவ்யா மாஸ்டர் நீங்க சொல்லி கேக்காம இருப்பேனா மாத்தியாச்சு..மிக்க நன்றி :)\\

  குட் கேர்ள்:)))

 10. M.Saravana Kumar said...

  பின்னீட்டீங்க..

  ஓகே. இன்னொரு கதாசிரியர் கெடச்சாச்சி..
  :)

 11. M.Saravana Kumar said...

  // Divya said...
  டயலாக்ஸ் எல்லாம் ரொம்ப இயல்பா......ஒரு குடும்பத்துக்குள் நடக்கிற கேஷுவல் உரையாடலகளாய் ரொம்ப நல்லாயிருக்கு:))//

  ரிப்பீட்டேய்..
  :)

 12. M.Saravana Kumar said...

  "கவிகதாசிரியர்" திவ்யா கிட்டே இருந்து பலமான பாராட்டுக்கள் வாங்கிவிட்டீர்கள்..
  :)

 13. நாடோடி said...

  ஆஹா! எல்லா பாட்டியும் இப்படி இருந்திட்டா பாதி பிரச்சனை தீர்ந்திடும் போலிருக்கே..
  நல்ல தொடர்... வாழ்த்துக்கள் ரம்யா!

 14. கப்பி | Kappi said...

  நல்ல 'feel good' தொடர்கதை! தொடர்ந்து கலக்குங்க!!

 15. துர்கா said...

  முதல் கதை அருமையான கரு .அப்புறம் வசனம்,நடுவுல வர கவிதை,குடும்பத்தில் நடக்கின்ற சின்ன சின்ன சுவரசியமான வசனங்கள் எல்லாமே அற்புதம்.

  முதல் கதைக்கு இது நல்ல முயற்சி,இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.அப்படியே வருங்காலத்தில் நீங்களும் பெரிய எழுத்தாளர் ஆகிட்டீங்கன்னா உங்க ஆட்டோகிராப் போட்டு உங்க புக்கை அனுப்பி வைச்சுடூங்க :)

 16. ஜி said...

  //சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று//

  ஹலோ... இது மாதிரிலாம் ஒரு நாலஞ்சு கதை எழுதுனதுக்கப்புறம்தான் போடனும்... இப்படி முதல் கதைலையே பின்னி பெடல எடுக்கறீங்க....

  கதையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஓர் திருமண பந்த அறிவுரை.... அருமையா உங்க கருத்த சொல்லிருக்கீங்க...

  கௌதமுக்கும் ரம்யாக்கும்.. oops.. sorry.. உத்ராக்கும் ஒரு ஃபைட் ஸீன் ஒன்னு வச்சி, அப்புறம் செண்டி டையலாக், அப்புறம் ஒரு சோகப் பாட்டுன்னு வச்சிருந்தீங்கன்னா இன்னும் சூப்பரா வந்திருக்கும் ;)))

  அடுத்த கதைல நெறைய டிவிஸ்டோட ஒரு கதைய எதிர்பார்க்கும் அன்பு வாசக பெருமக்கள்.... :)))

 17. Sundar said...

  வாழ்த்துக்கள்...உத்ரா பொண்ணுக்கு. கொஞ்ச நாள் கழிச்சி அவங்க வாழ்க்கை எப்டி போகுதுன்னு அடுத்த பாகம் போடுவீங்க தானே?

 18. கவிநயா said...

  //உன்னை நினைக்கும் போது துடிப்பது
  என் இதயமா...?
  இல்லையில்லை
  என்னுள் இருக்கும் உன் இதயம்//

  கவிதை வரிகள் அருமை. நல்ல எழுத்து நடை ரம்யா. வாழ்த்துகள்.

 19. ராமலக்ஷ்மி said...

  "நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே..
  ஆஹா...."
  சொல்லும்படி அமைந்து விட்டது.
  முதல் தொடர் என நம்ப முடியாதபடி நல்ல நடை. தொடர்ந்து பல தொடர்கள் எழுத வாழ்த்துக்கள் ரம்யா!

 20. விஜய் said...

  அடடே அதுக்குள்ள முடிஞ்சு போச்சா? இன்னும் ஒரு ஐந்தாறு பாகம் வைத்து கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிருக்கலாமே. அதனாலென்ன? இந்த கதையோட sequel'ஆ அடுத்த கதையை எழுதுங்க.

  \\சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,.... .... பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும்\\
  நல்ல பழக்கம் !!
  எல்லோர் அமல் படுத்தினால் நல்லா இருக்கும்.

  எனக்கு இந்த கதையிலே மஹேஷ் காரெக்டர் தான் ரொம்ப பிடிச்சிருந்தது.

  அடுத்த கதையை சீக்கிரம் தொடங்குங்க!

 21. Divyapriya said...

  //சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.//

  டீவி செய்த சதியால இப்ப பல வீடுகள்ல இது நடக்கறதில்லை :-(

 22. Divyapriya said...

  //ஆனா உங்களுக்கு தெரியாம நான் எதுவுமே செய்து பழக்கம் இல்லாத்தினால உங்ககிட்ட சொல்றேன்.//

  உத்ரா! நீ ரொம்ப நல்லவம்மா...நல்லவ ;))

 23. Divyapriya said...

  //இரண்டொருதடவை நீ விட்டு கொடுத்து போனா தானா அவரு உன்னை மதிப்பாரு. உன்னை கேக்காம எதுவும் செய்யவும் யோசிப்பாரு//

  ஆஹா...என்ன ஒரு சதி திட்டம்!!! நல்லா தான் இருக்கு, note பண்ணி வச்சுக்கறேன் :-D

 24. Divyapriya said...

  கதை சூப்பர், அத விட அங்கங்க நீங்க தெளிச்சு விட்டிருந்த அறிவுரைகளும், டிப்ஸ்களும் டாப்போ டாப் ரம்யா...சொல்ல மறந்துட்டனே, கவித டாப் டக்கர் :-))
  அடுத்த கதைல இன்னும் நிறைய ட்விஸ்டோட வந்து மிரட்டுங்க :-)) வாழ்த்துக்கள்.

 25. gils said...

  arranged love marriagena ithu thaano?? enakenamo ivanga yosikarathelam paatha mega serial baathipu theriuthu :D divayku poati ready :))

 26. Sri said...

  என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...

 27. naanal said...

  அட கதை அப்பவே முடிந்து விட்டதா ?

  //"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"//

  பாட்டி தான் கதைல highlight ... ;-)

 28. அவனும் அவளும் said...

  நல்லா இருக்கு ரம்யா. கொஞ்ச நாள் கழிச்சி இதே தொடர் கதையவே தொடரலாம்.

 29. priyamanaval said...

  enna ramya adhukulla mudichute... pala peruku usefula neraya tips kuduthuruke... :)...

  kavidhai kalakss...
  aana eppadi adhukullaye andha ponnu mapillaya avolo kaadhalika aarambichuta...
  mudhal sandhipileye ithnaai aazhamana kaadhal erpadumaa endru ennaku sandhegamaa irrukudhu...

 30. முகுந்தன் said...

  இன்னும் நிறைய எழுதுங்க ரம்யா , ஆனா இதே மாதிரி சின்ன தொடரா எழுதுங்க..
  டிவீ தொடர் மாதிரி எப்போ முடியும்னு நினைக்க கூடாது, ஏன்னா ரொம்ப பெருசா
  இருந்தா சுவாரஸ்யம் போய்டும் அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து.

 31. ஸ்ரீ said...

  Supera irundhadhu madam kadha aaana ivlo seekirama mudinjiduche.......

 32. sathish said...

  //
  //சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று//

  ஹலோ... இது மாதிரிலாம் ஒரு நாலஞ்சு கதை எழுதுனதுக்கப்புறம்தான் போடனும்... இப்படி முதல் கதைலையே பின்னி பெடல எடுக்கறீங்க....
  //

  ரிப்பீட் :)))

 33. சதங்கா (Sathanga) said...

  ரம்யா,

  //அட........கதை அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா:(//

  அதானே ... எல்லோரும் சொன்ன மாதிரி நல்ல நடை. ஒரு குடும்ப சூழலை அழகாக சில கதாபாத்திரங்களின் துணை கொண்டு, காதலோடு சொல்லிய விதம் அற்புதம். என்னங்க அடுத்த தொடர் ரெடியா ???? :)))

 34. Murugs said...

  எளிய‌ அழ‌கான‌ ந‌டையில் க‌தை சென்ற‌து இனிமை:)

  நிறைய‌ பாயிண்ட்ஸ் சொல்லி இருக்கீங்க‌. எல்லாத்தையும் மைன்ட்ல‌ வ‌ச்சிகிறேன். ;)

 35. புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  எங்க பாட்டி எப்படி இருந்தாங்கன்னே எனக்கு தெரியாது. போட்டோ கூட கிடையாது. :(

  தொடர்ந்து தொடர்கதை எழுத வாழ்த்துகள்

 36. Murugs said...

  "திண்ணை" ச‌ங்கிலியை தொட‌ர‌ உங்க‌ளை அழைத்திருக்கிறேன்.

 37. GURU said...

  hey ramya nalla iruku story.... i really liked it.... im jus wondering is it d same ramya who i know from childhood..... were did u hide all this talent so long..... gr8 goin...

  xpecting inum nariya stories....

  ALL THE BEST!!!!!!!!!!

 38. ஜி said...

  Hello... enga aduththa postaiye kanoam???

 39. இனியவள் said...

  கதை நன்றாக உள்ளது!!

 40. Saravana Kumar MSK said...

  அடுத்ததா ஏதாவது பதிவு போடற ஐடியா இருக்கா??

 41. Ramya Ramani said...

  \\
  வெட்டிப்பயல் said...
  எங்க பாட்டிக்கெல்லாம் CBIனா என்னனே தெரியாது :)

  இங்க பாட்டி ஸ்வீட் நத்திங்ஸ் எல்லாம் பேசறாங்க... மெட்ராஸ்ல இப்படி இருப்பாங்க போல :)

  முதல் கதை என்பதால் ஓகே சொல்லலாம்...

  டயலாக்ஸ் எல்லாம் நல்லா இருக்குமா.

  தொடர்ந்து எழுதினா கதை ஃப்லோ சூப்பரா வரும்னு நினைக்கிறேன்... அதே மாதிரி முடிவும் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாம்.
  \\

  கருத்திறக்கு நன்றி அண்ணா.. அடுத்த முறை இன்னும் நல்ல முடிக்க முயற்சிபண்றேன்.. இப்படித்தான் போக போகுது கதைன்னு நினைச்சு எழுதினது..

  \\Divya said...
  டயலாக்ஸ் எல்லாம் ரொம்ப இயல்பா......ஒரு குடும்பத்துக்குள் நடக்கிற கேஷுவல் உரையாடலகளாய் ரொம்ப நல்லாயிருக்கு:))
  \\

  நன்றி திவ்யா :)

  \\முடிந்தவரை இரவு உணவு தினமும் குடும்பமாக அமர்ந்து அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசி பகிர்ந்துக்கொண்டே உணவருந்துவது எங்கள் வீட்டின் வழக்கம்\\

  ஓ அப்படியா...கதைல சொல்லிருக்கும் பழக்கம் எங்க வீட்டு பழக்கம் :)

 42. Ramya Ramani said...

  \\கயல்விழி said...
  நல்ல தொடர், நல்ல முயற்சி :)

  மேலும் கதைகள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
  \\

  நன்றி கயல்.கண்டிப்பாக எழுத முயறிச்சிக்கறேன். :)

  \\M.Saravana Kumar said...
  பின்னீட்டீங்க..

  ஓகே. இன்னொரு கதாசிரியர் கெடச்சாச்சி..
  :)
  \\

  மிக்க நன்றி சரவணகுமார் :)

  \\நாடோடி said...
  ஆஹா! எல்லா பாட்டியும் இப்படி இருந்திட்டா பாதி பிரச்சனை தீர்ந்திடும் போலிருக்கே..
  நல்ல தொடர்... வாழ்த்துக்கள் ரம்யா!
  \\

  முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நாடோடி :)

  \\கப்பி | Kappi said...
  நல்ல 'feel good' தொடர்கதை! தொடர்ந்து கலக்குங்க!!
  \\

  நன்றி கப்பி :)

  \\துர்கா said...
  முதல் கதை அருமையான கரு .அப்புறம் வசனம்,நடுவுல வர கவிதை,குடும்பத்தில் நடக்கின்ற சின்ன சின்ன சுவரசியமான வசனங்கள் எல்லாமே அற்புதம்.
  முதல் கதைக்கு இது நல்ல முயற்சி,இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.அப்படியே வருங்காலத்தில் நீங்களும் பெரிய எழுத்தாளர் ஆகிட்டீங்கன்னா உங்க ஆட்டோகிராப் போட்டு உங்க புக்கை அனுப்பி வைச்சுடூங்க :)
  \\

  நன்றி துர்கா எல்லாம் உங்கள் ஆசி :P

 43. Ramya Ramani said...

  \\ஜி said...
  //சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று//

  ஹலோ... இது மாதிரிலாம் ஒரு நாலஞ்சு கதை எழுதுனதுக்கப்புறம்தான் போடனும்... இப்படி முதல் கதைலையே பின்னி பெடல எடுக்கறீங்க....

  \\

  நன்றி ஜி :)

  \\கதையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஓர் திருமண பந்த அறிவுரை.... அருமையா உங்க கருத்த சொல்லிருக்கீங்க...
  \\

  yessuunga :)

  \\கௌதமுக்கும் ரம்யாக்கும்.. oops.. sorry.. உத்ராக்கும் ஒரு ஃபைட் ஸீன் ஒன்னு வச்சி, அப்புறம் செண்டி டையலாக், அப்புறம் ஒரு சோகப் பாட்டுன்னு வச்சிருந்தீங்கன்னா இன்னும் சூப்பரா வந்திருக்கும் ;)))
  \\

  அப்படியா..அடுத்த முறை முயற்சி பண்ணுவோம் :)) ஒன்னு சாரே இது முழுக்க முழுக்க கற்பனை கதை..

  \\அடுத்த கதைல நெறைய டிவிஸ்டோட ஒரு கதைய எதிர்பார்க்கும் அன்பு வாசக பெருமக்கள்.... :)))
  \\

  மறுபடி நன்றி ..நல்லா எழுத முயற்சிக்கறேன் :)

 44. Ramya Ramani said...

  \\Sundar said...
  வாழ்த்துக்கள்...உத்ரா பொண்ணுக்கு. கொஞ்ச நாள் கழிச்சி அவங்க வாழ்க்கை எப்டி போகுதுன்னு அடுத்த பாகம் போடுவீங்க தானே?
  \\

  ஹா ஹா போட்டிருவோம்..
  இன்னொரு கதைக்கு கரு கொடுத்திட்டீங்களே நன்றி சுந்தர்

  \\கவிநயா said...
  //உன்னை நினைக்கும் போது துடிப்பது
  என் இதயமா...?
  இல்லையில்லை
  என்னுள் இருக்கும் உன் இதயம்//

  கவிதை வரிகள் அருமை. நல்ல எழுத்து நடை ரம்யா. வாழ்த்துகள்.
  \\

  நன்றி அக்கா :)

  \\ராமலக்ஷ்மி said...
  "நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே..
  ஆஹா...."
  சொல்லும்படி அமைந்து விட்டது.
  முதல் தொடர் என நம்ப முடியாதபடி நல்ல நடை. தொடர்ந்து பல தொடர்கள் எழுத வாழ்த்துக்கள் ரம்யா!
  \\

  நன்றி ராமலக்ஷ்மி மேடம்

 45. Ramya Ramani said...

  \\விஜய் said...
  அடடே அதுக்குள்ள முடிஞ்சு போச்சா? இன்னும் ஒரு ஐந்தாறு பாகம் வைத்து கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிருக்கலாமே. அதனாலென்ன? இந்த கதையோட sequel'ஆ அடுத்த கதையை எழுதுங்க.
  \\

  ஹா ஹா எழுதலாமே !!

  \\சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,.... .... பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும்\\
  நல்ல பழக்கம் !!
  எல்லோர் அமல் படுத்தினால் நல்லா இருக்கும்.
  \\

  மேலே சொன்ன மாதிரி இது எங்க வீட்டு பழக்கம் விஜய்..

  \\எனக்கு இந்த கதையிலே மஹேஷ் காரெக்டர் தான் ரொம்ப பிடிச்சிருந்தது.
  \\

  Same Pinch. ஏன்னா அவரு நம்ம கேஸு he he :)

  \\அடுத்த கதையை சீக்கிரம் தொடங்குங்க!
  \\

  :)

 46. Ramya Ramani said...

  \\Divyapriya said...
  ஆஹா...என்ன ஒரு சதி திட்டம்!!! நல்லா தான் இருக்கு, note பண்ணி வச்சுக்கறேன் :-D\\

  அது இப்படி தான் சூட்டிகையா இருக்கனும்..

  \\Divyapriya said...
  கதை சூப்பர், அத விட அங்கங்க நீங்க தெளிச்சு விட்டிருந்த அறிவுரைகளும், டிப்ஸ்களும் டாப்போ டாப் ரம்யா...சொல்ல மறந்துட்டனே, கவித டாப் டக்கர் :-))
  அடுத்த கதைல இன்னும் நிறைய ட்விஸ்டோட வந்து மிரட்டுங்க :-)) வாழ்த்துக்கள்.
  \\

  அக்கா நன்றிங்கக்கா :)
  நானும் முயற்சி பண்ரேனுங்க!

  \\gils said...
  arranged love marriagena ithu thaano?? enakenamo ivanga yosikarathelam paatha mega serial baathipu theriuthu :D divayku poati ready :))
  \\

  Gils en en ippadi..divya master enge naan enge..edho naan enakku therinjamadiri ezhudaren niinga vera !

  \\Sri said...
  என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
  \\

  Sri இனிக்கி முடிச்சிட்டேன் பா வேலைய..

  \\naanal said...
  அட கதை அப்பவே முடிந்து விட்டதா ?

  //"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"//

  பாட்டி தான் கதைல highlight ... ;-)
  \\

  Exactly :)

 47. Ramya Ramani said...

  \\அவனும் அவளும் said...
  நல்லா இருக்கு ரம்யா. கொஞ்ச நாள் கழிச்சி இதே தொடர் கதையவே தொடரலாம்.
  \\

  முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி அவனும் அவளும் :)

  \\priyamanaval said...
  enna ramya adhukulla mudichute... pala peruku usefula neraya tips kuduthuruke... :)...

  kavidhai kalakss...
  aana eppadi adhukullaye andha ponnu mapillaya avolo kaadhalika aarambichuta...
  mudhal sandhipileye ithnaai aazhamana kaadhal erpadumaa endru ennaku sandhegamaa irrukudhu...
  \\

  Priya. ponnu udane love at first sight ellam illa pa..yosichchu thaan..avar pathi vishayamellam kettu than yosikkara.It shows her Confidence in Him :)

  \\முகுந்தன் said...
  இன்னும் நிறைய எழுதுங்க ரம்யா , ஆனா இதே மாதிரி சின்ன தொடரா எழுதுங்க..
  டிவீ தொடர் மாதிரி எப்போ முடியும்னு நினைக்க கூடாது, ஏன்னா ரொம்ப பெருசா
  இருந்தா சுவாரஸ்யம் போய்டும் அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து.
  \\

  நன்றி முகுந்தன் :)

  \\ஸ்ரீ..Supera irundhadhu madam kadha aaana ivlo seekirama mudinjiduche.......\\

  நன்றி ஸ்ரீ..அப்படியா தோணுது இப்படித்தான் முடிக்கனும்னு எழுதினது..

 48. Ramya Ramani said...

  \\sathish said...
  //
  //சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று//

  ஹலோ... இது மாதிரிலாம் ஒரு நாலஞ்சு கதை எழுதுனதுக்கப்புறம்தான் போடனும்... இப்படி முதல் கதைலையே பின்னி பெடல எடுக்கறீங்க....
  //

  ரிப்பீட் :)))
  \\

  நன்றி சதீஷ்

  \\சதங்கா (Sathanga) said...
  ரம்யா,

  //அட........கதை அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா:(//

  அதானே ... எல்லோரும் சொன்ன மாதிரி நல்ல நடை. ஒரு குடும்ப சூழலை அழகாக சில கதாபாத்திரங்களின் துணை கொண்டு, காதலோடு சொல்லிய விதம் அற்புதம். என்னங்க அடுத்த தொடர் ரெடியா ???? :)))
  \\

  நன்றி சதங்கா அண்ணே..அடுத்த தொடர்..எழுதனும்...கரு ரெடி :)

  \\Murugs said...
  எளிய‌ அழ‌கான‌ ந‌டையில் க‌தை சென்ற‌து இனிமை:)

  நிறைய‌ பாயிண்ட்ஸ் சொல்லி இருக்கீங்க‌. எல்லாத்தையும் மைன்ட்ல‌ வ‌ச்சிகிறேன். ;)
  \\

  நன்றி முருக்ஸ்.. அட பாயிண்ட் எல்லாம் நோடடா.. குட் குட்

 49. Ramya Ramani said...

  \\புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  எங்க பாட்டி எப்படி இருந்தாங்கன்னே எனக்கு தெரியாது. போட்டோ கூட கிடையாது. :(

  தொடர்ந்து தொடர்கதை எழுத வாழ்த்துகள்
  \\

  முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி அப்துல்லா :)

  \\Murugs said...
  "திண்ணை" ச‌ங்கிலியை தொட‌ர‌ உங்க‌ளை அழைத்திருக்கிறேன்.
  \\

  விரைவில் பதிவிடறேன் முருக்ஸ்

  \\GURU said...
  hey ramya nalla iruku story.... i really liked it.... im jus wondering is it d same ramya who i know from childhood..... were did u hide all this talent so long..... gr8 goin...

  xpecting inum nariya stories....

  ALL THE BEST!!!!!!!!!!
  \\

  Thanks Guru.Hey poi solladhe appayum ippayum namakku dhan kadhai vidaradhu pazhakkamachche.he he ;)

 50. Ramya Ramani said...

  \\இனியவள் said...
  கதை நன்றாக உள்ளது!!
  \\
  நன்றி இனியவள் :)

  \\ஜி said...
  Hello... enga aduththa postaiye kanoam???

  Saravana Kumar MSK said...
  அடுத்ததா ஏதாவது பதிவு போடற ஐடியா இருக்கா??

  \\

  வேலை செய்ய நீயே என் ரைட் சாய்ஸ்ன்னு மேனெஜர் சொல்லிட்டாரே..விரைவில் பதிவிடரேனுங்க..

  ஸ்ஸ்ஸ் ஆணி அதிகம்ன்னு எப்படியெல்லாம் சொல்லவேண்டியிருக்கு..ஹிம்ம்ம்ம்

 51. இவன் said...

  நல்லா இருக்குங்க கதை, கடைசீல வர்ர கவிதையும் கூட‌

 52. Shwetha Robert said...

  Very well written Ramya,
  that poem at the last is so nice, hats off:))

 53. Ramya Ramani said...

  நன்றி இவன் :)

  Thanks Shwetha :)

 54. Sri said...

  இன்னைக்கு தான் புல் கதையும் படிச்சேன்....ரியலி சூப்பர்..!! :)))))

 55. Ramya Ramani said...

  நன்றி Sri :)

 56. அபி அப்பா said...

  ஏம்மா அந்த ரும்யாவா நீநீநீநீ! அசத்தர போ:-)))