Saturday, June 21, 2008

மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..? - என் கருத்துக்கள்

இன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்
1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
2. சமூகத்தில் பெண்களின் நிலை.
3.மென் துறையில் பெண்களின் நிலை.

மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்
மென் துறையில் வேலை வேண்டுமா? நீங்கள் என்ன பயிற்சி பெற வேண்டும் எப்படி திறமையை வளர்த்துகொள்ளவேண்டும் என்பதை பற்றிய தெளிவான ஒரு தொடரை திரு வெட்டி அவர்களே பதிவிட்டிருக்கிறார்.படிக்க இங்கே சொடுக்கவும்.
வள்ளி அவர்கள் கூருவது போல, ஆங்கில பயிற்சி முக்கியம்.நான் இருப்பது தமிழ்நாடு எனக்கு ஆங்கில அறிவு எதற்க்கு என்ற வாதம் வேண்டாம்.நாம் அதிகம் வேலை செய்யபோவது வெளிநாட்டினருக்கே,அவர்களிடம் பேச ஒரு பொது மொழியாக ஆங்கிலத்தை கருதலாமே!என்ன தான் நீங்கள் அறிவில் கூர்மையாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த மொழி பயிற்சி அவசியம்.

சமூகத்தில் பெண்களின் நிலை
நம்முடைய சமூகத்தில் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா என்றால் "ஆம்" என்று சொல்வேன்.இப்போது பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் எதார்த்தமாக கருதப்படுகிறது இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு பிடித்த வேலை செய்யும் அளவு.ஆனால் நம் மனதில், பெண்களை ஆணுக்கு சமமாக எல்லா நேரங்களும் ஒப்பிடுகிறோமா என்றால் இல்லை தான். உதாரணதிற்க்கு, விஜய் டீவி வழங்கிய "நீயா நானா"வில் வாதிட்ட ஒரு பெண் "நான் பெண் என்பதால் விரும்பிய படிப்பு படிக்கவைக்க்வில்லை".இது சில வீடுகளில் இன்னும் நடக்கும் கசப்பான உண்மை.

வள்ளி அவர்களில் பதிவில் ஒருவர் பின்னூட்டதில் குறிப்பது போல் "பெண்கள் கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்". இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்.ஏன் எவ்வளவு பெண்கள் கணிதத்தை விருப்பபாடமாக எடுத்து படிக்கிறார்கள்? பெண்/ஆண் குழந்தையோ பாடங்களை படிக்க சிரமப்பட்டால், அவர்களுக்கு பிடித்தாற்போல்,அவர்களுக்கு பிடித்தம் வருவது போல் சொல்லிதறவேண்டும்.

ஆனால், இன்னும் சிலர் கூரும் சில வாதங்கள்

1. பெண்கள் அதிக நேரம் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனனம் செய்து மதிப்பெண் எடுக்கிறாள்.ஆண் பிள்ளைகள் விளையடிக்கொண்டே இருந்தாலும் கடைசி நேரத்தில் படித்து மதிப்பெண் எடுக்கிறான் - இதை நான் மறுக்கிறேன் , நானும் ஒரு பெண் என்பதால் அல்ல.சில பெண்கள் இயற்கயிலேயே, "Reserved Type"ஆக இருப்பர்.ஷாப்பிங் செய்தோ,டீவி பார்தோ வீட்டிலேயே இருப்பதால் அவ்வாறு சிலருக்கு தோன்றுகிறது.ஆணோ பெண்ணோ, மனதை ஒருமித்து படித்தால்,எளிமையாக படிக்கலாம் இல்லையா?

2.சிலர் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன் "பெண் IIT Coaching எல்லாம் சென்று என்ன செய்ய போகிறாள்,எப்படியும் கல்யாணத்திற்க்கு பிறகு வீட்டை பார்த்து கொள்ள வேண்டியவள் தானே". ஏன் பெண் IIT-யில் படித்தாலோ, மருத்துவம் படித்தாலோ குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டாளா? அவளால் படிப்பிருந்தால் இன்னும் தீர்கமாக யோசிக்கமுடியும் தானே? Personal/Professional Life என்று வரும் போது அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம்.அதற்காக அவளின் படிப்பிற்கோ,கனவுகளுக்கோ தடை செய்ய கூடாது என்பது என் கருத்து.
மென் துறையில் பெண்களின் நிலை
1.அழகு பார்த்து வேலை கிடைக்கிறது - எல்லா உயிரினமுமே ஒரு விதத்தில் அழகு என்றாலும், புற அழகை பார்த்து வேலை கிடைப்பது இல்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் போது அதற்கேற்றார் போல் உங்களை Present பன்னி கொள்ளவேண்டும்."Toilet Slipper"ஓடு ஆபீஸ் செல்ல முடியாது தானே? உங்களுக்கு பிடித்த,வேலைக்கேற்ற decent ஆன உடைகளை அணிந்தால் "Self Confidence" வளரும்.

2.சக பெண் பணியாளர்களை மதிப்பது -
பெண்களை அவர்களின் டீம்களில் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.வேலை என்று வந்த பின்னர் ஏன் அவர்களின் பால் கருதபடுகிறது? ஏன் அவர்களால் நல்ல Solutions/Suggestions கூற முடியாதா? எனக்கு தெரிந்த வரை பெண்கள் பொருமையாக யோசித்து Long term Solutions கொடுப்பாள் என்று நம்புகிறேன்.அதற்காக ஆண்களால் முடியாது என்று சொல்லவில்லை.வேலை என்று வந்தவுடன் பால் பார்காதீர்கள்.பெண் என்பவள் கடலை போடவோ,Relax பன்னி பேசுவதற்காக மட்டுமே இல்லை.அவளும் உங்களை போல் ஏதொ சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவள் என்பதை சிரிதேனும் நினையுங்கள்.

3.பெண்கள் உயர் பதவியில் இருப்பது
சில நேரங்களில் பெண்கள் அவர்கள் திறமையாலே உயர் பதவியில் இருந்தாலும், அதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.அவளின் "Character" பற்றிய பேச்சு வருகிறது.இந்த நிலை மாற வேண்டும்.Office Politics என்பது மிகவும் பரவலாக இருப்பது தான்.இதில் அப்பெணின் வளச்சியை கொச்சை படுத்த வேண்டாமே! அப்பெணின் செயல் திறமையை மட்டுமே பாருங்கள்.

53 comments:

  1. ஜி said...

    :))

    உங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்....

    என்ன பண்றது?? ஒருத்தர் ரெண்டு பேரு பண்ற தப்பால மொத்த மக்களையும் சாடும் நம்முடைய சமூக போக்கும் ஒரு விதத்தில் காரணம்....

  2. gils said...

    avvvvvvv...neenga ivlo tamizh ezthuthuveengala !!! i mean..no offense meant..naan neenga englishla mattum adikara blogger nenachen..ipothaiku attendance..appalika reading and commenting

  3. Vijay said...

    ரம்யா, பெண்கள் நிறையவே மெந்துறையில் வெற்றிகளைக் கண்டிருந்த போதும், சில சமயம் மற்ற குழுவினரோடு ஒத்துப் போக மாட்டர்கள். எல்லாப் பெண்களும் இப்படி தான் என்று சொல்ல முடியாது. என்னுடைய சில சொந்த அனுபவத்தைக் கூறுகிறேன்.
    எனது டீமில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தார்கள். வேலையில் அவர்களிடம் எந்தக் குறையும் பெரிதாகச் சொல்ல முடியாது. ஆனால் அவர்களது attitude கொஞ்சம் தன்னைப்பற்றியதாகவே இருக்கும். நான், எனது வேலை அவ்வளவு தான். இன்னொரு சக பணியாளனுக்கு உதவி செய்யும் பக்குவம் இல்லை. ஏன்றைக்காவது இரவு கொஞ்சம் வேலை நிறைய இருந்தாலும் கூட இருக்க மாட்டார்கள். அவர்களை நான் குறை சொல்ல வில்லை. பெண் என்பதால் அவர்கள் வீட்டிற்கு சீக்கிரம் போவது அவசியம் தான். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் வேலை என்று வந்து விட்டால் ஆண் பெண் என்று பேதப் படுத்திப் பார்க்க முடியாது.
    மற்றொரு குறை, தான் என்ன நினைக்கிறோமோ அது தான் சரியென்று சொல்வது. ஒரு முறை ஒரு discussion'இல் ஒரு பெண் சொன்ன கூற்றுக்கள் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அதில் உள்ள disadvantages சொன்னதும், ஏதோ நாங்கள் அந்தப்பெண்ணிடம் தான் குறை சொல்வது போல் எடுத்துக்கொண்டு பெரிய சீன் போட்டுவிட்டார். She took it very personal (இது வேறொரு பெண்). அதற்குப் பிறகு என் டீமில் பெண்களே வேண்டாம் என்று மேலாளரிடம் (Manager)சொல்லிவிட்டேன் :(

  4. Gnaniyar @ நிலவு நண்பன் said...

    //.சக பெண் பணியாளர்களை மதிப்பது -
    பெண்களை அவர்களின் டீம்களில் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.வேலை என்று வந்த பின்னர் ஏன் அவர்களின் பால் கருதபடுகிறது? ஏன் அவர்களால் நல்ல Solutions/Suggestions கூற முடியாதா?//

    இல்லை நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. எங்கள் அலுவலகத்தில் பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சில இடங்களில் அவ்வாறு இருக்கலாம்

  5. Unknown said...

    Hey Ramya,

    Strong Feminist opinion there!! :)
    Hmm ... well I am not great at voicing my opinion on this type of topics, but will try to throw in my 2 cents nevertheless ...

    1) "Equality" when it comes to women and men should not be seen based on them doing the same "task/job". You should only look at opportunities. Men might be better in few things and women might be better in few .. for instance, if you see HR type of roles, the % of men is almost always less. There is science. I dont think I would be able to substantiate this better, but a person called Allan Pease can - "Why men don't listen and women can't read maps"

    2) Women's role in recent years have grown exponentially and at a faster rate than globalization itself. It only augers well for the future. Not sure if I am right here - sometimes women are still with a feeling that they are still behind when compared to men. There can be instances which might make women feel that way, but as I always say, "exceptions cannot be examples". What we hear in news headlines,(and in blogs as yours :)) etc about women being behind or not treated properly belongs to those exceptional scenarios. They need not reflect the actual society.

    The world has accepted that there is no women-men segregation when it comes to professional/social environment. Very few are still left with the cliched thought of women empowerment, equality etc. Let us look ahead and keep moving, the world (even those left behind with incongruous thoughts) will march along!!

    Smiles,
    Vinayak

  6. Divya said...

    ரம்யா,

    நீங்கள் சொல்ல நினைத்த கருத்துக்களை, தெளிவாக விளக்கியிருக்கும் விதம் என்னை வியக்க வைத்தது.

    பதிவின் தலைப்பை நான் பாராட்டியே ஆகவேண்டும்.

    Gender discrimination எல்லாதுறையிலும் இருக்கத்தான் செய்கிறது.

    \பெண்கள் உயர் பதவியில் இருப்பது
    சில நேரங்களில் பெண்கள் அவர்கள் திறமையாலே உயர் பதவியில் இருந்தாலும், அதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.அவளின் "Character" பற்றிய பேச்சு வருகிறது.\\

    இது மிக மிக உண்மை ரம்யா.

    ஒரு சாதனைபடைத்த பெண்ணை மிக எளிதாக இழிவுபடுத்தி, கொச்சைபடுத்த அவளது நடத்தையை பற்றி அவதூறு பரப்பி, அதில் குளிர் காயும் வக்கிர எண்ணம் உடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  7. Divya said...

    \\உதாரணதிற்க்கு, விஜய் டீவி வழங்கிய "நீயா நானா"வில் வாதிட்ட ஒரு பெண் "நான் பெண் என்பதால் விரும்பிய படிப்பு படிக்கவைக்க்வில்லை".\\

    நானும் இப்பகுதியை விஜய் டீவியில் கண்டேன்....அப்பெண்ணின் தாய் கடுமையான முகத்துடன் தான் செய்தது சரி என வாதிட்ட போது, கோபத்தில் இரத்தம் கொதித்தது,

    அப்போதும் அந்த மகள் அமைதி காத்ததை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை,

    எத்தனை பெண் குழந்தைகளின் கணவுகள் இப்படி பட்ட gender discirimination ஆல் சிதைந்து போயிருக்கும்??

  8. Divya said...

    மிக நல்லதொரு பதிவு ரம்யா,
    உங்கள் கருத்துக்களை அழகாக பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!!

  9. Anonymous said...

    .. சிறப்பான பதிவிற்காக வாழ்த்துகள் தெரிவிப்பதோடு ;-),,
    சில இடங்களில் கொஞ்சம் சுருக்கியும் சில இடங்களில் கொஞ்சம் ஆழமாயும் ஆராய்ந்து எழுதியிருந்தால் உங்கள் கருத்து படிப்பவர் நெஞ்சில் இன்னும் அதிகாமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பது என் திண்ணம்!! ;) நன்றி!! வாழ்த்துகள் பெண்ணிய பதிவரே!!

  10. gils said...

    antha neeyaa naana portion nanum paathen..infact..i have a friend who has suffered a similar fate in real life too...poor gal..doctor aaga aasai..but wasnt allowed to become one..Ramya..ekkachakkama pesirukeenga intha postla..neenga potrukara oru oru paravaiyum thani thani postavay podalam.. :)) and super tamizh :D pinreenga

  11. Story Teller said...

    your thoughts echo with this link too http://www.computerworld.com/action/article.do?command=viewArticleBasic&articleId=319212&source=NLT_AM&nlid=1
    nice article nice thoughts..

  12. Vijay said...

    Ramya,
    Thanks for providing a link to my blog.
    By the way, நான் என்ன serious'ஆவா எழுதுதேன். என்னம்மா இப்படி சொல்லிப்புட்டீயளே?

    விஜய்

  13. Ramya Ramani said...

    ஜி,

    நான் என்னுடைய பதிவின் பெருவாரியான இடங்களில் "அந்த ஒரு சிலரைய்யே" குறிப்பிட்டுள்ளேன்.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :)

    Gils,
    ahaa tamizh ezhuduvenaannu kettuteengale gils..Ennoda http://ramya-penningthoughts.blogspot.com/2008/04/namma-ooru-seemati-final-part.html indha post tamizhla dhane irukku !

  14. Deepa said...

    உண்மை தான் ரம்யா..
    gender discrimination நம்ம காலத்திலே .. நாம் தாத்தா- பாட்டி ஆகும்போது பார்க்காமல் இருந்தால் ஒருவேளை அடுத்த தலைமுறாஇக்கு வராமல் தடுக்கலாம்.

    நான் இந்த காலத்து தாத்தா- பட்டீஸ் / uncle aunties ஐ குற்றம் சொல்லல்லை... அவங்களுடை அனுபவத்தை வச்சு குடும்ப்பத்தில் இருக்கும் இளைஞ்சர்கள் வாழ்க்கைய்யை இவர்கள் தீர்மானிக்கிரார்கள்... அந்த வயசு வரும்போது நாம அதே தாப்ப பண்ணாம கவனமா இருந்தோம்ன்ன.. இந்த நிலமைய்யை தாடுக்கலாம்.


    @விஜய்..
    வணக்கம்..

    நீங்க சொல்லியிருக்கிரது இருபாலர்க்கும் பொருந்தும்.
    ஒரு சமயம் group discussion லே ஒரு பெண் சொன்ன கருத்தை ஒரு Male collegue கண்டுக்கவே இல்லை.. அப்ப அந்த பெண் சும்மா இருந்துட்டா.. சரி.. நாம சொல்லரது சொல்லியாச்சு... ஏத்துக்கிரதும் ஏத்துக்காத்தாதும் impose பண்ண கூடாதுன்னு... 2 -3 மாசத்துக்கப்புறம்... இந்த பெண் சொன்ன மாதிரி பிரச்சனை தலைதூக்க ஆரம்பிச்சத்தும்.. இவங்க கிட்டே தான் கேட்டு tackle பண்ணினோம்... but for some strange reason... that male collegue was no where to be seen... யாரும் வராதேன்னு சொல்லலை...

  15. Ramya Ramani said...

    விஜய்,

    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

    \\ரம்யா, பெண்கள் நிறையவே மெந்துறையில் வெற்றிகளைக் கண்டிருந்த போதும், சில சமயம் மற்ற குழுவினரோடு ஒத்துப் போக மாட்டர்கள்.\\

    நீங்களே இங்கு குறிப்பிட்டது போல,சில சமயம் பெண்கள் மட்டுமெயின்றி, ஆண்களும் ஒத்துபோகமாட்டர்.இதற்க்கு காரணம் வேறு.நான் ஒத்துக்கொள்கிறேன் பெண்கள் எல்லாவற்றையும் Personal/taking things to heart/sensitive feeling ஓடு இருப்பர். அந்த எண்ணம் மாற சில காலங்கள் ஆகலாம்.ஏன் இன்று இப்படி ஒரு பதிவு எழுதும் நானெ மிகவும் Sensitiveஆக தான் இருந்தேன். அதனால் சில நல்ல நட்புக்களையும் இழந்தேன்.பின்னர் உணர்ந்து மாறி விட்டேன்.இது போன்ற behaviour ஆண்களிடமும் இருக்கிறது.பெண்களிடம் அதிகம் வெளிப்படுகிறது என்பது என் கருத்து!ஆனால் இப்படி சில பெண்களை பார்த்து Generalise-பன்ன வேண்டாமே என்றே நான் கூறுகிரேன்.

  16. Ramya Ramani said...

    Gnaniyar @ நிலவு நண்பன்
    வருகைக்கு நன்றி.
    \\இல்லை நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. எங்கள் அலுவலகத்தில் பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சில இடங்களில் அவ்வாறு இருக்கலாம்\\

    என்னுடைய கருத்தும் அதே. பெண் கருத்துக்கள் புரகணிக்கபடும் அந்த சில இடங்களை பற்றியே கூருகிறேன்!

  17. Ramya Ramani said...

    Vinayak,

    Thanks for Dropping in!
    \\1) "Equality" when it comes to women and men should not be seen based on them doing the same "task/job". You should only look at opportunities.\\

    Accepted 100% :) My view is also same.

    \\Not sure if I am right here - sometimes women are still with a feeling that they are still behind when compared to men. There can be instances which might make women feel that way, but as I always say, "exceptions cannot be examples". What we hear in news headlines,(and in blogs as yours :)) etc about women being behind or not treated properly belongs to those exceptional scenarios. They need not reflect the actual society. \\

    I do accept and even I have mentioned in my post that not in all cases that women's views are given importance.I did not mean to say that Women are behind/not treated well but I do say that in few cases discrimination do prop up which has to be avoided.All I want to stress is that such mental blocks should go away.

    BTW I actually did not want my views to be feminisct. All I feel is we want to see a human as human not as male/female. I am trying to the same :)

  18. Ramya Ramani said...

    திவ்யா உங்கள் வாழ்துக்களுக்கும்,வருகைக்கும் நன்றி!

    \\Gender discrimination எல்லாதுறையிலும் இருக்கத்தான் செய்கிறது.

    ஆம் பரவலாக சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.அந்த நிலை மாற வேண்டும் என்பதே என் எண்ணம்

    \\எத்தனை பெண் குழந்தைகளின் கணவுகள் இப்படி பட்ட gender discirimination ஆல் சிதைந்து போயிருக்கும்??\\

    மேல் தட்டு,நடுத்தர மக்களின் நிலை ஓரலவேனும் பராவாயில்லை.நான் சென்னை அருகே உள்ள கோவளம் என்ற கிராமத்தில் இம்மாதிரியான பெண்கள் அடிப்படை கல்வி நிராகரிக்கபட்டதை நேரில் பார்த்ததால் சினம் கொண்டேன். எங்கள் அமைப்பின் மூலம் , அவர்களின் பெற்றோருடன் பேசி, Counselling செய்தோம்.இருந்தும் பெரிய மாற்றம் இல்லை. Hope there is atleast some progress in future.

  19. Ramya Ramani said...

    alb,

    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.
    ஆழமாக எழுத முயற்சிக்கிறேன்!

    gils,

    Padichiteengala..nandri..pavamga kanavugal thagarthapadum bodu rombave kastamadhan irukkum be it a girl/boy.

    yes neraiyyave solliten.tamizh nalla irukka..enga ammavukku dhan thanks sollanum..kutti kutti sollikoduthanga illa ;)

  20. Ramya Ramani said...

    @dt

    Thanks for visiting.That article was good one. When comes a choice between Personal/Professional life women prefers Personal life. Depending on their family situation it becomes a wise decision too :)

  21. Ramya Ramani said...

    விஜய்,

    நான் உங்கள Blogroll-பன்ரச்சே, நீங்க serious-தான் எழுதினீங்க.வேணா எந்த Bucket-ல போடனும்னு சொன்ன மாத்திருவோம் :)

  22. Ramya Ramani said...

    Deepa,

    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.
    உங்களுடன் நான் 100% ஒத்துக்கொள்கிறேன்.

  23. ஆயில்யன் said...

    சொல்லால் துன்பபடுத்துபவர்களை தம் செயல்களால் திருப்பி தாக்கும் அளவுக்கு தைரியத்தினை பெற்று செயல்படும்போது,பெண்கள் மீதான இத்தகைய கருத்துக்கள் காணாமல் போகும்!

    நல்லா இருக்கு பதிவு :)

  24. மோகன் கந்தசாமி said...

    ////சமூகத்தில் பெண்களின் நிலை
    நம்முடைய சமூகத்தில் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா என்றால் "ஆம்" என்று சொல்வேன்////
    நானும்.

    ///"நான் பெண் என்பதால் விரும்பிய படிப்பு படிக்கவைக்க்வில்லை".////
    பெண் என்பதால் மட்டும் இருக்காது என நினைக்கிறேன். பொருளாதாரம் மற்றும் பெற்றோர்களின் விட்டேந்தி மனநிலை ஆகியவைதான் முக்கிய காரணிகளாக இருந்திருக்கும்.

    ///"பெண்கள் கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்"////
    உண்மையில்லை. பெண் கணிதப் புலிகளிடம் பலமுறை ரத்த காயம் பெற்றிருக்கிறேன்.

    ////பெண்கள் அதிக நேரம் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனனம் செய்து மதிப்பெண் எடுக்கிறாள்.ஆண் பிள்ளைகள் விளையடிக்கொண்டே இருந்தாலும் கடைசி நேரத்தில் படித்து மதிப்பெண் எடுக்கிறான்////
    நம்மூர் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண் எடுக்க கடைசி நேரத்தில் படித்தாலே போதும். பெண்கள் பீட்டருக்காக புத்தகங்களை எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களும் கடைசி நேரத்தில் படித்துதான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள்.

    ////அழகு பார்த்து வேலை கிடைக்கிறது///
    வேலைக்கான தகுதிப்பட்டியலில் அழகும் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் கடைசியில் இருக்கும். நேர்முகம் காணும் அல்ப்பத்தின் ஜொள்ளு அளவைப்பொறுத்து கடைசிக்கு சற்று மேலேயும் அழகுத்தகுதி இடம்பெறலாம். இவையெல்லாம் அபிசியலாக நடைபெறுவதில்லை.

    ///பெண்களை அவர்களின் டீம்களில் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை////
    நானும் பொருட்டாகவே கருதுவதில்லை. தங்கள் பங்கு வேலைகளை டெட் லைனுக்கு முன்பாக முடித்துவிட்டு என்னையும் முடிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்பதால் அவர்கள் பேச்சை எந்த காதில் வாங்குகிறேனோ அதே காதில் விட்டுவிடுவேன்.

    ////பெண்கள் உயர் பதவியில் இருப்பது
    சில நேரங்களில் பெண்கள் அவர்கள் திறமையாலே உயர் பதவியில் இருந்தாலும், அதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.அவளின் "Character" பற்றிய பேச்சு வருகிறது////
    இதனால் தான் உயர் பதவியில் இருக்கும் பெண்களில் பலர் சர்வாதிகாரிகளாக இருக்கின்றனர். சர்வாதிகார உயரதிகாரி பற்றி எவரும் புறம் பேச அஞ்சுவர்.

  25. Vijay said...

    \\நான் உங்கள Blogroll-பன்ரச்சே, நீங்க serious-தான் எழுதினீங்க.வேணா எந்த Bucket-ல போடனும்னு சொன்ன மாத்திருவோம் :)\\
    Ramya, I was just kidding. Thanks a lot a lot for giving free advertisement for my site :)
    I too shall link all those pages, which I am reading daily.

  26. Vijay said...

    ரம்யா அன்ட் தீபா,
    நான் என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் "எல்லாப் பெண்களும் இப்படி தான் என்று சொல்ல முடியாது." என்று ஒரு disclaimer போட்டுட்டுத் தான் சொன்னேன். அதையெல்லாம் படிக்கலையா யாரும் :(

    நான் சொன்னது என்னுடைய சொந்த அனுபவம். அதற்காக டீமில் பெண் பணியாளர்கள் இருந்தால் நான் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெண்ணிடம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று இந்த இரு (நான் ஏற்கனவே எழுதிய பின்னூட்டங்கள்)சம்பவங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டேன். ஆண்களை எப்படி நடத்துகிறோமோ அப்படியே பெண்களையும் நடத்தினால் வேலை நடக்காது என்றும் புரிந்து கொண்டேன். ஒரு வேளை நான் பெண்ணாக இருந்திருந்தால் காரியம் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும். After all ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும்'னு சும்மாவா சொல்லி வைச்சாங்க.

    அன்புடன்,
    விஜய்

  27. Ramya Ramani said...

    ஆயில்யன்
    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

  28. Anonymous said...

    soringa opicer...atha latea thaan paathen :) i the one kostin have...titlela uppuku chappania potrukeengalay..athu opukku ila?? che ennama kelvikekaranya..ivana parterna vachu bisinessa develop panlamanulamnu odaikalaam varapdathu :)
    ~gils

  29. கருணாகார்த்திகேயன் said...

    மேடம் ... எல்லா பெண்களும் நல்லவர்கள் ,
    உழைபாழிகள்.. அதே சமயம் .. "kitchen politics"
    செய்து மற்ற எல்லா Co Worker இயும் மாட்டி
    விடும் பண்பு இருக்கவே செய்கிறது..
    -------
    தமிழ் பதிவு அனைத்தும் படித்தேன்..
    நல்லா இருந்தது...

    அன்புடன்
    கார்த்திகேயன்

  30. ambi said...

    ரொம்ப நேர்த்தியா, சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்கீங்க. காரக்டர் மீது அவதூறு கிளப்புவது ரொம்ப காலமா நடந்துட்டு இருக்கு. :(

    ஆனா இப்பல்லாம், சர் தான் போய்யா!னு பெண்கள் முன்னேறி போய்ட்டே இருக்காங்க.

  31. ambi said...

    தமிழ் ரொம்பவே முன்னேறி இருக்கு போலிருக்கே. சில தப்புக்கள் இருக்கு. துறை - தலைப்புல சரி, ஆனா பதிவுல துரைனு இருக்கே. :p

  32. ambi said...

    தம்பி கில்ஸ், பாத்துக்கோ, தப்போ ரைட்டோ, ரம்யா தமிழிலும் பதிவு போடறாங்க. :p

  33. rapp said...

    நெம்ப சரியா சொல்லிருக்கீங்க ரம்யா. நீங்க சொல்றதை அப்படியே வழிமொழியறேன். இதுல எனக்கு கடுப்பேத்துற விஷயம் என்னன்னா எப்போப் பார்த்தாலும் மென்பொருள் துறையில் இருக்கிறவங்க நெம்ப மோசமான காரக்டர் உள்ளவங்களா ஊடகங்கள் சித்தரிக்கறதுதான். இவங்க இருக்கிற வயத்தெரிச்சல இப்படி கொட்டி தீத்துக்கறாங்க, ஆனா இதனால எத்தன பேர் (குறிப்பா பெண்கள்) குடும்ப வாழ்க்கையில பாதிக்கப்படறாங்க?

  34. Ramya Ramani said...

    கந்தசாமி,

    \\நம்மூர் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண் எடுக்க கடைசி நேரத்தில் படித்தாலே போதும். பெண்கள் பீட்டருக்காக புத்தகங்களை எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களும் கடைசி நேரத்தில் படித்துதான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள்.\\

    நம்மூர் எல்லா பரிட்ச்சைகளிலும் கடைசி நேரத்தில் படித்து மட்டுமே மதிப்பெண் பெறமுடியும் என்று நான் நம்பவில்லை.ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க்வேண்டிய பாடங்களும்,பாடதிட்டங்களும் அதிகமாக இருப்பதாகவே நான் நம்புகிறேன்,பார்த்தும் இருக்கிறேன்.ஆகவே உங்களின் இக்கருத்தை ஏற்க்க மறுக்கிறேன்

    \\நானும் பொருட்டாகவே கருதுவதில்லை. தங்கள் பங்கு வேலைகளை டெட் லைனுக்கு முன்பாக முடித்துவிட்டு என்னையும் முடிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்பதால் அவர்கள் பேச்சை எந்த காதில் வாங்குகிறேனோ அதே காதில் விட்டுவிடுவேன். \\

    உங்களின் இக்கருத்தையும் ஏற்க்க மறுக்கிறேன்.சரியாக நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற இருக்கலாமே!யாராக இருந்தாலும் வேலை என்றால் நேரத்தில் முடிக்கவேண்டும் என்று கூறுவது இயல்புதானே?

  35. Ramya Ramani said...

    விஜய்

    அந்த Bucket பேரே மாத்தியாச்சு

  36. KC! said...

    true, I have faced all this...

    oru chinna request, andha tamil-a mattum correct spelling-oda adicheengana nalla irukum :)

  37. Ramya Ramani said...

    gils,

    eppadithan ippadi ellam kostien yosikkareengaloo..yeah u r right mathiruvom

  38. Ramya Ramani said...

    கார்த்திகேயன். கருணாநிதி,
    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

  39. Ramya Ramani said...

    ambi nd rapp,

    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

    அம்பி அண்ணா மிஸ்டேக்ஸ் எல்லாம் சரி பன்னியாச்சு :) நன்றி

  40. Ramya Ramani said...

    Usha,

    Thanks for dropping! Endha spelling
    mistake-nu sollunga..correct pannidaren :)

  41. ambi said...

    //சரி பன்னியாச்சு //

    ண்ணியாச்சு. ஹிஹி,

    பரவாயில்ல, கொஞ்சம் கொஞ்சமா தான் ஒழுங்கா வரும். இதே உஷா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை எப்படி வறுத்தெடுத்து இருக்கா தெரியுமா? :p

  42. Ramya Ramani said...

    aha lecturerah irudhelnu proove panreengale ...nandri hai ambi anna ..thiruthikkaren :)

  43. Anonymous said...

    //தம்பி கில்ஸ், பாத்துக்கோ, தப்போ ரைட்டோ, ரம்யா தமிழிலும் பதிவு போடறாங்க.//
    vambi anna...neenga soliteengalla...inimay parunga..engum damil ethilm dumeelnu poatu thaakidren


    @rums:

    avvvvvvvvv...nan sonathiyum mathichi.titleam maathi...oray pheelings of perungudi aaidichi

    ~gils

  44. priyamanaval said...

    ரம்யா முதலில் என் வாழ்த்துகள். நீங்கள் தமிழில் பதிவு செய்திருப்பதற்கு என் பாராட்டுகள். நீங்கள் எடுத்திருக்கும் தலைப்பு மிகவும்
    விவாதத்திற்க்கு உரிய தலைப்பு. பின்னூட்ட எண்ணிக்கை பார்த்தாலே தெரிகின்றதல்லவா.

    உங்க பதிவில் எனக்கு பிடித்தவை :
    1. தலைப்பு
    2. விவாத நடை
    3. உங்கள் கருத்துக்கு ஏற்றவாறு பல உதாரணங்களும் மேற்க்கோள்களும் இருக்கும் விதம்

    இந்த தலைப்பை பற்றிய என் கருத்துகள் :

    மென் துறை என்பது நம் நாட்டுக்கு வந்த பிறகே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் வழக்கம் நம் சமூகத்தில் வந்துள்ளது என்று கூறலாம். மென் துறை பெண்களுக்கு மிக எர்த்த துறை என்றும் கருதப்படுகிறது.இத்துறையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடிணங்கள் மற்ற எல்லா துறையில் இருக்கும் பெண்களுக்கும் ஏற்படுபவை ஆகும்.

    நம் சமூகத்தை பொருத்தவரை பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இக்கருத்து ஆண்களிடம் மட்டும் இருக்கின்றது என்று நான் கூறவில்லை மாறாக இக்கருத்து பெண்களிடமும் உள்ளது. அதனாலேயே ஒரு பெண் தன் கனவன் தன்னை விட அதிகம் படித்தவனுமாக,அதிகம்
    சம்பாதிப்பவனுமாக இருக்க வேண்டும் என விரும்புகிறாள்.
    இப்படி இருக்க , சமூகத்தில் எப்போதெல்லாம் பெண் ஆணை விட மேளோங்குகிறாளோ அப்போதெல்லாம் அவதூருகளும்,அவச்சொற்களும் எழுப்பப்படுகிண்றது. ஆகவெ பெண்ணும் ஆணும் சமம் என்ற எண்ணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும்போதே இந்நிலை மாரும்

  45. Vijay said...

    \\விஜய்

    அந்த Bucket பேரே மாத்தியாச்சு\\

    Bucket'ஆ?

  46. Ramya Ramani said...

    Vijay,

    enga appisla ippo dhan aappuraisal mudinja neram.so nee enda bucket naan indha bucketnu pesinadhula adhe nyabagam..illati ungale vera groupla (adilal group madiri illa :P) pottirukken sollirukkalam.

  47. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    ஆழமா யோசித்து, அழகா எழுதியிருக்கீங்க!

    வாழ்த்துக்கள் இரம்யா :)

  48. வெட்டிப்பயல் said...

    நல்ல பதிவு.

    1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்

    3.மென் துறையில் பெண்களின் நிலை.

    இதை பத்தி நீங்க இன்னும் அதிகமா (ஆழமா) எழுதனும்னு நினைக்கிறேன். ஒவ்வொன்னும் ஒரு தொடராவே எழுதலாம்.

  49. Ramya Ramani said...

    Priya,

    வருகைக்கும் விரிவான உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி :)

    \\ sathish said...
    ஆழமா யோசித்து, அழகா எழுதியிருக்கீங்க!

    வாழ்த்துக்கள் இரம்யா :)\\

    வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சதிஷ்:)

  50. Ramya Ramani said...

    \\வெட்டிப்பயல் said...
    நல்ல பதிவு.

    1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்

    3.மென் துறையில் பெண்களின் நிலை.

    இதை பத்தி நீங்க இன்னும் அதிகமா (ஆழமா) எழுதனும்னு நினைக்கிறேன். ஒவ்வொன்னும் ஒரு தொடராவே எழுதலாம்.
    \\
    வெட்டி அண்ணா வருகைக்கு முதலில் நன்றி :)

    மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள் - இதை பற்றி நீங்கள் எழுதிய பதிவு மிகவும் நன்றாக இருந்தது :) என்னால் இன்னும் ஏதாவது கூர முடியுமானால் கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  51. வெட்டிப்பயல் said...

    //வெட்டி அண்ணா வருகைக்கு முதலில் நன்றி :)

    மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள் - இதை பற்றி நீங்கள் எழுதிய பதிவு மிகவும் நன்றாக இருந்தது :) என்னால் இன்னும் ஏதாவது கூர முடியுமானால் கண்டிப்பாக பதிவிடுகிறேன்//

    இல்லம்மா... என் பதிவு எல்லாமே கொஞ்சம் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ் இருக்கற பசங்களுக்கு தான். அதே பொண்ணுங்களுக்கு பொருந்துமானு தெரியல.

    நீ இன்னும் கொஞ்ச தெளிவா எழுதலாம். குறிப்பா பசங்களோட நல்லா பேசினா தான் நம்மல நார்மல் பொண்ணுனு நினைப்பாங்க. ஆனா கிராமத்துல இருந்து, மிடில் க்ளாஸ்ல இருந்து வந்த நம்மால அப்படி பழகி நல்ல பேர் வாங்க முடியுமா? நமக்கு இந்த ஃபீல்ட் ஒத்து வருமானு நிறைய பொண்ணுங்க யோசிக்கலாம். (இது என் யூகம் தான்). அதை எல்லாம் பேஸ் பண்ணி எழுதலாம்.

  52. தினேஷ் said...

    நல்ல பதிவு...

    தினேஷ்

  53. Ramya Ramani said...

    வெட்டி அண்ணா, ஒரு புது பதிவுக்கு ஐடியா கொடுத்திருக்கீங்க, கண்டிப்பா எழுதறேன் :))

    தினேஷ் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)