Saturday, July 26, 2008

கிச்சன் கில்லாடி

சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.

என்ன சுலபமா சொல்லிட்டாங்க? ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்?அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்க!

சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??

இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு.அதுனால நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes இங்க இருக்கு.படிச்சு தைரியமா சமைச்சு பாருங்க.

1.பாம்பே சட்னி

முதல்ல இதுக்கு பெயர்க்காரணம் கேக்காதீங்க ஏன்னா எனக்குத் தெரியாது.சப்பாத்தியோட நல்லா இருக்கும்.

செய்முறை:

1.கடலை மாவையும்,கொஞ்சமா மஞ்சள் பொடியும் சேர்த்து நல்லாக் கட்டி இல்லாமல் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
2.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி இதெல்லாம் பொடியா நறுக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்புப் போட்டு வதக்கவும்.
5.இப்போ தக்காளியும் சேர்த்து வதக்கிட்டு, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து விடாம பச்சை வாசனை போகும் வரை கிளரவேண்டும்.Semi solid state வந்தவுடன் இறக்கி விடவும்.
6.சூடு ஆறியவுடன் ,கொஞ்சமா எலுமிச்சம் பழச்சாறு விட்டா சட்னி ரெடி :)

2.பச்சைப்பயறு சுண்டல்

இது எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு Dish.சப்பாத்தியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.

செய்முறை:

1.பச்சைப்பயறு அரை மணி நேரம் ஊர வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாகவும்,பச்சை மிளகாய் நீளமாகவும் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வானலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு எல்லாம் போட்டு தாளித்து,பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.
4.எற்கனவே வேக வைத்து எடுத்த பயறு போட்டு கொஞ்சமா தண்ணி சேர்த்து கிளரவேண்டும்.
5.மிளகு பொடி கொஞ்சம் போட்டு,உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்தா,சுண்டல் ரெடி !

3.பாஸ்டா

இது நம்ம ஊர்ல Macaroni-னு கிடைக்கும்.எஃலெஸ் இங்க வால்மார்ட்லயும் கிடைக்குது.சமைக்க சோம்பேறித்தனமா இருந்தா நாங்க சாப்பிடறது இது தான் :)

செய்முறை:

1.பாஸ்டாவை நல்லா முழுகும் அளவு தண்ணீரில் உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
2.அது நல்லா கொதிச்சு,தொட்டா Softah இருக்கும் போது இறக்கி வைக்கவும்.
3.ஒரு வானலியில் எண்ணை ஊற்றி,கடுகு,சீரகம் போட்டு வேக வைத்திருக்கும் பாஸ்டாவை போடவும்.
4.கொஞ்சமா மிளகாய்ப்பொடி போட்டு ஒரு முறை கிளரி விட வேண்டும்.
5.சூடா இருக்கும் போதே Tomato Sauce போட்டுக்கலாம். சீஸ் பிடிச்சவங்க அதையும் சேர்க்கலாம்.அது இல்லாமலே நல்லா இருக்கும்.
6.இதுல வெங்காயம் தக்காளி எல்லாம் பிடிச்சா சேக்கலாம்.

சரி இப்போ கொஞ்சம் டிப்ஸ் (விடறதா இல்லை :P)

1.வெங்காயம் சீக்கிரமா வதங்கனும்னா,எண்ணை இல்லாம வெறும் வானலில வதக்கலாம்.
2.சாம்பார்ல காரமோ,உப்போ ஜாஸ்தி ஆகிடுச்சா ஒரு சின்ன உருளைகிழங்க வெட்டிப் போட்டா சரி ஆகிடும்.

ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))

40 comments:

  1. Anonymous said...

    I am going to try all of them. Thanks.

    Ramya

  2. rapp said...

    பாம்பே சட்னிய இப்போத்தான் செஞ்சு முடிச்சேன், இப்போ சோதனை எலியோட விமர்சனங்கள் நல்லா இருந்தாலும் மோசமா இருந்தாலும் போகட்டும் ரம்யாவுக்கே

  3. வெட்டிப்பயல் said...

    pasta நம்ம ஊர் ஸ்டைல்ல சாப்பிடணும்னா வெங்காயம், தக்காளி, கேப்சிக்கம் (குடை மிளகாய்) எல்லாம் வதக்கி, வேக வைச்ச பாஸ்தாவை சேர்த்து கொஞ்ச நேரம் கிண்டி இறக்கினால் நல்லா இருக்கும் :-)

  4. ஜியா said...

    :)))) கலக்குங்க அம்மணி... அடுத்த தடவ என்னோட டர்ன் வரும்போது சோதன பண்ணிட வேண்டியதுதான் :))))

    வெங்காயம் சீக்கிரம் வதங்குறதுக்கு, வெங்காயத்தோட சேத்து கொஞ்சம் உப்பும் போட்டு வதக்குனா சீக்கிரம் வதங்கும்னு ஒரு மாபெரும் கிச்சன் கில்லாடி சொன்னாங்க... :)))

  5. Ramya Ramani said...

    கண்டிப்பா முயற்சி பண்ணுங்க ரம்யா :))

    rapp,

    இது DR(Dearest Roomates)Clearance வாங்கின Dish.கண்டிப்பா நல்லா வரும்.

    வெட்டி அண்ணா,
    அட இப்படியும் பண்ணலாமா ? அடுத்த முறை முயற்சிக்கறேன்

    நன்றி ஜி, டிப்ஸ்கும் நன்றி...

  6. Divya said...

    பாம்பே சட்னி ......புது ஐடமா இருக்கு ரம்யா,
    செய்து பார்த்திட வேண்டியது தான்!!

  7. Divya said...

    \\pasta நம்ம ஊர் ஸ்டைல்ல சாப்பிடணும்னா வெங்காயம், தக்காளி, கேப்சிக்கம் (குடை மிளகாய்) எல்லாம் வதக்கி, வேக வைச்ச பாஸ்தாவை சேர்த்து கொஞ்ச நேரம் கிண்டி இறக்கினால் நல்லா இருக்கும் :-)\\

    mushroom பிடிக்கும்னா அதுவும் வதக்கி சேர்த்துக்களாம்....சூப்பரா இருக்கும்:)))

  8. Divya said...

    \\வெங்காயம் சீக்கிரம் வதங்குறதுக்கு, வெங்காயத்தோட சேத்து கொஞ்சம் உப்பும் போட்டு வதக்குனா சீக்கிரம் வதங்கும்னு ஒரு மாபெரும் கிச்சன் கில்லாடி சொன்னாங்க... :)))\\


    அட அப்படியா???

  9. Divya said...

    \\ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))\\

    டச்சிங்.....டச்சிங்:)))

  10. Vijay said...

    நமக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம். தேனீர் மட்டுமே செய்ய அனுமதி கொடுத்திருந்த மேலிடம் தற்சமயம் அதையும் பிடிங்குக் கொண்டு விட்டது. சரி இதையெல்லாம் பண்ணிக்கொடு என்று விண்னப்பித்தேனென்றால் விளைவு என்ன மாதிரி இருக்கும் என்று யூகிக்க முடியாது. "ஏன் இது வரைக்கும் பண்ணிப் போட்டதத் தின்னு உடம்பு வளர்த்தது போதாதா" என்று பதில் வந்தாலும் வரலாம்.
    இந்த வழா வழா கொழா கொழா பாஸ்தாவையே தினம் ஒரு 15 நாட்கள் இத்தாலியில் தின்னிருக்கேன். காசிக்குப் போகாமலேயே இனி ஜன்மத்தில் பாஸ்தா துன்ன மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டேன்.
    அடுத்த முறை பழைய சாதம் செய்வது எப்படின்னு வேணா ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுங்க. மேலிடத்தை கேட்காமல் என்னாலேயே செய்து கொள்ள முடியும் :)

  11. Vijay said...

    \\இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு\\

    அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களது காப்பீட்டுத் தொகையைக் (insurance amount)கூட்டிக்கொள்ளச் சொல்லுங்கள்.

    \\Practise Makes a Man Perfect இல்லியா??\\
    Bingo there you are!! Practise can only make a MAN perfect. The wise men who coined it already knew that some people in the world, who fall under the broad category of women can never be perfect. So why do practise? :)

    "ஐயையோ ஆர்வக்கோளாறுல ஆங்கிலத்துல எழுதிட்டேனே! மேலிடம் படித்தால் விவகாரம் ஆகிப்பூடுமே. இதை publish பண்ணாதீங்க :)"

    \\நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes \\
    வெங்காயமெல்லாம் உரிக்கச் சொல்லறீங்க. இதுக்குப் பெயர் சுலபமான ரெஸிபியா?


    \\2.பச்சைப்பயறு சுண்டல்\\

    அமெரிக்கவுல பச்சைப்பயறெல்லாம் கிடைக்குதா அம்மணி?

    அகில உலக பிளாகர் சங்கத்தின் சார்பாக ரம்யா அவர்களுக்கு கிச்சன் கில்லாடினி என்ற பட்டத்தை அளிக்கிறேன்.

    பி.கு. இரண்டு நாட்கள் கழித்து உங்களது அறைத் தோழிகள் இன்னும் உங்களோடு தான் (நலமாக)இருக்கிறார்களா என்பதையும் தெரிவிக்கவும்

  12. Anonymous said...

    சுவாரசியமான செய்முறை...நன்றி

  13. Divyapriya said...

    \\இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு\\

    பாவம் பிள்ளைங்க :-D

    கிட்சன் கில்லாடி ஆய்டீங்க போல இருக்கு...கலக்குற ரம்யா :-)

  14. Divyapriya said...

    //என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்//

    சூப்பர் விளக்கம் :-))

  15. Ramya Ramani said...

    \\Divya said...
    பாம்பே சட்னி ......புது ஐடமா இருக்கு ரம்யா,
    செய்து பார்த்திட வேண்டியது தான்!!
    \\

    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :))

    \\Divya said...
    \\pasta நம்ம ஊர் ஸ்டைல்ல சாப்பிடணும்னா வெங்காயம், தக்காளி, கேப்சிக்கம் (குடை மிளகாய்) எல்லாம் வதக்கி, வேக வைச்ச பாஸ்தாவை சேர்த்து கொஞ்ச நேரம் கிண்டி இறக்கினால் நல்லா இருக்கும் :-)\\

    mushroom பிடிக்கும்னா அதுவும் வதக்கி சேர்த்துக்களாம்....சூப்பரா இருக்கும்:)))
    \\

    நன்றி..இதையும் அந்த மக்கள் மேல முயற்சி செஞ்சிருவோம் ;)

    \\Divya said...
    \\ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))\\

    டச்சிங்.....டச்சிங்:)))
    \\

    நன்றி..நன்றி :))

  16. Ramya Ramani said...

    \\அடுத்த முறை பழைய சாதம் செய்வது எப்படின்னு வேணா ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுங்க. மேலிடத்தை கேட்காமல் என்னாலேயே செய்து கொள்ள முடியும் :)\\

    அட நீங்க வேற இங்க இதைத்தான் எல்லாரும் சொல்லி "I Love Curd Rice" சாப்பிடறாங்க..மோர் சாதம் உடம்புக்கும் நல்லதுன்னு ஒரு ஞானியே சொல்லிருக்காராம்

  17. Ramya Ramani said...

    \\\\Practise Makes a Man Perfect இல்லியா??\\
    Bingo there you are!! Practise can only make a MAN perfect. The wise men who coined it already knew that some people in the world, who fall under the broad category of women can never be perfect. So why do practise? :)

    "ஐயையோ ஆர்வக்கோளாறுல ஆங்கிலத்துல எழுதிட்டேனே! மேலிடம் படித்தால் விவகாரம் ஆகிப்பூடுமே. இதை publish பண்ணாதீங்க :)"
    \\

    விஜய் நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க!! பெண்ணுக்கு Perfection இல்லாமல் தானா நாம எல்லாம் இன்னிக்கி இப்படி வளந்திருக்கோம்...

    என்ன அண்ணிக்கு தெரியாம போட்டுடீங்களா??? ஒரு சின்ன மெயில் தட்டிருவோம்..Mail id Please ;))

  18. Ramya Ramani said...

    \\நாங்க எல்லாம் சேர்ந்து அடிக்கடி சமைக்கும் சில சுலபமான Recipes \\
    வெங்காயமெல்லாம் உரிக்கச் சொல்லறீங்க. இதுக்குப் பெயர் சுலபமான ரெஸிபியா?

    வெங்காயம் உடம்புக்கு நல்லது சார் :))

    \2.பச்சைப்பயறு சுண்டல்\\

    அமெரிக்கவுல பச்சைப்பயறெல்லாம் கிடைக்குதா அம்மணி?
    \\

    ஹிம்ம் தாராளமா கிடைக்கும்

    \\அகில உலக பிளாகர் சங்கத்தின் சார்பாக ரம்யா அவர்களுக்கு கிச்சன் கில்லாடினி என்ற பட்டத்தை அளிக்கிறேன். \\


    மிக்க நன்றி :))

    \\பி.கு. இரண்டு நாட்கள் கழித்து உங்களது அறைத் தோழிகள் இன்னும் உங்களோடு தான் (நலமாக)இருக்கிறார்களா என்பதையும் தெரிவிக்கவும்\\

    நலமா இருக்காங்க...இன்னும் என்ன உசுப்பேத்தி சமைக்கவும் வெக்கறாங்க :))

  19. Ramya Ramani said...

    \\Thooya said...
    சுவாரசியமான செய்முறை...நன்றி
    \\

    நன்றி thooya

    \\Divyapriya said...
    \\இப்போ நான் சமைக்கறதையும் சாப்பிட ரெண்டு பிள்ளைங்க கிடைச்சிருக்காங்க ரூம்மேட்ஸ்னு\\

    பாவம் பிள்ளைங்க :-D

    கிட்சன் கில்லாடி ஆய்டீங்க போல இருக்கு...கலக்குற ரம்யா :-)
    \\

    நானும் தானுங்க :P

    நான் கில்லாடி எல்லாம் இல்லீங்க நீங்க வேற...சும்மா பளாக் போட்டா ஆகிடுவோமா..இப்போ தானே எலி அகப்பட்டிருக்கு..விரைவில் ஆகிடுவோம்..என்ன நீங்களும் வரீயளா??

  20. Ramya Ramani said...

    //என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்//

    சூப்பர் விளக்கம் :-))

    நன்றி திவ்யபிரியா! Copy paste பண்ணா நல்லாத்தானே இருக்கு :))

  21. Anonymous said...

    //Practise Makes a Man Perfect இல்லியா??
    //

    kitchen killadi potutu ipdi oru lineyum potu theliva velakiteenga..yarukaaga itha postnu :D

    First commenta neengalay anonya vanthu potuteengala?? :D

    //இப்போ சோதனை எலியோட //

    avvvvvvvvv....oru terror campa uruvakkareengalay..!!!

    ~gils

  22. முகுந்தன் said...

    //முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம்,//ஹாய் சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??
    //

    என்ன கொடுமை ரம்யா இது ???

    //அப்பா,கணவன்//
    எப்பொழுதுமே இப்படி தான்,

    என் வீட்டில் என் மனைவி
    (நன்றாக சமைப்பாள் , ஆனாலும் ) கூட எதையும் செய்தவுடன் நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் என்று சொல்லிவிடுவாள்.
    ஆண்கள் என்ன பாவப்பட்ட ஜீவன்களா?

    அவ்வ்வ்வ்...

  23. Ramya Ramani said...

    gils,

    first anony (Ramya) naan illenga yaaro oru nalla manasukkaranga :))

    thanks for comments :))

    \\முகுந்தன் said...

    //அப்பா,கணவன்//
    எப்பொழுதுமே இப்படி தான்,

    என் வீட்டில் என் மனைவி
    (நன்றாக சமைப்பாள் , ஆனாலும் ) கூட எதையும் செய்தவுடன் நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் என்று சொல்லிவிடுவாள்.
    ஆண்கள் என்ன பாவப்பட்ட ஜீவன்களா?

    அவ்வ்வ்வ்...
    \\

    பாருங்க எவ்வளவு நல்ல மனசுன்னு என்ன பண்ணாலும் பாசமா உங்களுக்கு தான் கொடுக்கறாங்க :))

  24. priyamanaval said...

    ரம்யா... துரிதமா சமைக்கர மாறி நல்ல குறிப்புகள் குடுதுருகீங்க... நம்மள மாறி ஆளுங்களுக்கு ரொம்ப useful ஆ இருக்கும்...

  25. Alb said...

    ரம்யா.. எங்க ரூம் அனுக்கு உண்மை தெரிஞ்சிட்டு போல... உங்க பேர சொல்லி சொல்லி பாத்தும் சாப்டவே மாட்டேனு அடம்பிடிக்கிது.. நீங்க கொஞ்சம் அளவுகளோட சொல்லி இருந்தீங்கனா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..!! ;) ;)

  26. தாரணி பிரியா said...

    பாம்பே சட்னி சப்பாத்திக்கு விட தோசைக்கு சூப்பரா இருக்கும். டிரை செஞ்சு பாருங்க. ரெண்டு தோசை அதிகமா சாப்பிடுவிங்க.

  27. Ramya Ramani said...

    நன்றி பிரியா :)). நீங்களும் முயற்சிபண்ணிட்டு சொல்லுங்க !

    சுலபமான Recipe தானேன்னு அளவு எல்லாம் சொல்லலீங்க ஆல்ப்

    தாரணி பிரியா வருகைக்கு நன்றி..ஒ அப்படியா முயற்சித்துப் பாக்கறேன் :)) உங்க Template சூப்பர் அம்மணி :))

  28. Kavinaya said...

    பாம்பே சட்னி புதுசா இருக்கு. செய்து பாத்திடறேன், கிச்சன் கில்லாடி அவர்களே! :)

  29. Unknown said...

    சாரி, எனக்கு சம்பந்தம் இல்லாத இடத்துக்கு வந்துட்டேன் போல இருக்கு. :-P நமக்கும் இந்த சமையலுக்கும் கொஞ்சம் தூஊஊஊஊஊஊரம்,ஒரே ஒருமுறை தான் ரசம்னு ஒன்னு பண்ணேன் அதுக்குக் கிடைச்ச வரவேற்பப் பார்த்து நாம இனிமே இந்த கிச்சன் கிட்டயே போகக்கூடாதுனு ஒரு பொதுநல சபதம் எடுத்துக்கிட்டேன்.ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல அதை இன்னைக்கு வரைக்கும் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்.:-)

  30. Ramya Ramani said...

    கண்டிப்பா முயற்சி பண்ணுங்க கவிநயா :))

    ஹா ஹா விடுங்கப்பா எல்லாருமே இப்படித்தான் ஆரம்பிக்கறோம்..ஒரு மூனு வருஷத்துக்கு முன்னாடி நான் நினைச்சுக்கூட பாக்கலே சமையல் பண்ணுவேன், இப்படி பளாக்குவேன்னு.. எல்லாம் உங்களுக்கும் ஒரு எலி அகப்படும் வரை தான் அப்புறம் வானம் தான் உங்கள் எல்லை :))

  31. Unknown said...

    நான் போடற காஃபிக்கு பயந்துக்கிட்டுத் தான், நான் பேன்ட்ரிக்கே போறதில்லை...!!:-(

  32. sury siva said...

    //ஆனா நாம என்னதான் சமைச்சாலும் அம்மாவோட சமையல் எப்பவுமே சூப்பரா இருக்கேன்னு கேட்டா,அன்பு + அக்கறை சேர்த்து சமைச்சாப் போதும்னு சொல்லிட்டாங்க..எவ்வளவு உண்மை :))//


    ஒரு பத்து ஆண்டுகட்கு முன்னால் நான் ஒரு வகுப்பில் மானுட சொந்தங்கள் ( Human Relations)
    பற்றி பேசுகையில் ஒரு உதாரணம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    ஆடியன்ஸில் எல்லோருமே கிட்டத்தட்ட மேல் நிலை அதிகாரிகள். அவர்களிடம் கேட்டேன்:
    உங்கள் ஊரை விட்டு, டெல்லி, மும்பை மாதிரி பெரிய நகரங்களில் உள்ள ஐந்து நட்சத்திர‌
    ஹோட்டல்களில் உங்களது அலுவலகம் ஒரு கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள் என‌
    வைத்துக்கொள்ளுங்கள். எந்த விதமான ஆடம்பரமான வாழ்க்கை உண்டோ அத்தனையும்
    எத்தனை விதமான உணவு வகைகள் உண்டோ அத்தனையும் உங்களுக்குக் கிடைக்க வழி
    செய்யப்பட்டுள்ளது. வட இந்திய, தென் இந்திய உணவு, எல்லாமே நல்ல சுவையுடன் தருகிறார்கள்.
    ( நீங்கள் எதற்கும் பணம் தரவேண்டாம்) . கூட்டத் துவக்கத்திலேயே
    சொல்லிவிட்டார்கள் " வாழ்க்கையை அனுபவியுங்கள் ! " என்று. ஒரே ஒரு கன்டிஷன்.
    உங்கள் மனைவி, குழந்தைகள், அப்பா,அம்மா போன்ற நெருங்கிய சொந்தக்காரர்களுடன் தொடர்பு ஃபோன், செல் ஆகியன
    இந்த நாட்களில் செய்ய கிடைக்காது. செய்யவும் முடியாது.

    நான் கேட்டேன் : இந்த சூழ்னிலையில் எத்தனை நாள் உங்களால் இருக்க இயலும் என்றேன்.
    அடுத்த வினாடி ஒருவர் வாழ் நாள் முழுவதும் இருப்பேன் என்றார். அப்படியா என்றேன். ஒரு பத்து
    வினாடிக்குப் பின் இன்னொருவர் பத்து நாள் எனச் சொன்னார். அப்படியா என்றேன்.
    ஒரு 30 வினாடி கழித்து 5 நாட்கள் என மற்றுமோர் பதில் வந்தது. ஒரு நிமிடம் கழித்து 3 நாட்களுக்கு மேல் என ஒருவர் அழுத்திச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருந்தேன். யோசித்து சொல்லுங்கள் என்றேன்.
    யோசித்தார்கள் . சொன்னார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருக்கலாம் என்றார்கள்.
    எல்லா வசதிகளும் இருந்தபோதிலும் மனம் சொந்தத்திற்காக ஏங்கும். இது வெள்ளிடைமலை.
    மூன்றாவது நாள் நம் உறவினர் குரலுக்காக ஏங்குவோம்.
    நாலாவது நாள் நம் அன்னை அல்லது மனைவி தினம் சமைத்துப்போடுகிற வத்தக்குழம்பு,
    சுட்ட அப்பளம் நமது நாக்கு கேட்கும். ஐந்தாவது நாளே எப்போது திரும்புவோம் என்ற மன‌
    நிலை உண்டாகும்.

    நீங்கள் தினமும் அன்னை அல்லது மனைவியின் சமைத்த உணவை மட்டும் உண்ணவில்லை.
    அவரது அன்பையும் கவனத்தையும் கவனிப்பையும் சேர்த்து சாப்பிடுகிறீர்கள்.
    இயல்பான சொந்தங்களின் அடிப்படையே இதுதான் என்றேன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://menakasury.blogspot.com
    http://arthamullavalaipathivugal.blogspot.com
    http://meenasury.googlepages.com/home

  33. Ramya Ramani said...

    ஹா ஹா :))

    வருகைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி சூரி :))

  34. Selva Kumar said...

    //அடுத்து நீங்க உழைச்சு,களைச்சு செய்யும் பதார்த்தத்தை சாப்பிட குறைந்தபட்சம் ஒரு ஜீவன்(அப்பா,கணவன்,சில நேரத்துல அம்மா/ரூம்மேட்ஸ்-as applicable).Practise Makes a Man Perfect இல்லியா??

    //

    எனக்கென்னமோ Room mates தான் பெஸ்ட்னு தோணுது.

    இன்னும் நம்பள விட சமையல்ல அறிவு கம்மியானவங்களா இருந்தா பெட்டர்.

    இது என்னோட எக்ஸ்பீரியன்ஸ்.

    :))

    (முடிஞ்சா என்னோட சமையல் குறிப்பு படிச்சு அதையும் ட்ரை பண்ணவும்)

  35. இவன் said...

    //சமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,//

    அதை இனி சமையல்க்களம் என்னு மாற்றீடலாம் வேலை முடிஞ்சு

  36. இவன் said...

    //இது எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு Dish.சப்பாத்தியுடனோ தனியாகவோ சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.//

    நாளைக்கு இதனை செய்து பார்த்த பதிவர்களை ஹாஸ்பிட்டலில் சந்திக்கலாம்.....

  37. Selva Kumar said...

    என்ன ரம்யா ரொம்ப நாளா புது பதிவு எதையும் காணோம்.

    கிச்சன்ல ரொம்ப ஆராய்ச்சி பண்ணி ஏதாவது ஆகிருச்சா ??

  38. Ramya Ramani said...

    @கோவை விஜய்

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

    @இவன்

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

    @வழிப்போக்கன்

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.கண்டிப்பாக விரைவில் ஒரு பதிவு வரும்..

  39. மோனோலிசா said...

    just click my kitchen blog[newly built ].hope you will enjoy ....
    i will try mumbai chutni and let you know the result

  40. Ramya Ramani said...

    \\nutty said...
    just click my kitchen blog[newly built ].hope you will enjoy ....
    i will try mumbai chutni and let you know the result
    \\

    Thanks for dropping in Nutty Sure Will Visit your blog