Friday, August 15, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-2

பகுதி- 1

வாசல் கதவைத்திறந்த மஹேஷ் அசந்து நிற்க, "வழி விடேன்டா"என்றவாறு உள்ளே வந்து கொண்டிருந்தார் சங்கரன்.

"யாரு மஹேஷ்" என்ற பாட்டியும், "நான்தான்மா" என்ற குரலைக்கேட்டு வந்த உத்ராவும் கூட திகைத்துவிட்டனர்.

"என்ன எல்லாம் அப்படியே நிக்கறீங்க? அம்மா, ரேவதி எங்க கோவிலுக்கா?சரி மஹேஷ் நீ போய் அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு என்ன உத்ரா நீ இன்னும் குளிக்கவேயில்லியா?போ மச மசன்னு நிக்காதே" என்று அதட்டிக்கொண்டிருந்தார்.

"எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! என்ன நடக்குது இந்த வீட்ல, சனிக்கிழமை கூட ஆபீஸே கதின்னு இருக்கும் ஒரு சின்ஸியர் கவர்ன்மென்ட் ஆபீஸர் இன்னிக்கி 10 மணிக்கே வீட்ல ஆஜர்,வாயாடியான என் அருமை தங்கச்சி பேச யோசிக்கறா, கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues பத்தி பேசறா.ஒன்னுமே புரியல இந்த உலகத்துல.!!"

"இப்போ உன்னோட இந்த அச்சு பிச்சு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நேரம் இல்ல..நான் சொன்னத செய்..அம்மாகிட்ட சொல்லு உத்ராவ பெண் பார்க்க இன்னும் ஒன்றரை மணிநேரத்துல வராங்களாம்.அந்த பையனுக்கு ஏதோ ஆபீஸ்ல வேலையாம்.அதுனால அங்க போயிட்டு சாயந்திரம் திரும்பி வரமுடியாது,இங்க வேலைய முடிச்சிட்டு அப்படியே போறாராம் அவங்க அப்பா கூப்பிட்டு சொன்னாரு.போதுமா இனிமே கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யறீங்களா..ஒரே டென்ஷன் தான் எனக்கு"

இனிமேல் அங்கு இருந்தால் பாட்டு விழும் என்று மூவரும் உள்ளே சென்றனர்."பாட்டி நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்" என்று சென்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்து "உத்ரா இன்னிக்கே குளிச்சிட்டு வந்திடு"என்று வம்பிழுத்துவிட்டு அவளின் சிணுங்கலை கவனியாமல் பைக் சாவியுடன் சென்றான்.

கமலாப்பாட்டியும் ரேவதியும் பலகாரங்கள் செய்ய, உத்ரா குளித்து ரெடியாக, மஹேஷும் சங்கரனும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர்.
சொல்லியது போல் வந்த கவுதம் குடும்பத்தினருக்கு, உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது.

"சரி நாமளே பேசிண்டிருக்கோம், அவங்க ரெண்டுபேரையும் பேச விடுவோம்" என்ற சுந்தரத்தின் அதிகார குரலைக்கேட்ட உத்ராவிற்க்கு வயிற்றில் ஏதோ பிசைவது போல் இருந்தது. கமலாப்பாட்டியின் கரம் வாஞ்சையுடன் முதுகில் விழ தைரியம் வந்தது.

தயக்கத்துடனே இருந்த கவுதமிற்க்கும் அவன் அம்மா பார்வதியின் கண் அசைவில் பலம் பெற்று தோட்டத்திற்க்குச் சென்றான். ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு "சரி நமக்கு தான் இரண்டு குடும்பத்தையும் பிடிச்சுபோச்சே, இவங்க ரெண்டுபேரும் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுப்போம்.ஒரே நாள்ல அவங்க எப்படி முடிவு பண்ணுவாங்க சின்ன பசங்க."

"சரியா சொன்ன பார்வதி, இவனும் ஏதோ பிராஜக்ட் டென்ஷன்னு சொல்லிட்டு இருந்தான்.நாங்க தான் இன்னிக்கே பொண்ண பாத்திடலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்தோம்.இந்த வாரத்துல நம்ம தொந்தரவு இல்லாம ஒரு நாள் இவங்க பேசி முடிவு பண்ணட்டும்.நீங்க என்ன சொல்றீங்க சங்கரன் சார்"

குழப்பத்துடன் அம்மாவையும் மனைவியையும் பார்த்து ஒப்புதல் கிடைத்தபின்னர்,"சரிங்க உங்க பையன் ப்ரீயா இருக்கும் ஒரு நாள் சாயந்திரமா சொல்லுங்க நாம ஒரு கோவில்ல பாத்து பேசுவோம்"என்றார்.
ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அவர்கள் விடைப்பெற்றுச் சென்றனர்.

மதிய உணவு முடித்து, சங்கரன் அபீஸ் பைல்களுடனும், உத்ராவும்,மஹேஷும் கையில் புத்தகத்துடன் பாட்டியின் மடியில் படுத்திருந்தனர்.அங்கு வந்த ரேவதி "என்னங்க வீட்லேயும் ஆபீஸ் வேலையா?"

"ஏன்பா நீங்க ஆபீஸ் நேரத்துல வேலய பாப்பீங்களா இல்லியா, இப்போ இவ்ளோ வேலை பாக்கறீங்க?"

"ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.

"அப்படி சொல்லுடிக்கண்ணு.ஆமா நீ இன்னிக்கி பாடின பாட்டு என்ன ராகம்?" என்று மெள்ள பேச்சை ஆரம்பித்தார்.

"அட இதுதெரியாதப்பா,நம்ம உத்ரா செம்ம டாலென்டட், "ஆனந்த பைரவில ஆரம்பிச்சு,பாதாள பைரவில" முடிச்சிட்டா தெரியுமோ?".

இதைக்கேட்ட உத்ரா சிணுங்கவும், அவள் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது."இருடா சுவாதி கால் பண்றா,பேசிட்டு வந்து உன் கச்சேரி வெச்சுக்கறேன்" என்று மற்றவர்களின் பதிலுக்கு நிற்காமல் ஓடிவிட்டாள்.

"ஹிம்ம் கர்ணனுக்கு கவச குண்டலமாம் உங்க பொண்ணுக்கு செல்போனாம்"என்றாள் ரேவதி.

"சரி விடும்மா நீ சொல்லு உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?"

"ஆமாங்க அவங்க நல்லா பேசறாங்க,நானும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகொடுத்திருக்கேன்.உங்க பொண்ணு எனக்கும் மக தான்னு சொல்றாங்க.பையன பார்த்தாலும் நம்ம உத்ராவுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு"

"ஹிம்ம் நானும் அப்படிதான் நினைக்கறேன்.நீ என்னமா சொல்ற"

"சங்கரா நம்ம எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஆனா உத்ரா சம்மதம் தான் முக்கியம்.நீ என்ன மஹேஷ் சொல்ற"

"என்ன பொருத்தவரை இந்த இடம் சூப்பர்.அந்த அங்கிள் என்ன "Mr.Mahesh"ன்னு கூப்பிட்டு குளுரவெச்சிட்டார்.என்னம்மா சரி சரி முறைக்காதே..என்னோட ஃப்ரண்டு அவர் கம்பனில தான் HRஆ இருக்கான் அவன வெச்சு நான் விசாரிச்சு சொல்றேன்.நீங்க பேமலி பத்தி விசாரிங்க சரியாப்பா?"

"அதெல்லாம் திருப்தியா விசாரிச்சப்புறம் தான் அவங்கள வரச்சொன்னதே.நீ தான் உத்ரா கிட்ட பேசிச் சொல்லனும்"

"என்ன நானா? அவகிட்டயா"

"ஆமாடா அவ சண்டை போட்டாலும் எதுன்னாலும் உங்கிட்ட தான் சொல்றா..இதையும் நீயே பேசிச்சொல்லு"

"என்னமோ சொல்றீங்க.பாக்கறேன்"என்றவன் உத்ராவின் அறைக்கதவைத்தட்ட எத்தனித்து, உள்ளே உத்ராவின் குறலில் கேட்பது சிணுங்கலா,அழுகையாயென்ற குழப்பத்தில் நின்று விட்டான்.

(தொடரும்)

50 comments:

  1. MSK / Saravana said...

    //ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட//

    ஏன்?? எதுக்காக??

  2. MSK / Saravana said...

    கதை ரொம்ப நல்லாவே எழுதுறீங்க.. நல்ல எழுத்தாக்கம்.

    But..
    இந்த கதை எதை நோக்கி நகர்கிறது??
    எத்தனை பகுதி வரும்??

  3. Selva Kumar said...

    அருமையான தொடர்ச்சி..

    நான் வேற யாரோ வந்திருப்பாங்கன்னு எதிர்பாத்தேன்..

  4. Divya said...

    me the first aa???????

  5. Selva Kumar said...

    எப்படிங்க தொடர்ச்சி மட்டும் கரெக்டா ஒரு சஸ்பென்ஸ் வெச்சு போடறீங்க..

    :))

    அடுத்த பதிவலாவது மாப்பிள்ளையே காட்டுங்க...

  6. Selva Kumar said...

    மீ த பஷ்டா ?

  7. Divya said...

    டயலாக்ஸ் எல்லாம் அல்டிமேட் ரம்யா!!

  8. Divya said...

    \ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.\\

    சூப்பர் பதில்!!

  9. Divya said...

    \\என்னமோ சொல்றீங்க.பாக்கறேன்"என்றவன் உத்ராவின் அறைக்கதவைத்தட்ட எத்தனித்து, உள்ளே உத்ராவின் குறலில் கேட்பது சிணுங்கலா,அழுகையாயென்ற குழப்பத்தில் நின்று விட்டான்.\\

    ஆஹா......அடுத்து என்னன்னு யோசிக்க வைச்சு முடிச்சுட்டீங்களே ரம்யா,

    இப்போ புரியுது......தொடர்கதை படிக்கிறப்போ அடுத்த பகுதி வரும்வரை எப்படி இருக்கும் படிக்கிறவங்களுக்குன்னு:((

  10. Divya said...

    \\ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு \\

    10 நிமிஷம் என்ன பேசினாங்க.....எதுக்கு முகம் டல்லடிக்குது????

    சீக்கிரம் .....சீக்கிரம் அடுத்த பார்ட் ப்ளீஸ் ரம்யா:))

  11. Divya said...

    ரொம்ப நல்லா போகுது ரம்யா தொடர் கதை.......வாழ்த்துக்கள்:))

  12. Divya said...

    \ வழிப்போக்கன் said...
    மீ த பஷ்டா ?\\

    சரவணகுமார் முந்திட்டார் வழிபோக்கன்:(((

  13. Kavinaya said...

    நல்லா இருக்கு நடை. உரையாடல்களெல்லாம் ரொம்ப இயல்பா இருக்கு. தொடர்ந்து கலக்குங்க!

  14. Sundar சுந்தர் said...

    //Pre-Engagement Blues ...
    சிணுங்கலா,அழுகையாயென்ற ...//

    நல்லா சுவாரசியமா கதை போகுது. அடுத்த பாகமும் சீக்கிரம் போடுங்க!

  15. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    வசனங்களில் நீங்களும் வெளுத்துவாங்குகின்றீர்கள் இரம்யா! என்ன ஒரு வேகம் எழுத்தில் :) keep it up!

  16. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    //Divya said...
    \\ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு \\

    10 நிமிஷம் என்ன பேசினாங்க.....எதுக்கு முகம் டல்லடிக்குது????

    சீக்கிரம் .....சீக்கிரம் அடுத்த பார்ட் ப்ளீஸ் ரம்யா:))
    //

    திவ்யா மாஸ்டரயே இப்படி கமெண்ட் போடவச்சிட்டீங்களே!!! நடத்துங்க நடத்துங்க :))

  17. பிரேம்ஜி said...

    சிறப்பான கதை.அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  18. கயல்விழி said...

    அருமையான தொடர், எழுத்து நடை. வாழ்த்துக்கள் :)

  19. ஜியா said...

    //பாட்டும் //

    இன்னுமா?? அப்போ ஷ்ரேயா கோஸல், சாதனா சர்கம் தவிர மத்தவங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகாதா?? ;)))

    டையலாக்ஸ் சூப்பர்... இதுக்கு முன்ன நாவல் கீவல் எழுதிருக்கீங்களா என்ன?? நாவல் மாதிரியே போகுது :))

    கலக்குங்க... :))

  20. ராமலக்ஷ்மி said...

    நன்றாகத் தொடர்ந்து நன்றாக முடிந்திருக்கிறது "தொடரும்" இடத்தில்.

    மஹேஷ் ப்ளாக்கின் உரல் என்ன ரம்யா:)?

  21. Divyapriya said...

    //கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues//

    அட, ஆமால்ல??? :-) இருந்தாலும், பாட்டி செம பாட்டி தான்…

    //உத்ராவும்,மஹேஷும் கையில் புத்தகத்துடன் பாட்டியின் மடியில் படுத்திருந்தனர்//

    எனக்கு என் பாட்டி ஞாபகம் தான் வருது :-(( இந்த கதைல எனக்கு கமலா பாட்டிய தான் ரொம்ப பிடிச்சிருக்கு…

  22. Divyapriya said...

    //அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு//

    ஹா ஹா ஹா :-D

  23. Divyapriya said...

    உத்ரா ஏன் அழுகறா? எதுவா இருந்தாலும், அவ அண்ணன் கிட்ட, சொல்ல சொல்லுங்க :-)
    கதை சூப்பரா போகுது...ஆனா எத நோக்கி போகுதுன்னு கண்டு பிடிக்கவே முடியல...கலக்குற ரம்யா...

  24. gils said...

    katha mudinjiruchinu nenacha..intervalnu twistu vachiteengalay :(

  25. MyFriend said...

    //
    "எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! என்ன நடக்குது இந்த வீட்ல, சனிக்கிழமை கூட ஆபீஸே கதின்னு இருக்கும் ஒரு சின்ஸியர் கவர்ன்மென்ட் ஆபீஸர் இன்னிக்கி 10 மணிக்கே வீட்ல ஆஜர்,வாயாடியான என் அருமை தங்கச்சி பேச யோசிக்கறா, கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues பத்தி பேசறா.ஒன்னுமே புரியல இந்த உலகத்துல.!!"//

    வி.வி.சி. ;-)

  26. Anonymous said...

    Azhaga podhunga kadhao. Vaazthukkal

  27. MyFriend said...

    //உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது.//

    ஆஹா.. உத்ரா பாடினாளா? இந்த பழக்கம் இன்னும் இருக்கா? ;-)

  28. MyFriend said...

    சாரி.. பழக்கம் இல்ல. வழக்கம். ;-)

  29. MyFriend said...

    சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்களே.......

  30. முகுந்தன் said...

    //"ஏன்பா நீங்க ஆபீஸ் நேரத்துல வேலய பாப்பீங்களா இல்லியா, இப்போ இவ்ளோ வேலை பாக்கறீங்க?"

    "ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.
    //

    same blood :-)

  31. Vijay said...

    \\உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது\\
    இன்னமும் பொண்ணு பார்க்கும் போது பாட்டெல்லாம் பாடறாங்களா? கேட்கவே நல்லா இருக்கே? ஹ்ம்ம் நம்ம லைஃபுல அதான் எங்கே நடந்தது?

    பையனும் பொண்ணும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்தேன். இப்படி கவுத்திட்டீயளே?

    உத்தராவிக்கு சம்மதமா இல்லையா. சீக்கிரம் சொல்லுங்க.

    ரம்யா, ரொம்ப யதார்த்தமா இருக்கு உங்க கதை நடை. எனக்கென்னவோ இது சுய புராணம் மாதிரி தான் இருக்கு. :-)

  32. வெட்டிப்பயல் said...

    //அட இதுதெரியாதப்பா,நம்ம உத்ரா செம்ம டாலென்டட், "ஆனந்த பைரவில ஆரம்பிச்சு,பாதாள பைரவில" முடிச்சிட்டா தெரியுமோ?".//

    இது ரொம்ப பிடிச்சிருந்தது :-) சத்தம் போட்டு சிரித்தேன் :-)

    //பையனும் பொண்ணும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்தேன். இப்படி கவுத்திட்டீயளே?//

    ரிப்பீட்டே...

  33. Ramya Ramani said...

    \\M.Saravana Kumar said...
    //ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட//

    ஏன்?? எதுக்காக??
    \\

    சும்மா :P

    \\M.Saravana Kumar said...
    கதை ரொம்ப நல்லாவே எழுதுறீங்க.. நல்ல எழுத்தாக்கம்.

    But..
    இந்த கதை எதை நோக்கி நகர்கிறது??
    எத்தனை பகுதி வரும்??
    \\

    நன்றிங்க சரவணகுமார் :)

    கதை ரொம்ப சாதரணமான பொண்ணுக்கு/பையனுக்கும் வரும் Pre-Marriage பத்தினது..இன்னும் சில பாகத்திலேயே முடிஞ்சிடும்..

  34. Ramya Ramani said...

    \\வழிப்போக்கன் said...
    அருமையான தொடர்ச்சி..

    நான் வேற யாரோ வந்திருப்பாங்கன்னு எதிர்பாத்தேன்..
    \\

    அப்படியா!!

    \\அடுத்த பதிவலாவது மாப்பிள்ளையே காட்டுங்க...
    \\
    என்னங்க அவங்கள பேச வெச்சிருவோமா ??

    \\மீ த பஷ்டா ?
    \\

    Just Miss :(

  35. Ramya Ramani said...

    \\ Divya said...

    டயலாக்ஸ் எல்லாம் அல்டிமேட் ரம்யா!!

    \\

    நன்றிங்க..

    \\\என்னமோ சொல்றீங்க.பாக்கறேன்"என்றவன் உத்ராவின் அறைக்கதவைத்தட்ட எத்தனித்து, உள்ளே உத்ராவின் குறலில் கேட்பது சிணுங்கலா,அழுகையாயென்ற குழப்பத்தில் நின்று விட்டான்.\\

    ஆஹா......அடுத்து என்னன்னு யோசிக்க வைச்சு முடிச்சுட்டீங்களே ரம்யா,

    இப்போ புரியுது......தொடர்கதை படிக்கிறப்போ அடுத்த பகுதி வரும்வரை எப்படி இருக்கும் படிக்கிறவங்களுக்குன்னு:((
    \\

    ஆஹா மாஸ்டர் உங்களையே யோசிக்கவெச்சிட்டாங்களா உத்ராவும் மஹேஷும்..சூப்பரு..

    \\\\ஆனால் சென்ற 10 நிமிடங்களிலேயே வந்த தெளிவற்ற முகங்களைக்கண்ட பார்வதி எதையோ யூகித்தவாறு \\

    10 நிமிஷம் என்ன பேசினாங்க.....எதுக்கு முகம் டல்லடிக்குது????

    சீக்கிரம் .....சீக்கிரம் அடுத்த பார்ட் ப்ளீஸ் ரம்யா:))

    \\

    ஆஹா உங்க ஊக்குவிப்புக்கு ரொம்ப நன்றிங்க.

  36. Ramya Ramani said...

    \\கவிநயா said...
    நல்லா இருக்கு நடை. உரையாடல்களெல்லாம் ரொம்ப இயல்பா இருக்கு. தொடர்ந்து கலக்குங்க!
    \\

    நன்றி கவிநயா

    \\சுந்தர் said...
    //Pre-Engagement Blues ...
    சிணுங்கலா,அழுகையாயென்ற ...//

    நல்லா சுவாரசியமா கதை போகுது. அடுத்த பாகமும் சீக்கிரம் போடுங்க!
    \\

    நன்றி சுந்தர்

    \\sathish said...
    வசனங்களில் நீங்களும் வெளுத்துவாங்குகின்றீர்கள் இரம்யா! என்ன ஒரு வேகம் எழுத்தில் :) keep it up!
    \\
    நன்றி கவிஞரே :)

    \\பிரேம்ஜி said...
    சிறப்பான கதை.அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    \\

    நன்றி பிரேம்ஜி, முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்..

  37. Ramya Ramani said...

    \\கயல்விழி said...
    அருமையான தொடர், எழுத்து நடை. வாழ்த்துக்கள் :)
    \\

    நன்றி கயல்விழி, முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்..

  38. Ramya Ramani said...

    \\ஜி said...
    //பாட்டும் //

    இன்னுமா?? அப்போ ஷ்ரேயா கோஸல், சாதனா சர்கம் தவிர மத்தவங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகாதா?? ;)))

    டையலாக்ஸ் சூப்பர்... இதுக்கு முன்ன நாவல் கீவல் எழுதிருக்கீங்களா என்ன?? நாவல் மாதிரியே போகுது :))

    கலக்குங்க... :))
    \\

    தல பாட தெரிஞ்சதினால உத்ரா பாடினாங்க அவ்ளோ தான்

    வருகைக்கு நன்றி

  39. Ramya Ramani said...

    \\ராமலக்ஷ்மி said...
    நன்றாகத் தொடர்ந்து நன்றாக முடிந்திருக்கிறது "தொடரும்" இடத்தில்.

    மஹேஷ் ப்ளாக்கின் உரல் என்ன ரம்யா:)?
    \\

    வருகைக்கும் கருத்துக்கும் ராமலஷ்மி மேடம் :)

    \\Divyapriya said...
    //கல்யாணத்தன்னிக்கி தான் தாத்தாவ பார்த்தேன்னு சொல்ற பாட்டி Pre-Engagement Blues//

    அட, ஆமால்ல??? :-) இருந்தாலும், பாட்டி செம பாட்டி தான்…

    //உத்ராவும்,மஹேஷும் கையில் புத்தகத்துடன் பாட்டியின் மடியில் படுத்திருந்தனர்//

    எனக்கு என் பாட்டி ஞாபகம் தான் வருது :-(( இந்த கதைல எனக்கு கமலா பாட்டிய தான் ரொம்ப பிடிச்சிருக்கு…
    \\

    திவ்யபிரியா..மிக்க நன்றி..ஆமாங்க இப்படி ஒரு பாட்டி இருந்தா சூப்பரில்ல

    \\உத்ரா ஏன் அழுகறா? எதுவா இருந்தாலும், அவ அண்ணன் கிட்ட, சொல்ல சொல்லுங்க :-)
    கதை சூப்பரா போகுது...ஆனா எத நோக்கி போகுதுன்னு கண்டு பிடிக்கவே முடியல...கலக்குற ரம்யா...

    \\

    ஆஹா உத்ராவ எதுன்னாலும் அண்ணன்கிட்ட சொல்ல சொல்றேன் ..

  40. Ramya Ramani said...

    \\gils said...
    katha mudinjiruchinu nenacha..intervalnu twistu vachiteengalay :(
    \\

    :)) Thodarndhu padinga gils

    \\ஸ்ரீ said...
    Azhaga podhunga kadhao. Vaazthukkal
    \\

    நன்றி ஸ்ரீ

    \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    //உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது.//

    ஆஹா.. உத்ரா பாடினாளா? இந்த பழக்கம் இன்னும் இருக்கா? ;-)

    \\

    பாட தெரிஞ்சதினால உத்ரா பாடினாங்க அவ்ளோ தான் மை ஃபிரண்ட்

    \\சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்களே.......
    \\
    :)) தொடர்ந்து படிங்கப்பா !!

    \\முகுந்தன் said...
    //"ஏன்பா நீங்க ஆபீஸ் நேரத்துல வேலய பாப்பீங்களா இல்லியா, இப்போ இவ்ளோ வேலை பாக்கறீங்க?"

    "ஏ என்ன அப்பாவ வம்பிழுக்கறே?அவரென்ன உன்ன மாதிரியா ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட.இல்லப்பா" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.
    //

    same blood :-)
    \\

    :)) தொடர்ந்து படிங்க முகுந்தன்

    \\விஜய் said...
    \\உத்ராவின் பணிவும்,அழகும்,பாட்டும் பிடித்துவிட்டது\\
    இன்னமும் பொண்ணு பார்க்கும் போது பாட்டெல்லாம் பாடறாங்களா? கேட்கவே நல்லா இருக்கே? ஹ்ம்ம் நம்ம லைஃபுல அதான் எங்கே நடந்தது?

    பையனும் பொண்ணும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்தேன். இப்படி கவுத்திட்டீயளே?

    உத்தராவிக்கு சம்மதமா இல்லையா. சீக்கிரம் சொல்லுங்க.

    \\

    அடடே இப்போ அண்ணிய பாடச்சொல்லி கேட்டிருங்க :)

    ஜிக்கு சொன்ன பதில தான் உங்களுக்கும் உத்ராவுக்கு பாடத்தெரிஞ்சதினால பாடினாங்க..அவ்ளோதான்!

    அடுத்த பாகத்தில அவங்க என்ன பேசினாங்கன்னு பாக்கலாம்..

    \\ரம்யா, ரொம்ப யதார்த்தமா இருக்கு உங்க கதை நடை. எனக்கென்னவோ இது சுய புராணம் மாதிரி தான் இருக்கு. :-)
    \\

    என்ன கொடுமை சரவணன் இது!

  41. Ramya Ramani said...

    \\வெட்டிப்பயல் said...
    //அட இதுதெரியாதப்பா,நம்ம உத்ரா செம்ம டாலென்டட், "ஆனந்த பைரவில ஆரம்பிச்சு,பாதாள பைரவில" முடிச்சிட்டா தெரியுமோ?".//

    இது ரொம்ப பிடிச்சிருந்தது :-) சத்தம் போட்டு சிரித்தேன் :-)

    \\

    ஓ அப்படியா..சூப்பரு

    //பையனும் பொண்ணும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்தேன். இப்படி கவுத்திட்டீயளே?//

    ரிப்பீட்டே...
    \\

    அடுத்த பாகத்தில அவங்க என்ன பேசினாங்கன்னு பாக்கலாம் அண்ணா :)

  42. நாணல் said...

    //Pre-Engagement Blues//

    அனுபவம் பேசுதோ ரம்யா... ;)

  43. நாணல் said...

    M.Saravana Kumar said...
    //ஆபீஸ் நேரத்துல பளாக் படிச்சிட்டு,6 மணிக்கப்புறம் வேலையிருக்குமா வர லேட்டாகும்னு ஸீன் போட//

    ஏன்?? எதுக்காக??

    repeatu........

  44. Ramya Ramani said...

    \\naanal said...
    //Pre-Engagement Blues//

    அனுபவம் பேசுதோ ரம்யா... ;)
    \\

    ஏன் ஏன் இப்படியெல்லாம் ஒரு
    சின்ன புள்ளைய வம்பிழுத்துகிட்டு..ஹிம்ம்ம்ம்

  45. priyamanaval said...

    aaha aramya... kalakaraa... enna pesingaaangaa... edhu pesinaangaa... adhu dhane mukkiyamana matter... adha suspense aa vechutee...

  46. Ramya Ramani said...

    \\ priyamanaval said...
    aaha aramya... kalakaraa... enna pesingaaangaa... edhu pesinaangaa... adhu dhane mukkiyamana matter... adha suspense aa vechutee...
    \\

    அட உனக்கு
    சொல்லாமயா..விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் பிரௌஸரில்..

  47. சதங்கா (Sathanga) said...

    ரம்யா,

    இயல்பான அருமையான உரையாடல்கள். மஹேசும், உத்ராவும் சீண்டிக் கொள்ளும் காட்சிகள், அனைத்து வீட்டிலும் நடப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர் தொடர வாழ்த்துக்கள்.

  48. சதங்கா (Sathanga) said...

    //ஏன் ஏன் இப்படியெல்லாம் ஒரு
    சின்ன புள்ளைய வம்பிழுத்துகிட்டு..ஹிம்ம்ம்ம்//

    ஹா ஹா. ரசிக்க வைத்த வரிகள் :))

  49. Ramya Ramani said...

    \\சதங்கா (Sathanga) said...
    ரம்யா,

    இயல்பான அருமையான உரையாடல்கள். மஹேசும், உத்ராவும் சீண்டிக் கொள்ளும் காட்சிகள், அனைத்து வீட்டிலும் நடப்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர் தொடர வாழ்த்துக்கள்.
    \\

    மிக்க நன்றி சதங்கா :)

  50. Ramya Ramani said...

    \\சதங்கா (Sathanga) said...
    //ஏன் ஏன் இப்படியெல்லாம் ஒரு
    சின்ன புள்ளைய வம்பிழுத்துகிட்டு..ஹிம்ம்ம்ம்//

    ஹா ஹா. ரசிக்க வைத்த வரிகள் :))
    \\

    ஹிம்ம் நல்லா சிரிச்சீங்களா..நல்லது