Monday, August 11, 2008

நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-1

வாரநாட்களின் பரபரப்பு இல்லாமல் அமைதியான சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு உத்ரா குறுக்கும் நெடுக்குமாக கூடத்தில் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அவள் அண்ணன் மஹேஷ்,"என்ன உத்ரா வீக்கெண்டு இவ்ளோ சீக்கிரமா உனக்கு விடிஞ்சிருச்சு என்ன எங்கேயாவது ஊர் சுத்த போறியா?"என்று அவளை சீண்டினான்.

தலையை சிலுப்பி அவனைப்பார்த்து முறைத்துவிட்டு, "தோ பாருடா நானே டென்ஷனா இருக்கேன் என்னோட வாயை பிடுங்காதே எதாவது சொல்லிடபோறேன்!"

"அட இங்க பாருடா இவ சொல்ற வரைக்கும் என்ன நாங்க சும்மா இருப்போமா. ஏதோ பாவம் இன்னிக்கி உன்ன அம்மா ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாளே..நீயும் வேற குட்டிப்போட்ட பூனையாட்டம் சுத்திண்டு இருக்கியேன்னு கேட்டா எனக்கு இன்னும் தேவை தான்"

இவர்களின் சம்பாஷனையைக்கேட்டுக்கொண்டே வந்த கமலாப்பாட்டி, "ஏன்டா கண்ணா அவளை வம்பிழுக்கறே? இன்னிக்கி அந்த பையன் வீட்லேர்ந்து வந்து பாத்திட்டு போனாங்கன்னா குழந்தைக்கு சீக்கிரமா கல்யாணம் ஆயிடும்.அப்பறம் நீ இப்படியெல்லாம் அவளைப்பேச முடியாது"

"என்ன பாட்டி நீங்க அதுக்குள்ளே கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க..நானே என்ன பேசறதுன்னு பயங்கற குழப்பத்துல இருக்கேன்"

"அடடே என்னோட தங்கை பேச கூட யோசிப்பாளா!!"

"குழந்தே சும்மா இரேண்டா! நீ சொல்லுடி தங்கம் உனக்கு என்ன கவலை"

"பாட்டி நீயே சொல்லு அந்த ஆன்டி என்ன கோவில்ல பார்த்தாளாம்.அப்பறம் ஒரு கல்யாணத்துல பார்த்துட்டு அப்பா கிட்ட பேசி இதோ இன்னிக்கி பொண்ணு பாக்கறவரைக்கும் வந்திருக்கு..அம்மாவும் அப்பாவும் நீங்கள்ளாம் கூட என்னோட கருத்த கேக்ககாம ஒத்துக்கிட்டீங்க..எப்படி பாட்டி நான் ஒன்னுமே தெரியாத பையன கல்யாணம் பண்ணிகிட்டு,லைஃப் முழுக்க ஷேர் பண்ணுவேன்? கேக்கவே சகிக்கலை"

"என்ன உத்ரா யாரயாவது லவ் பண்றியா?? அதச்சொல்ல பயந்துகிட்டு இப்படியெல்லாம் மழுப்பறியா?நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"

"அட என்னோட ரேஞ்சுக்கு யாருமே கிடைக்கலைடா"என்று கூறி அவனுக்கு பழிப்புக்காட்டினாள்.

பரிவுடன் அவள் கூந்தலை வருடிக்கொண்டே"உத்ரா உன்னோட கவலை எனக்கு நல்லாவே புரியுதுடா கண்ணா.பாரு அரேஞ்சுடு மேரேஜ்னா இதெல்லாம் சகஜம் தானே.சரி உனக்கு நான் சொல்றது பிடிச்சிருந்ததுன்னாக்க அப்படியே பேசு சரியா?"

மகிழ்ச்சியுடன் பாட்டியிடம் வந்த உத்ரா,"Come On பாட்டி சொல்லுங்க".ஏதோ மொக்கை மேட்ச் பார்க்க் உட்காந்த மஹேஷ் ஆஃப் பண்ணிவிட்டு வந்தமர்ந்தான்.

"சரி அந்த பையன் பேரு என்ன?"

"கோதம் பாட்டி" கிரீச்சிட்டான் மஹேஷ்.

"கோதமும் இல்ல ஹிக்கிம் போதமும் இல்ல அவன் பேரு கவுதம்"

"இதோ பாரு உத்ரா முதல்ல நீ அந்த பையன "அவன் இவன் வாடா போடா"ன்னு சொல்லாதே.என்ன தான் பசங்களுக்கு பொண்ணுங்க செல்லமா அப்படி கூப்பிடறது பிடிக்கும்னாலும் முதலேயே அப்படி கூப்பிடாதே.வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,அவனா கொஞ்ச நேரத்துல நீ என்னை வா போன்னு சொல்லலாம் எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்னு சொல்வான் அதை அப்புறம் கெட்டியா பிடிச்சிக்கோ"என்று கண் சிமிட்டினாள்.

"அட அட என்னமா கவுக்கறீங்கப்பா ஒரு பையன"

"பாருடாமா அப்புறம் அவங்க இன்னிக்கி உன்ன பொண்ணு பாக்க வராங்கன்னாலும் எல்லாமே விசாரிச்சிருப்பாங்க..இது ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்.அவங்க வீட்லயும்,பையனுக்கும் உன்ன பிடிச்சிடுச்சாம்.நீ எப்பவுமே இருக்கறாப்போல இயல்பா இரு.உனக்கு ஏதாவது பையன்கிட்டக்கேக்கனும்னாலும் பேசு"

"அது தான் பாட்டி பெரிய பிரச்சனையே என்னன்னு பேசுவேன்.நான் முன்ன பின்ன பாத்தது கூட இல்லியே..அன்னிக்கி அவரோட கஸின் கல்யாணம் அதுக்குக்கூட இல்லாம ஆபீஸ் போயிட்டார் சின்ஸியர் சிகாமணி"

சிரித்துவிட்டு "முதல்ல பேசச்சொல்லும்போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கும் ஆனா பேசினாத்தானே ஆகும்"

"ஏன்டி என்கிட்ட இவ்ளோ வாயடிக்கறே அவர் கிட்ட பேசமாட்டியோ?"

"ஹிம்ம் இதத்தான் சொல்ல வந்தேன். நீ முதல்ல எதுவும் பேசாதே.அந்த பையன பேசவிடு..நல்லா அப்சர்வ் பண்ணு எப்படி பேசறான்,எதைப்பத்தில்லாம் பேசறான்,தற்பெருமை அடிக்கறானா.ஒருத்தர் பேசும் விதம் வார்த்தைய வெச்சுக்கிட்டே நீ கம்பர்டபிளா பீல் பண்றியான்னு தெரிஞ்சுக்கலாம்"

"என்ன பேசினா எப்படின்னு புரிஞ்சுப்பேன்?"

"அவங்க அம்மா அப்பா குடும்பம் பத்தி சொன்னா,அவங்கத்தான் எனக்கு முக்கியம்..நீ அவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் அப்படினின்னுப்பேசினா கேட்டுக்கோ.அப்படி பேசும் பசங்க உன் மேலேயும் பின்னாடி அக்கறையா இருப்பாங்க.

நீயும் உங்க அம்மா அப்பா குடும்பத்தப்பத்தி சுருக்கமா சொல்லிடு.அடுத்து உன்னோட வேலைப்பத்திக்கேட்டா, பாரதி கண்ட புதுமைப்பெண் நான் தான் அப்படின்னு ஒரேடியா பேசாம, எனக்கு கேரியர் முக்கியம் தான். அதுக்காக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தருவேன் அப்படின்னு பொறுமையா சொல்லு.ஒரு அந்நியன் கிட்ட பேசும்பொது நீ எப்படி பேசுவியோ அப்படி பேசனும் ஆனா முக்கியமான விஷயத்தையும் சொல்லிடனும்"

"மொத்ததுல இவ வால சுருட்டி வெச்சுக்க சொல்றீங்க!"

மஹேஷை முறைத்திவிட்டு "ஏன் பாட்டி ஒரு 10 நிமிஷத்துல எப்படி முடிவு பண்றதாம்?"

"அதான்டிப்பொண்ணே சொல்றேன்..இன்னிக்கி கொஞ்சமாத்தான் தெரியும் உனக்கு..எப்படியும் மத்த விஷயமெல்லாம் பேசி இந்த இடம் முடிவாச்சுன்னா கொஞ்சம் கொஞ்சமா தெரியும்.நானே உனக்கு எப்படி அணுகறதுன்னு சொல்றேன்"

பாட்டியை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு "சோ சுவீட் பாட்டி நீங்க!"

"பாட்டி பாவம்டி விடு உன்னோட வெயிட் அவங்க தாங்க மாட்டாங்க" மஹேஷ் இப்படி அவளை வம்பிழுத்துக்கொண்டிருக்கும் போதே வாசலில் மணிஅடிக்க திறந்தவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான்.

(தொடரும்)

61 comments:

  1. Selva Kumar said...

    சூப்பர் ரம்யா!!

    இடையே டிப்ஸ் தெளிச்சு விட்டிருக்கிற மாதிரி தெரியுது.

  2. Selva Kumar said...

    ஆழகான தொடக்கம்.!!

    தொடர்கதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    எப்படித்தான் ஒரு சஸ்பென்ஸ் வெச்சு தொடரும்னு போடறீங்களோ ??

  3. Selva Kumar said...

    Btw, மீ த பஷ்டா ?

  4. SathyaPriyan said...

    நல்ல தொடக்கம் ரம்யா.

    ஆங்கிலத்தில் "Elevator Conversation Skills" என்பார்கள். அதன் பொருள் ஒரு 30 விநாடிகளில் இருந்து ஒரிரு நிமிட நேரமே செய்யப்படும் ஒரு elevator travel முடிவில் எவ்வாறு ஒரு அந்நியனை impress செய்வது என்பது பற்றி.

    Management Skills இல் மிகப்பெரிய திறமையாக இது போற்றப்படுகிறது.

    இது எதற்கு உதவுமோ இல்லையோ, இந்த பெண் பார்க்கும் படலத்தில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பயன்படும்.

  5. Sundar சுந்தர் said...

    நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க! அடுத்த பாகம் படிக்க ஆவல்!

  6. வெட்டிப்பயல் said...

    கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு :-)

    இப்படியெல்லாம் டிப்ஸ் சொல்லி தர பாட்டி இருந்தா சூப்பரா இருக்கும் :-)

    BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)

  7. ஜியா said...

    அடுத்த தொடர்கதை ஆசிரியரும் ரெடியா??

    சூப்பரப்பு... கலக்குங்க டீச்சர்... ஆரம்பமே அசத்தலா இருக்கு..

    //நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-1//

    டைட்டில பாத்தா எதுவும் சஸ்பென்ஸ் இருக்குற மாதிரியே தெரியலையே ;)))

  8. சதங்கா (Sathanga) said...

    ரம்யா,

    நல்ல ஆரம்பம். மற்றும் தொடரும் போடற இடத்தில, சூப்பரா நிறுத்தியிருக்கீங்க.

    ரைட் சாய்ஸ் தொடர வாழ்த்துக்கள்.

  9. Divya said...

    அடடே........ரம்யா....வாங்கோ வாங்கோ....ஜாயின் தி கிளப் ஆஃப் 'தொடர் கதை' பதிவர்கள்:)))

  10. Divya said...

    அசத்தலான ஆரம்பம் ரம்யா!!

    உரையாடல்கள் அருமை அருமை!!!
    ரொம்ப யதார்த்தமா, பேச்சு தமிழில் அழகா எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள்!!

  11. Divya said...

    @வெட்டிபயல்

    \\BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)\

    அண்ணா.....இதெல்லாம் ரொம்ப ஓவரு:((

  12. Divya said...

    \\தலையை சிலுப்பி அவனைப்பார்த்து முறைத்துவிட்டு, "தோ பாருடா நானே டென்ஷனா இருக்கேன் என்னோட வாயை பிடுங்காதே எதாவது சொல்லிடபோறேன்!"\\

    தலையை சிலுப்பி -> இந்த வார்த்தையெல்லாம் கேட்டே ரொம்ப நாள் ஆச்சு:))

  13. Divya said...

    \"இதோ பாரு உத்ரா முதல்ல நீ அந்த பையன "அவன் இவன் வாடா போடா"ன்னு சொல்லதே.என்ன தான் பசங்களுக்கு பொண்ணுங்க செல்லமா அப்படி கூப்பிடறது பிடிக்கும்னாலும் முதலேயே அப்படி கூப்பிடாதே.வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,அவனா கொஞ்ச நேரத்துல நீ என்னை வா போன்னு சொல்லலாம் எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்னு சொல்வான் அதை அப்புறம் கெட்டியா பிடிச்சிக்கோ"என்று கண் சிமிட்டினாள்.\\

    சூப்பரு:))

    கலக்குறீங்க ரம்யா......!!!

    பாராட்டுக்கள்!!

  14. Kavinaya said...

    சுவாரஸ்யமான தொடக்கம். விரைவில் தொடருங்கள்:)

  15. Naveen Kumar said...

    good start:-)

  16. நாணல் said...

    வழக்கம் போல டிப்ஸ் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்கீங்க ரம்யா.. :))

    அடுத்த தொடருக்காக waitings... :))

  17. priyamanaval said...

    ரம்யா... கலக்கற... இந்த போஸ்ட் பல பேருக்கு useful ஆ இருக்கும்...

  18. Divyapriya said...

    கலக்குற ரம்யா…Title லே மிரட்டலா இருக்கு :))

  19. Divyapriya said...

    //வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,//

    ஹா ஹா ஹா…LOL :-D

    //நல்லா அப்சர்வ் பண்ணு எப்படி பேசறான்,எதைப்பத்தில்லாம் பேசறான்,தற்பெருமை அடிக்கறானா.ஒருத்தர் பேசும் விதம் வார்த்தைய வேச்சுக்கிட்டே நீ கம்பர்டபிளா பீல் பண்றியான்னு தெரிஞ்சுக்கலாம்//

    அட அட அட…சூப்பர் டிப்ஸ் ரம்யா :))

    //"பாட்டி பாவம்டி விடு உன்னோட வெயிட் அவங்க தாங்க மாட்டாங்க"//

    :-D

  20. Divyapriya said...

    //வாசலில் மணிஅடிக்க திறந்தவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான்.//

    மாப்ள வீட்டுக்காரங்க அதுக்குள்ள வந்துட்டாங்களா???

  21. Shwetha Robert said...

    Ramya,neenga ivlo periya story writer-aah??
    very impressive start,asathunga Ramya:-)

  22. gils said...

    nice story..bitten by the divya bug? :) intha idea nalla irukay..naalikay ungaluku intha mathiri oru situation varachay u can jus give this URL and ask ur fellow to read thru ur preferences :))

  23. மே. இசக்கிமுத்து said...

    யதார்த்தமான வார்த்தைள் கதையெங்கும், அருமை!

  24. இவன் said...

    சூப்பரா போகுது எப்போ அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க waiting.....

  25. ambi said...

    //BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)
    //

    :)))

    BTW, அந்த பேத்திக்கு இன்னொரு பேரு ரம்யாவா? :p

    கதை நல்லா இருக்கு. மேலே போகட்டும்.

  26. FunScribbler said...

    ஆஹா மேடம் நீங்களுமா? எனக்கு தெரிஞ்சு இப்போ கிட்டதட்ட 2 தொடர்கதை ஓடிகிட்டு இருக்கு. ஒன்னு திவ்ஸ்வோடது..இன்னொன்னு நம்ம இம்சை அரசியோடது...அந்த வரிசையில இப்போ இது!

    சூப்பர்ர்ர்ர்ர்! கலக்குறீங்க. கதையில் வந்த பாட்டி மாதிரி ஒரு பாட்டிய தேடிகிட்டு இருக்கேன்! :)

    //உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"//

    நான் இந்த அண்ணனை தத்து எடுத்துகிறேன்!!.:)

  27. Anonymous said...

    இந்த மாதிரி பாட்டி நமக்கு எல்லாம் கிடைக்க மாட்டுதே :D
    கதை நல்லா இருக்கு.
    அடுத்த கதை எப்போ அம்மணி :)

  28. Anonymous said...

    ////உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"//

    நான் இந்த அண்ணனை தத்து எடுத்துகிறேன்!!.:)//

    ithuku one repeatuu :D

  29. Ramya Ramani said...

    \\வழிப்போக்கன் said...
    சூப்பர் ரம்யா!!

    இடையே டிப்ஸ் தெளிச்சு விட்டிருக்கிற மாதிரி தெரியுது.

    ஆழகான தொடக்கம்.!!

    தொடர்கதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    எப்படித்தான் ஒரு சஸ்பென்ஸ் வெச்சு தொடரும்னு போடறீங்களோ ??

    Btw, மீ த பஷ்டா ?

    \\

    ஆமா நீங்க தான் ஃபஷ்டு :))

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி :)

    டிப்ஸா! அப்படியெல்லாம் இல்ல பாட்டி Experience பேசுது ;)

    \\SathyaPriyan said...
    நல்ல தொடக்கம் ரம்யா.

    ஆங்கிலத்தில் "Elevator Conversation Skills" என்பார்கள். அதன் பொருள் ஒரு 30 விநாடிகளில் இருந்து ஒரிரு நிமிட நேரமே செய்யப்படும் ஒரு elevator travel முடிவில் எவ்வாறு ஒரு அந்நியனை impress செய்வது என்பது பற்றி.

    Management Skills இல் மிகப்பெரிய திறமையாக இது போற்றப்படுகிறது.

    இது எதற்கு உதவுமோ இல்லையோ, இந்த பெண் பார்க்கும் படலத்தில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பயன்படும்.
    \\

    ஆஹா சத்யபிரியன் மேனேஜ்மென்ட் பத்தியெல்லாம் சொல்லிருக்கீங்க!. விளக்கமான உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி :)

    \\சுந்தர் said...
    நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க! அடுத்த பாகம் படிக்க ஆவல்!
    \\

    நன்றி சுந்தர் :)

  30. Ramya Ramani said...

    \\வெட்டிப்பயல் said...
    கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு :-)
    \\

    நன்றி அண்ணே!

    \\
    இப்படியெல்லாம் டிப்ஸ் சொல்லி தர பாட்டி இருந்தா சூப்பரா இருக்கும் :-)
    \\

    :))

    \\
    BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)

    \\

    இதுவரைக்கும் அப்படி இல்ல இனிமே வேணா அப்படி மாத்திடுவோம் ;)

    \\ ஜி said...
    அடுத்த தொடர்கதை ஆசிரியரும் ரெடியா??

    சூப்பரப்பு... கலக்குங்க டீச்சர்... ஆரம்பமே அசத்தலா இருக்கு..

    //நீயே என் ரைட் சாய்ஸ் அன்பே-1//

    டைட்டில பாத்தா எதுவும் சஸ்பென்ஸ் இருக்குற மாதிரியே தெரியலையே ;)))
    \\

    நன்றி தல :)
    சஸ்பென்ஸ் எல்லாம் இல்லீங்க..இது ஒரு சாதாரண குடும்பக்கதை :)

    \\சதங்கா (Sathanga) said...
    ரம்யா,

    நல்ல ஆரம்பம். மற்றும் தொடரும் போடற இடத்தில, சூப்பரா நிறுத்தியிருக்கீங்க.

    ரைட் சாய்ஸ் தொடர வாழ்த்துக்கள்.
    \\

    மிக்க நன்றி சதங்கா :)

  31. Ramya Ramani said...

    \\Divya said...
    அடடே........ரம்யா....வாங்கோ வாங்கோ....ஜாயின் தி கிளப் ஆஃப் 'தொடர் கதை' பதிவர்கள்:)))
    \\

    வந்துட்டோம்ல :P

    \\Divya said...
    அசத்தலான ஆரம்பம் ரம்யா!!

    உரையாடல்கள் அருமை அருமை!!!
    ரொம்ப யதார்த்தமா, பேச்சு தமிழில் அழகா எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள்!!
    \\

    ஆஹா மிக்க நன்றி திவ்யா :)

    \\Divya said...
    \\தலையை சிலுப்பி அவனைப்பார்த்து முறைத்துவிட்டு, "தோ பாருடா நானே டென்ஷனா இருக்கேன் என்னோட வாயை பிடுங்காதே எதாவது சொல்லிடபோறேன்!"\\

    தலையை சிலுப்பி -> இந்த வார்த்தையெல்லாம் கேட்டே ரொம்ப நாள் ஆச்சு:))
    \\

    :))

    \\Divya said...
    \"இதோ பாரு உத்ரா முதல்ல நீ அந்த பையன "அவன் இவன் வாடா போடா"ன்னு சொல்லதே.என்ன தான் பசங்களுக்கு பொண்ணுங்க செல்லமா அப்படி கூப்பிடறது பிடிக்கும்னாலும் முதலேயே அப்படி கூப்பிடாதே.வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,அவனா கொஞ்ச நேரத்துல நீ என்னை வா போன்னு சொல்லலாம் எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்னு சொல்வான் அதை அப்புறம் கெட்டியா பிடிச்சிக்கோ"என்று கண் சிமிட்டினாள்.\\

    சூப்பரு:))

    கலக்குறீங்க ரம்யா......!!!

    பாராட்டுக்கள்!!
    \\

    மீண்டும் நன்றி திவ்யா. பாராட்ட கமலாப்பாட்டிக்கும் சொல்லிடறேன் :)

  32. Ramya Ramani said...

    \\கவிநயா said...
    சுவாரஸ்யமான தொடக்கம். விரைவில் தொடருங்கள்:)
    \\

    நன்றி கவிநயா :)

    \\Naveen Kumar said...
    good start:-)
    \\

    நன்றி Naveen Kumar :)

    \\naanal said...
    வழக்கம் போல டிப்ஸ் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்கீங்க ரம்யா.. :))

    அடுத்த தொடருக்காக waitings... :))
    \\

    நன்றி naanal :)
    ஆனா என்னங்க வழக்கமான டிப்ஸ்னு சொல்லிட்டீங்க..நான் எங்க மேடம் டிப்ஸ் எல்லாம் கொடுத்தேன் !

    \\priyamanaval said...
    ரம்யா... கலக்கற... இந்த போஸ்ட் பல பேருக்கு useful ஆ இருக்கும்...
    \\

    நன்றி பிரியா :)

  33. Ramya Ramani said...

    \\Divyapriya said...
    கலக்குற ரம்யா…Title லே மிரட்டலா இருக்கு :))
    \\

    ஆஹா நன்றி :)

    \\Divyapriya said...
    //வாங்க சொல்லுங்கன்னு சீன் போடு,//

    ஹா ஹா ஹா…LOL :-D

    //நல்லா அப்சர்வ் பண்ணு எப்படி பேசறான்,எதைப்பத்தில்லாம் பேசறான்,தற்பெருமை அடிக்கறானா.ஒருத்தர் பேசும் விதம் வார்த்தைய வேச்சுக்கிட்டே நீ கம்பர்டபிளா பீல் பண்றியான்னு தெரிஞ்சுக்கலாம்//

    அட அட அட…சூப்பர் டிப்ஸ் ரம்யா :))

    //"பாட்டி பாவம்டி விடு உன்னோட வெயிட் அவங்க தாங்க மாட்டாங்க"//

    :-D
    \\

    :))
    பிரிச்சு பிரிச்சு ரசிச்சிருக்கீங்க நன்றி திவ்யபிரியா

    \\Divyapriya said...
    //வாசலில் மணிஅடிக்க திறந்தவன் அப்படியே அசந்து நின்றுவிட்டான்.//

    மாப்ள வீட்டுக்காரங்க அதுக்குள்ள வந்துட்டாங்களா???
    \\

    அப்படியா தோணுது..பாத்திருவோமே அடுத்த பார்ட்ல :P

  34. Ramya Ramani said...

    \\Shwetha Robert said...
    Ramya,neenga ivlo periya story writer-aah??
    very impressive start,asathunga Ramya:-)
    \\

    நன்றி ஸ்வேதா..என்னங்க ஆளே காணோம் பிஜியா???
    ஆமாங்க கதை இந்த பார்ட் கொஞ்சம் பெரிசாகிடுச்சு :P

  35. Ramya Ramani said...

    \\gils said...
    nice story..bitten by the divya bug? :) intha idea nalla irukay..naalikay ungaluku intha mathiri oru situation varachay u can jus give this URL and ask ur fellow to read thru ur preferences :))
    \\

    அட இது கூட சூப்பர் ஐடியா போல ;)

    \\இசக்கிமுத்து said...
    யதார்த்தமான வார்த்தைள் கதையெங்கும், அருமை!
    \\

    நன்றி இசக்கிமுத்து :)

    \\இவன் said...
    சூப்பரா போகுது எப்போ அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க waiting.....
    \\

    நன்றி இவன் கூடிய விரைவில் :)

    \\ambi said...
    //BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)
    //

    :)))

    BTW, அந்த பேத்திக்கு இன்னொரு பேரு ரம்யாவா? :p

    கதை நல்லா இருக்கு. மேலே போகட்டும்.
    \\

    நன்றி ambi அண்ணா :))

  36. Ramya Ramani said...

    \\Thamizhmaangani said...
    ஆஹா மேடம் நீங்களுமா? எனக்கு தெரிஞ்சு இப்போ கிட்டதட்ட 2 தொடர்கதை ஓடிகிட்டு இருக்கு. ஒன்னு திவ்ஸ்வோடது..இன்னொன்னு நம்ம இம்சை அரசியோடது...அந்த வரிசையில இப்போ இது!

    சூப்பர்ர்ர்ர்ர்! கலக்குறீங்க. கதையில் வந்த பாட்டி மாதிரி ஒரு பாட்டிய தேடிகிட்டு இருக்கேன்! :)

    //உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"//

    நான் இந்த அண்ணனை தத்து எடுத்துகிறேன்!!.:)
    \\

    என்ன பெரிய ஆளுங்களோடெல்லாம் என் பேரெ சேக்கறீங்க!!

    ரசிச்சதுக்கு நன்றி..ஆஹா மஹேஷ் அண்ணன தத்து எடுக்கறீங்களா?? சரிதான்..இன்னும் அவரு எப்படியெல்லாம் கல்க்கபோராரு பாருங்க..

    \\துர்கா said...
    இந்த மாதிரி பாட்டி நமக்கு எல்லாம் கிடைக்க மாட்டுதே :D
    கதை நல்லா இருக்கு.
    அடுத்த கதை எப்போ அம்மணி :)
    \\

    நன்றி துர்கா :)
    அடுத்த பார்ட் கூடிய விரைவில் :)

    \\ துர்கா said...
    ////உனக்கு ஹெல்ப் பண்றேன்..Dont Worry My Dear Sis"//

    நான் இந்த அண்ணனை தத்து எடுத்துகிறேன்!!.:)//

    ithuku one repeatuu :D
    \\

    நீங்களுமா :))

  37. 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

    அடடே!! இன்னுமோரு கதாசிரியர் தோற்றமா :) அசத்துங்க!

    வாழ்த்துக்கள் இரம்யா!

  38. Nilofer Anbarasu said...

    ஏ பாட்டி கலக்குறியே.....
    சும்மா போட்டு தாக்குறியே....

  39. Ramya Ramani said...

    நன்றி சதிஷ்

    நன்றி ராஜா

  40. நாணல் said...

    உங்களோட "அந்நிய மொழி படிக்கலாம் வாங்க", "யுகப்புரட்சி " படிச்ச ஃப்லோ ல சொல்லிட்டேன்... :))

  41. Ramya Ramani said...

    \\naanal said...
    உங்களோட "அந்நிய மொழி படிக்கலாம் வாங்க", "யுகப்புரட்சி " படிச்ச ஃப்லோ ல சொல்லிட்டேன்... :))
    \\

    ஆஹா நன்றி naanal :)

  42. MSK / Saravana said...

    / வழிப்போக்கன் said...
    ஆழகான தொடக்கம்.!!

    தொடர்கதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    எப்படித்தான் ஒரு சஸ்பென்ஸ் வெச்சு தொடரும்னு போடறீங்களோ ??//

    ரிப்பீட்டேய் ...........

  43. MSK / Saravana said...

    // வெட்டிப்பயல் said...
    கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு :-)

    இப்படியெல்லாம் டிப்ஸ் சொல்லி தர பாட்டி இருந்தா சூப்பரா இருக்கும் :-)

    BTW, அந்த பாட்டிக்கு இன்னொரு பேரு திவ்யாவா? ;)//

    ரிப்பீட்டேய் ...........

  44. MSK / Saravana said...

    // Thamizhmaangani said...
    ஆஹா மேடம் நீங்களுமா? எனக்கு தெரிஞ்சு இப்போ கிட்டதட்ட 2 தொடர்கதை ஓடிகிட்டு இருக்கு. ஒன்னு திவ்ஸ்வோடது..இன்னொன்னு நம்ம இம்சை அரசியோடது...அந்த வரிசையில இப்போ இது!//

    SRi-nu ஒருத்தங்களும் நல்லாவே எழுதுறாங்க..

  45. MSK / Saravana said...

    கதைய நல்லாவே ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க..

    தொடர்ந்து கவனிக்க படுவீர்..

    ;)

  46. Ramya Ramani said...

    சரவணகுமார்..வருகைக்கும் வாழ்துக்குளுக்கும் நன்றி.
    தொடர்ந்து வரவும் :)

    ஸ்ரீ கதை கவிதைகளை நானும் தொடர்ந்து படித்து வரேங்க நல்லா எழுதறாங்க..

  47. Anonymous said...

    கதை அழகா பயணிக்குதுங்க ரம்யா. இதே வேகமும் நடையும் தொடர வாழ்த்துக்கள். அருமை.....

  48. Ramya Ramani said...

    \\ஸ்ரீ said...
    கதை அழகா பயணிக்குதுங்க ரம்யா. இதே வேகமும் நடையும் தொடர வாழ்த்துக்கள். அருமை.....
    \\

    மிக்க நன்றி ஸ்ரீ

  49. குடுகுடுப்பை said...

    என் முதல் பதிவு வந்து பாருங்கள்.

    http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_14.html

  50. Ramya Ramani said...

    @ குடுகுடுப்பை கண்டிப்பா படிக்கறேங்க

  51. GURU said...

    hey gud goin.... 2nd part eppo???

  52. Vijay said...

    ரம்யா, முதலின் நீங்க என்னை மன்னிக்கணும். அதெப்படி 3 நாட்கள் உங்கள் பதிவைப் பார்க்காமல் இருந்திருப்பேன். Anyway, better late than never.
    தொடர் கதை எழுதும் இன்னொரு கதாசிரியருக்கு நல்வரவு. ரொம்ப யதார்த்தமா இருக்கு. அதிலும் பாட்டி பேத்தி பேரன் உரையாடல் ரொம்ப கியூட். ரொம்ப காக்க வைக்காமல் அடுத்த பாகத்தை சீக்கிரம் எழுதுங்க.

  53. ஜியா said...

    aduththa part eppo???

  54. Ramya Ramani said...

    @ குரு, ஜி விரைவில்...

    விஜய் என்ன இது மன்னிப்பெல்லாம்!

    பரவாயில்லை..மன்னித்திவிட்டேன் :P
    வாழ்த்துக்களுக்கு நன்றி..விரைவில் இரண்டாம் பாகம் ...

  55. ராமலக்ஷ்மி said...

    அருமையான தொடக்கம் நடை. வாழ்த்துக்கள் ரம்யா.

    தொடரும் போட்ட விதமும் சூப்பர், எல்லார் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டு, பின் அடுத்த பாகத்தில் (படிச்சிட்டேன்ல) பார்த்தால்...:))!

  56. ராமலக்ஷ்மி said...

    சொல்ல மறந்திட்டனே, கொடுத்து வச்ச பேத்தி.

  57. MyFriend said...

    யேஹிஹாய் ரைக்ட் சாய்ஸ் பேபி ஆஹா...
    நீயே என் ரைக்ட் சாய்ஸ் அன்பே ஆஹா..

    இந்த "ஆஹா" பதிவெழுதிய ரம்யாவுக்கு. :-)

  58. MyFriend said...

    நல்ல பதிவு.

    கலக்கலான ஆரம்பம். மத்தவங்க திரும்ப வந்து படிக்க தூண்டும் வகையாக எழுதிய இன்னொரு ப்ளஸ் ;-)

    வாழ்த்துக்கள். :-)

  59. Ramya Ramani said...

    \\ராமலக்ஷ்மி said...
    அருமையான தொடக்கம் நடை. வாழ்த்துக்கள் ரம்யா.

    தொடரும் போட்ட விதமும் சூப்பர், எல்லார் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டு, பின் அடுத்த பாகத்தில் (படிச்சிட்டேன்ல) பார்த்தால்...:))!
    \\

    மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்

    \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    யேஹிஹாய் ரைக்ட் சாய்ஸ் பேபி ஆஹா...
    நீயே என் ரைக்ட் சாய்ஸ் அன்பே ஆஹா..

    இந்த "ஆஹா" பதிவெழுதிய ரம்யாவுக்கு. :-)

    நல்ல பதிவு.

    கலக்கலான ஆரம்பம். மத்தவங்க திரும்ப வந்து படிக்க தூண்டும் வகையாக எழுதிய இன்னொரு ப்ளஸ் ;-)

    வாழ்த்துக்கள். :-)
    \\
    மிக்க நன்றி மை ஃபிரண்ட் :)

  60. Ramya Ramani said...

    \\ ராமலக்ஷ்மி said...
    சொல்ல மறந்திட்டனே, கொடுத்து வச்ச பேத்தி.
    \\

    ஆமாங்க ரொம்ப குடுத்து வச்சவங்க தான் :)

  61. Dr.Naganathan Vetrivel said...

    kalakkureengappa