எனக்கு இந்த அவார்ட் கொடுத்த அச்சச்சோ புகழ்-ஸ்ரீ, விஜய்,முகுந்தன் இவங்க எல்லோருக்கும் நன்றி.
நானும் இன்னும் 5 பேருக்கு தரணுமாம். நமக்கு நிறைய மக்களை தெரியுமே,நண்பர்களாச்சே யாருக்கு கொடுக்கலாம் நினைச்சா, சரிடாப்பா எல்லாரையும் சொல்லிட்டே வந்தா போச்சுன்னு தோணிச்சு..
ஸோ மக்களே ஒரு மினி கூகுள் ரீடரே இங்க குறிப்பிட்டிருக்கேன் .. சொல்ப அட்ஜஸ்டு மாடி :)
1.கவிதை, கதை இரண்டும் வெவ்வேறு விஷயம்ன்னு நினைச்சிட்டிருந்த எனக்கு..இரண்டுமே சேர்ந்தே இருப்பது அப்படின்னு விளக்கி,என்ன தமிழ்ல எழுத ஊக்கப்படுத்தின திவ்யா மாஸ்டர்க்கு முதல்ல நன்றி.
2.கவிதைக்கு விளக்கவுரை கேட்ட என்னை கவுஜ எல்லாம் படிக்க வெச்சு , இப்பல்லாம் நானும் எழுத முயற்சி பண்ணும் அளவுக்கு ஊக்கப்படுத்தின "தல" ஜி க்கு அடுத்து நன்றி :)
3.கதையெல்லாம் எப்படி எழுதறதுன்னு எனக்கு "கிராஷ் கோர்ஸ்" எடுத்த ஜாவா பாவலர், உயர்திரு தமிழ் அய்யா கப்பி நிலவருக்கு அடுத்து நன்றி :)
4.இவருக்கு பல விஷயம் தண்ணிபட்ட பாடு போல மிக மிக சுலபா வருது. பேனாவோ இல்ல கீபோர்டுன்னு சொன்னா,தூரிகையோ,கரண்டியோ இவர் சொல்ற பேச்ச அப்படியே கேக்குதாம். யாரு தெரியுதா சதங்கா அண்ணன் தான். அடடே அவர் பத்தி எழுதும் போதே இப்படியெல்லாம் எழுத தோணுதே..நீங்கள்ளாம் அவரோட சமீபத்திய கதை படிக்கனும், கவிதாயினி "ராமலஷ்மி" மேடமும் அவரும் பின்னூட்டத்திலே பேசிக்கறதுக்காகவே நானெல்லாம் கதை படிக்கறேன் :)
5.நச் நச் கவிதை,கதை,ஆன்மீகம்ன்னு எழுதும் கவிநயா அக்கா..அட சொல்ல மறந்திட்டேனே இவங்க பாட்டும் சூப்பர்..சின்ன பொண்ணு வாய்ஸ் மாதிரியே ஸோ சுவீட் :)
சின்ன வயசுல எங்க பாட்டி சாதம் பிசைஞ்சு தரும் போது கடைசி வாய் சாதம் கொடுக்கும்போது "யானை குட்டி போல"ன்னு சொல்வாங்க..அது மாதிரி அஞ்சோட நிறுத்தாம நம்ம மத்த நண்பர்களையும் குறிப்பிடாம இருந்தா எப்படி..ஸோ ஹியர் கோஸ் தி லிஸ்ட் :))
ஆடு புலி ஆட்டத்துல பிஜியா இருக்கும் வெட்டி அண்ணன், கவிதாயினி பிரியா ,கதை+கவிதை+நகைச்சுவை எழுத்தாளர் திவ்யபிரியா,வெட்டிவம்பு விஜய்,எங்க ஊருக்காரரு முகுந்தன்,கவிதாயினி நாணல்,கவிதாயினி ஸ்ரீ, கவிதாயினி கார்த்திகா,கவிதாயினி ராமலஷ்மி மேடம், கவிஞர்கள் சதீஷ், சரவணகுமார்,ஸ்ரீ-ஒற்றை அன்றில், அம்பி அண்ணன், தங்கிலிஷ்லயே எழுதும் கில்ஸ் அண்ணாச்சி,தேண்கிண்ண சூறாவளி மை ஃபரண்டு,ரிலாக்ஸ் ப்ளீஸ் கயல் வருண்,சிங்கைல படிக்கும் துர்கா,ஜி3 அக்கா,தமிழ்மாங்கனி, வழிப்போக்கன்,இவன்,தாரணிபிரியா, தொடுவானம் தீபா,சமீபத்தில அறிமுகமான சுந்தர்,முருக்ஸ் எல்லோருக்குமே இந்த அவார்ட் என் சார்பா கொடுத்து நன்றி சொல்லிக்கரேனுங்கோ!
Sunday, August 31, 2008
Blogging Friends Forever Award
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
ஆஹா, ரம்யா. என்ன சொல்றதுன்னே தெரியல. உச்சி ரொம்பவே குளிர்ந்து போச்சு :) அன்புக்கு மிக மிக நன்றி!
கவிநயா அக்கா அது என் பாக்கியம் :))
ரம்யா,
எப்படி இப்படிலாம் !!!
நீங்க சொல்ற அளவிற்கெல்லாம் ரொம்ப ஞானமும், அறிவும் வேணும் தங்கச்சி. நமக்கு அதெல்லாம் இருக்கானு எங்க தங்கமணிகிட்ட மட்டும் கேட்டுடாதீங்க :)))
நடைமுறை வாழ்வை, மனிதர்களை, சம்பவங்களை, கயாஸ் தியரி எல்லாம் இல்லாமல், இயல்பா கோர்த்து சொல்ல நினைக்கிறேன். அவ்வளவே !!
ஒவ்வொரு பதிவிலும் வந்து, படித்து உற்சாகம் தருவதோடு நில்லாமல், ஒரு உயரம் கொடுத்து பாராட்டு தந்ததது குறித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா.
//அச்சச்சோ புகழ்-ஸ்ரீ//
ஆஹா!
அக்கா அச்சச்சோ அக்காவா!
நல்லாத்தான் இருக்கு!
//சின்ன வயசுல எங்க பாட்டி சாதம் பிசைஞ்சு தரும் போது கடைசி வாய் சாதம் கொடுக்கும்போது "யானை குட்டி போல"ன்னு சொல்வாங்க//
அப்படி சொல்லி சொல்லியே நானும் நல்லா தின்னு தின்னு இப்ப ஒரு குட்டி யானை ஆகிட்டேன் அக்கா! :(
சதங்கா அண்ணே உங்க திறமை சிலது தான் சொல்லிருக்கேன்..
இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தன்னடக்கம் :))
அட ஆயில்யன் அண்ணாச்சி..உங்கள மிஸ் பண்ணிட்டேனே!!
ஆமாங்க ஸ்ரீ க்கு அந்த பேரு பொருந்துது இல்ல..
\\அப்படி சொல்லி சொல்லியே நானும் நல்லா தின்னு தின்னு இப்ப ஒரு குட்டி யானை ஆகிட்டேன் அக்கா! :(
\\
ஹலோ என்ன நீங்க எல்ல இடத்திலேயும் இப்படித்தான் பொய் சொல்வீங்களா??
ஹிம்ம்ம் பெரியவங்க நீங்களே இப்படி சொல்லாமா..என்ன போல சிசிசின்ன்ன்ன் பொண்ணுக்கு நீங்க தானே உதாரணம் ஹிம்ம்ம்ம்..
BTW என்ன சொன்னீங்க..சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?? நல்ல மனசுக்காரருன்னு சொல்லிடுங்க சரியா போயிடும் ;)
உங்கள் நண்பர் லிஸ்ட்டில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. எனக்கும் நண்பர்கள் இருவர் இந்த அவார்டை வழங்கிய போது உங்களைப் போலவேதான் நானும் சொன்னேன், அத்தனை பேரும் எனக்கு நண்பர்கள்தான் என. உங்களை சதங்காவை கவிநயாவைப் பார்த்து இனி கதைகளிலும் கவனம் செலுத்தும் ஆர்வம் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இதுவரை மொத்தமே 5,6 தான் எழுதியிருக்கிறேன். அவற்றையும் சீக்கிரம் வலையேற்றுகிறேன். நன்றி ரம்யா.
ரம்யா பதிவு போட்டதுக்கு நன்றி..!! :))
ராமலஷ்மி மேடம் உங்க கவிதைகள் போலவே உங்கள் கதைகளையும் ஆர்வமுடன் எதிபார்க்கும் ரசிகை நான் :)
ஆமா அதென்ன அச்சச்சோ புகழ்?? ;))
கவிதாயினி ஸ்ரீ-இது யாரு??
\\ Sri said...
ஆமா அதென்ன அச்சச்சோ புகழ்?? ;))
கவிதாயினி ஸ்ரீ-இது யாரு??
\\
அச்சச்சோ அது நீங்க தானுங்கோ :))
/"யானை குட்டி போல"ன்னு சொல்வாங்க..// :D
அவார்ட்குக்கு நன்றி :)
//Ramya Ramani said...
அட ஆயில்யன் அண்ணாச்சி..உங்கள மிஸ் பண்ணிட்டேனே!!
/
பொதுவாழ்க்கைக்கு வந்துட்டாலே இதெல்லாம் சகஜமக்கா!
ஆ...ஆஹா... ஆவார்டாவே கொடுத்திட்டீயா! அபிராமி அபிராமி!!
அதுவும் முத அவார்ட் கொடுத்திருக்கிறீயேமா......நீ இவ்வளவு நல்லவளா:))
நல்லாயிரு தாயீ....நல்லாயிரு!!
ok kindals apart......
அவார்டெல்லாம் கொடுத்து மனசு குளிர வைச்சுட்டீங்க ரம்யா!!
நன்றி நன்றி!!
//BTW என்ன சொன்னீங்க..சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?? நல்ல மனசுக்காரருன்னு சொல்லிடுங்க சரியா போயிடும் ;)//
ஆமாம் அக்கா!
எல்லாருமே என்னிய பத்தி இப்படித்தான் சொல்றாங்க!
போன பிறவியில என்ன புண்ணியம் செஞ்சேனோ?? !!! :)
//ஹலோ என்ன நீங்க எல்ல இடத்திலேயும் இப்படித்தான் பொய் சொல்வீங்களா??//
பொய்ய்யாஆஆஆஆஆஆஅ!
அய்யகோ!!!!!
கண்ணெல்லாம் மறைக்கிதே!
தலை சுத்துதே!
உலகம் எல்லாம் கண்ணுலேர்ந்து மறையுதே!
ஆயில்யா! சோதனைக்களத்திலாடா நீ
//ஹிம்ம்ம் பெரியவங்க நீங்களே இப்படி சொல்லாமா..என்ன போல சிசிசின்ன்ன்ன் பொண்ணுக்கு நீங்க தானே உதாரணம் ஹிம்ம்ம்ம்..//
நன்றியோ நன்றி நொம்ப நன்றி!
நாந்தான் தமிழ்பதிவுலகில் ரொம்ப சின்னபையன் என்னிய பாலோ பண்ணித்தான் இனி வரும் இளைய தலைமுறை இருக்கும்ன்னு எப்பிடி அக்கா இம்புட்டு சிம்பிளா சொல்லிட்டீங்க!
ada Ramya... periya thala aayite pola... awardellam vaangite... :)...
ரொம்ப நன்றி..
:)
"அச்சச்சோ" புகழ் Sri..!!???
கலக்கல்..
:)
//அச்சச்சோ புகழ் ஸ்ரீ.. //
அட இது கூட நல்லா இருக்கே...
இப்படி எல்லார் பேரையும் போட்டு எல்லோருடைய மனசையும் குளிர வச்சிட்டீங்கலே ரம்யா.... :))
ரம்யா…ப்ளாக் உலகத்துல உங்களுக்கு அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா??? ;-)
Thank you so much…
ரொம்ப நன்றி.. ramya ramani
:)
//எங்க ஊருக்காரரு முகுந்தன்//
என்னதான் சொல்லுங்க நம்ம ஊரு தான் டாப்பு
பெரியாளுங்க லிஸ்ட்டுல நானுமா? ஹி ஹி ஹி நன்றிஸ் ஹை.
அவ்வ்வ்...ஆனந்த கண்ணீர்ல என் கண்ணு குளமாயிடுச்சு :))
நன்றி நன்றி!! :))
வாழ்த்துக்கள் ரம்யா.. :)
நன்றி முருக்ஸ் :)
\\ Divya said...
ஆ...ஆஹா... ஆவார்டாவே கொடுத்திட்டீயா! அபிராமி அபிராமி!!
அதுவும் முத அவார்ட் கொடுத்திருக்கிறீயேமா......நீ இவ்வளவு நல்லவளா:))
நல்லாயிரு தாயீ....நல்லாயிரு!!
ok kindals apart......
அவார்டெல்லாம் கொடுத்து மனசு குளிர வைச்சுட்டீங்க ரம்யா!!
நன்றி நன்றி!!
\\
உங்கள் சப்போர்டுக்கு நன்றி திவ்யா மாஸ்டர் :)
\\priyamanaval said...
ada Ramya... periya thala aayite pola... awardellam vaangite... :)...
\\
மேடம் உங்களுக்கும் அதை என் சார்பா கொடுத்திருக்கேன் ..செக் மாடி :)
உங்கள் வருகை,கருத்து அனைத்திற்க்கும் நன்றி ஆயில்யன்,நாணல்,இவன்,திவ்யபிரியா
முகுந்தன்,கப்பி,Sanjai :))
Thankies Ramya :)))
Welcome Geeya :)
Thanks for the Award!
When is the next post?
Post a Comment