பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
வியந்து நிற்க்கும் மஹேஷைக்கண்டு சிரிப்போடு,"என்ன மஹேஷ் அப்படி பாக்கற, என்ன நான் சொன்னது தான் நடக்க போகுதா?"என்றார்
"என்ன பாட்டி இப்படி கேக்கறீங்க அப்ப இது உங்க கெஸ்ஸா??"
"ஆமா இதை கண்டுபிடிக்க CBI ஆபீஸரா வரனும் நான் பாக்காத கல்யாணமா? உத்ரா முகத்துல குழப்பம் இருந்தாலும் அவ உதட்டோரத்துல ஒரு புன்னகை இருந்தது.அவங்க கிளம்பும்போது கவுதமும் உத்ராவும் பரிமாறிக்கிட்ட கண் அசைவும் தான் நான் இப்படிக்கேக்கக் காரணம்"
"யப்பா பாட்டி நீங்க 2 பொண்ணு, 2 பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிருக்கீங்கன்னு ப்ரூவ் பண்றீங்க.ஆனா பாட்டி அப்பா தான் கோவில்ல மீட் பண்ணலாம்னு சொன்னாரே அதுக்குள்ளே இது தேவையான்னு தான் யோசனையா இருக்கு"
"கோவில்ல பேசும்போது அவங்களுக்கு ப்ரைவஸி கிடைக்கும்னு நினைக்கறியா? சாதாரணமா தானே பேசப்போறா எந்த பிரச்சனையும் வராது.உத்ரா நல்ல புத்திசாலி எங்க எப்படி பேசனும்னு தெரியும்."
"மெதுவா பாட்டி கேட்டா அப்படியே உச்சி குளுர்ந்திடும் அவளுக்கு,இப்பவே என்ன பேசறதுன்னு உங்க கிட்ட தான் கேக்க போறாளாம்"
ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்தார் முதியவர்.
சோம்பிவிடிந்த மறுநாள் ஞாயிறன்று, வீட்டில் ஆமைவேகத்தில் வேலைகள் நடந்தன.
சங்கரன் வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது,என்ன தான் அனைவரும் படிப்பு,வேலை என்று இருந்தாலும் சென்ற வாரம் வீட்டில் என்ன நடந்தது,அவர்களின் வெளி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று குடும்பமாக ஞாயிறு சாயந்திரம் பலகாரவேளையில் பேசி அலசுவார்கள்.இது குடும்பத்தில் பினைப்பிற்க்கும்,பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கும் நன்மை பயக்கும் என்பதில் சங்கரன் ரேவதி தம்பதிக்கு திடமான நம்பிக்கை இருந்தது.
அதே போல் அன்றும் அனைவரும் பேச அமர்ந்தும், எல்லோர் மனதிலும் ஒரு யோசனை இருப்பதைப்பாத்த உத்ரா இது தன்னைப்பற்றி தான் என்று முடிவுக்கு வந்தாள். நாமே இதை சரிசெய்யலாம் என்று நினைத்தவளாய் தந்தையிடம் சென்றாள்.
"அப்பா நான் சொல்றத கேட்டு நீங்க கோவப்படகூடாது.பிராமிஸ் பண்ணுங்க"
"என்னமா நான் தேவையில்லாம உங்கள திட்டிருக்கேனா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுடா"என்று அவள் தலையை கோதியவாறே கூறினார்.
"ஹிம்ம் அப்பா இது நேத்து நம்ம வீட்ல நடந்தத பத்தி தான். ஒவ்வொருத்தரும் எதையும் "Presume"பண்ணாம வெளிப்படையா பேசுவோம். நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்.
அவரும் நானும் ஜெனரலா பேசினோம்.வேலை டென்சன்ல சரியா பேச முடியாததுனால போன்ல பேசலாமான்னு கேட்டாரு,நான் தயங்கினதுனால அவர் நம்பர் கொடுத்திருக்காரு பேசச்சொல்லிருக்காரு.ஆனா உங்களுக்கு தெரியாம நான் எதுவுமே செய்து பழக்கம் இல்லாத்தினால உங்ககிட்ட சொல்றேன்.நீங்க என்னப்பா சொல்றீங்க?"
"உத்ரா எனக்கு உன்னப்பார்த்தா பெருமையா இருக்குமா.சரி இதை சொல்லு பேசினத வெச்சு என்ன பீல் பண்றே"
வெட்கத்துடனே"அப்பா அவரு ரொம்ப நல்லா பேசறாரு.அம்மா அப்பா மேல மதிப்பா இருக்காரு.I think he is closely connected to his family"
"உத்ரா நீ ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ இன்னிக்கி பாக்கற கவுதம் வானத்திலேர்ந்து வரலே,அவரை இப்போ இந்த நிலமைக்கு கொண்டு வந்தது அவரோட அம்மா அப்பா தான். நாளைக்கே கல்யாணத்திற்க்கு அப்புறம் அவங்க அம்மாவ 'அம்மா'ன்னு மனசாற கூப்பிடறது உத்தமம்.
அப்பா உன்கிட்ட இப்போ கேக்கறது உன்னோட கனவைப்பத்தி.நமக்கு வரவரு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு உனக்கு எண்ணம் இருக்கலாம்.அதை அவர் மீட் பண்றாரா?" மகளின் தாயகவும்,கணவனின் மனதைப்படித்தவர் போலவும் ரேவதி பேசினார்.
"அம்மா கண்டிப்பா எப்படி அவரு அம்மா மாதிரி வைப் இருக்கனும்னு சொல்றாரோ அதே மாதிரி எனக்கும் வரவரு அப்பா மாதிரி ஆர்கனைஸ்டா,மஹேஷ் மாதிரி என்ன நக்கல் அடிச்சாலும் என் மேல கேரோட இருக்கனும்னு பீல் பண்ணுவேன். இவங்க தானே என்னோட ஹீரோஸ்"
"அப்பா உங்களுக்கும் எனக்கும் இப்போ ஜூரம் தான். தங்கச்சி என்ன போடா ஜீரோன்னு சொல்லாம ஹீரோவாக்கிட்டியே மா.இந்த அண்ணன் எப்படிமா தாங்குவேன் எப்படித் தாங்குவேன்!!"
"மஹேஷ்! ஹிம்ம் சொல்லுமா உன்னோட அப்படிப்பட்ட தேவை எல்லாம் மீட் பண்றாரா?"
"அப்பா என்னால 100% சொல்ல முடியல ஆனா நம்பிக்கை இருக்கு.நான் அவங்க பேமலியோட எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு"
"உத்ரா நீ இவ்ளோ தெளிவா பேசறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி பேசுவீங்களே அது பேரு என்ன?"
"சுவீட் நத்திங்ஸ் பாட்டி" என்று சொல்லி நாக்கை கடித்தாள் உத்ரா.
சிரித்துவிட்டு "ஹிம்ம் அப்போ அவரோட,அப்போ அவரோட,அவர் வீட்டாளுங்களோட விருப்பு வெறுப்பு,இயல்பு எல்லாம் தெரிஞ்சிக்கோ.நாளைக்கே உன்னோட நாத்தனார்,அவங்க பசங்க வீட்டுக்கு வந்தா நீ குறிப்பறிஞ்சு நடக்கறத பாக்கும்போதே அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்" அமைதியாகவும் தெளிவாகவும் விளக்கினார் கமலா பாட்டி.
"உத்ரா அப்பறம் நீ அவருக்கும் அவர் உனக்கும் தான் எல்லாமே.எதாவது மனகசப்பு வந்தாலும் நீ இந்த ஈகோவ மட்டும் வளக்காதே.
இரண்டொருதடவை நீ விட்டு கொடுத்து போனா தானா அவரு உன்னை மதிப்பாரு. உன்னை கேக்காம எதுவும் செய்யவும் யோசிப்பாரு" தன்னுடைய வெற்றிகரமான இல்லற ரகசியத்தை பகிர்ந்தார் ரேவதி.
"அம்மா கலக்கறீங்க விட்டுகொடுக்கறாமாதிரி நீங்க விண் பண்ணுவீங்களா?"
"அப்படி இல்ல மஹேஷ் நாங்க தான் எங்க பிறந்த வீட்டுக்கும்,புகுந்த வீட்டுக்கும் பாலம்.நான் கொடுக்கற பிக்சர்ல தான் உங்க அப்பாவோட மதிப்பே இருக்கு.ஸோ நான் பொறுமையா,விவேகமா,புத்திசாலித்தனமா இருக்கனும் இல்லியா?
உனக்கும் இதே தான். நீ எப்படி உன்னோட மனைவியை ட்ரீட் பண்றியோ அதை வெச்சு தான் மத்தவங்களும் நடப்பாங்க .புரியுதா?"
"அதுவும் சரிதான் உத்ரா உங்க அம்மா சொல்றதையே தான் செய்தா, செய்துகிட்டும் இருக்கா.எனக்கு தெரிஞ்சு நீ உனக்கு உன் கணவர் தரும் முதல் பரிச என்னிக்கும் பத்திரமா வெச்சுக்கோ.உங்க அம்மாவுக்கு நான் முதல்ல வாங்கி கொடுத்த ஹேன்ட் பேக இன்னும் பத்திரமா வெச்சிருக்கா.எனக்கும் அதை நினைக்கும் போது பெருமைதான்" மனைவியின் வெட்கத்தை பார்த்து பெருமை பொங்க கூறினார்.
வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சிரிக்கும் ஓசைக்கு ஏற்றவாறு டெலிபோனும் ஒலிக்க, பேசிவிட்டு வந்த சங்கரன் "அவங்க வீட்லேர்ந்து தான் புதன் கிழமை பெருமாள் கோவில்ல மீட் பண்ணலாமான்னு கேட்டாங்க.நானும் சரின்னு சொல்லிட்டேன்"என்றார்.
"பெண் கிடைச்சாலும் புதன் கிடைக்காதாம்.எல்லாம் நல்லபடியா நடக்கும்"என்ற கமலா பாட்டியின் குரலை கேட்ட உத்ராவிற்க்கு ஒரு கவிதை தோன்றியது .
உன்னை நினைக்கும் போது துடிப்பது
என் இதயமா...?
இல்லையில்லை
என்னுள் இருக்கும் உன் இதயம்!
கிளுக்கி சிரித்தவாறே சென்றவளை பார்த்த நால்வரும் மனதாற அவள் சிறப்புடன் வாழ வாழ்த்தினர்.
(சுபம்)
P.S : என்னுடைய முதல் தொடர்கதையை தொடர்ந்து படித்த,கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி :)